கார் இன்ஸ்சூரன்ஸில் பணத்தை கொட்ட வேண்டாம்... இப்படியொரு சூப்பரான திட்டம் இருக்குறதே பலருக்கு தெரியல!!

கார் இன்ஸ்சூரன்ஸ் (Car Insurance) என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் பணம் புரளும் துறை ஆகும். புதியதாக கார் ஒன்றை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும்போதே அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை வசூலித்துவிடுவர். அந்த இன்ஸ்சூரன்ஸ் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதன்பின் மீண்டும் இன்ஸ்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும். இதுதான் தற்போதைக்கு உள்ள நடைமுறை ஆகும். கார்களை பொறுத்தும், அவற்றிற்கான காப்பீடை வழங்கும் நிறுவனங்களை பொறுத்தும் இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் மாறுப்படும். ஆனால், காரை பயன்படுத்தும் தூரத்தை பொறுத்து அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்தலாம் என சொன்னால் நம்ப முடிகிறது. இதனை சுருக்கமாக PAYD (Pay As You Drive) என அழைக்கின்றனர்.

சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய இன்ஸ்சூரன்ஸ் திட்டமான PAYD -ஐ எஸ்பிஐ ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் (SBI General Insurance), எச்.டி.எஃப்.சி எர்கோ (HDFC ERGO) உள்ளிட்ட வங்கி காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க ஆரம்பித்துள்ளன. இன்னும் சில தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களும் இந்த கார் இன்ஸ்சூரன்ஸை வழங்குகின்றன.

pay as you drive insurance

மேலும், மற்ற இன்ஸ்சூரன்ஸ் திட்டங்களுடன் ஆட்-ஆன் ஆகவும் PAYD-ஐ இணைக்க முடியும். இருப்பினும், இந்த புதிய கார் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை தற்போதைக்கு மிகவும் சில இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். PAYD யாருக்கு ஏற்றதாக இருக்கும் என்று பார்த்தால், அதிகமாக காரை பயன்படுத்தாதவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

தான் அதிகமாக காரை பயன்படுத்துவது இல்லை, ஆனால் மற்றவர்களை போல தானும் அதிக தொகையில் கட்டணத்தை கொண்ட இன்ஸ்சூரன்ஸை வாங்க வேண்டியதாக உள்ளதே என வருத்தப்படுபவர்களுக்காக PAYD உருவாக்கப்பட்டது. கார் எவ்வளவு தொலைவுகளுக்கு இயக்கப்பட்டு உள்ளதோ அதை பொறுத்து இன்சூரன்ஸுக்கான பிரீமியம் அமையும்.

pay as you drive insurance

அதாவது, குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு மட்டுமே (உதாரணத்திற்கு 1 வருடத்திற்கு 2,500கிமீ அல்லது 5,000கிமீ) பயணம் செய்வேன் என உறுதியளித்து PAYD திட்டத்தை தேர்வு செய்தால், அதற்கேற்ப குறைவான இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்த தூரத்தை காட்டிலும் அதிக தொலைவிற்கு பயணம் செய்துவிட்டால், கூடுதலாக பயணம் செய்த தொலைவிற்கு டாப்-அப் செய்துக் கொள்ளலாம்.

இதற்காக சில கருவிகளை கொண்டு கார் எவ்வளவு தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ளது என்கிற விபரங்களை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் பெறுவர். மேலும், காரினுள் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் வழங்கப்படும் ஓடோமீட்டரில் (Odometer) காட்டப்படும் விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பர். இன்ஸ்சூரன்ஸை புதுப்பிக்கும் போது மட்டுமின்றி, ஏதேனும் அசம்பாவிதம் நடந்து கார் இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெறும்போதும், கஸ்டமர் எவ்வளவு தொலைவிற்கான பயணத்தை தேர்வு செய்துள்ளார்? கார் எவ்வளவு தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ளது? என்கிற விபரங்களை எல்லாம் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்தவர்கள் சரிப்பார்ப்பர்.

pay as you drive insurance

மற்றப்படி இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற மற்ற கார் இன்சூரன்ஸ்களில் பின்பற்றப்படும் அதே வழிமுறைகள் தான் PAYD விஷயத்திலும் பின்பற்றுவர். இந்த புதிய இன்ஸ்சூரன்ஸை பயன்படுத்துவர்கள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தை ஏமாற்ற காரின் ஓடோமீட்டரில் மாற்றங்களை செய்யக்கூடும் என்பது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் தெரியும் என்பதால், ஓடோமீட்டரின் விபரங்களை சரியாக, துல்லியமாக பெற முயற்சிப்பர்.

ஆதலால், காரின் ஓடோமீட்டரில் கார் ஓனர் கை வைத்தால் அவர் போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. ஒரு சில கார் ஓனர்கள் தங்களது காரின் விபரங்களை மற்றவர்கள் அறிய விரும்ப மாட்டார்கள் என்பதால், PAYD-ஐ பயன்படுத்த குறைவான கார் ஓனர்களே விரும்பக்கூடும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அதிகமாக கார்களை பயன்படுத்துவோருக்கும் இந்த திட்டம் சரிப்பட்டு வராது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலத்தில் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது. ஆகையால், PAYD திட்டத்தை பயன்படுத்த விரும்பாதவர்கள் அதிக பேர் இருந்தாலும், இந்த திட்டத்தை பயன்படுத்த விரும்புவோரும் கணிசமான எண்ணிக்கையில் இருப்பர் என்கிற நம்பிக்கையில்தான் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகள் இந்த புதிய இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை கையில் எடுத்துள்ளன. அதேநேரம், இந்த திட்டத்தை விரும்பாத இன்ஸ்சூரன்ஸ் கம்பெனிகளும் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 9, 2025, 15:48 [IST]
English summary
Pay as you drive payd car insurance how it works check all details here
மேலும்... #car insurance #insurance policy #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X