ரூ.50,000க்குள் பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றுவது எப்படி?

பெர்ஃபார்மென்ஸ் கார்
அதிக பிக்கப் மற்றும் உறுமல் சப்தத்துடன் சீறும் கார்களை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதேபோன்று நம் காரையும் மாற்றினால் அருமையாக இருக்கும் என சிலருக்கு மனது துடிக்கும். ஆனால், அதற்கு அதிக செலவாகும் என்கிற ரீதியில் திட்டத்தை மனதுக்குள் கிடப்பில் போட்டுவிடுவோம்.

ஏனெனில், கார் கஸ்டமைசேஷன், எஞ்சின் மாடிஃபிகேஷன் போன்றவை அதிக செலவாகும் என்ற எண்ணமே. இதில், நிச்சயம் உண்மை இருக்கிறது. கார் கஸ்டமைசேஷன் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் கார்களாக மாற்றுவதற்கு பணம் ஒரு பொருட்டு கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்து கொண்டே போகலாம்.

இருப்பினும், ரூ.50,000க்குள் காரை எவ்வாறு பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றலாம் என்பதற்கான வழிமுறைகளை காணலாம்.

மாற்றுவதற்கு முன்...

உங்கள் காரில் எஞ்சின் உள்ளிட்ட பாகங்களில் மாற்றங்களை செய்து பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றிவிட்டால் வாரண்டி கிடைக்காது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். காரில் மாறுதல்கள் செய்யும்போது அறிமுகமான அல்லது நம்பிக்கையான கேரேஜில் மட்டுமே மாறுதல்களை செய்ய வேண்டும். பெர்ஃபார்மென்ஸ் என்று வரும்போது மைலேஜையும் மறந்துவிட வேண்டியதுதான்.

என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும்?

பொதுவாக அதிக செலவில் முழுமையான பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றுவதற்கு கார் முழுவதும் பல மாற்றங்கள் செய்யப்படும். எஞ்சினை அதிக பவர் கொண்டதாக மாற்றும்போது அதற்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் சிஸ்டத்திலும் மாறுதல்கள் செய்யப்படும்.இதேபோன்று, சிறப்பான கையாளுமையை கொடுப்பதற்காக சஸ்பென்ஷனிலும் மாறுதல்கள் செய்ய வேண்டியது அவசியம்.

அதேவேளை, எஞ்சினில் சிறிய ட்யூனிங் செய்து பவரை கூட்டும்போது அதிக செலவாகாது. மேலும், பிரேக், சஸ்பென்ஷனில் அதிக மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்காது. குறைந்த செலவில் பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள்...

ஹை-ப்ளோ ஏர் பில்டர்: ரூ.5,000

பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்றுவதற்கு ஓர் எளிமையான வழிதான் இது. கே அண்ட் என் மற்றும் கிரீன் காட்டன் உள்ளிட்ட பிராண்டு ஹை ப்ளோ ஏர் பில்டர்கள் எஞ்சினுக்கு கூடுதல் பவரை கொடுக்கும். இது லேசாக எஞ்சின் பிக்கப்பை அதிகரிக்கும். அதாவது, 5 சதவீதம் வரை காரின் பிக்கம் கூடும்.

ஹை ப்ளோ ஏர் பில்டரை பொருத்தும்போது எஞ்சினுக்குள் அதிக தூசு செல்லும் ஆபத்து இருக்கிறது. மேலும், எஞ்சினில் கார்பன் புகை அதிக அளவில் படியும். எனவே, அடிக்கடி எஞ்சினை சோதித்துக் கொள்வது அவசியமாகும்.

ப்ரீ ப்ளோ புகைபோக்கி குழாய்:(ரூ.15,000)

உறுமல் சப்தத்துடன் பறப்பதற்கு ப்ரீ ப்ளோ புகை போக்கி குழாய் பொருத்தினால் போதும். எஞ்சினில் உற்பத்தியாகும் கார்பன் புகை எந்த அடைப்பும், தடையும் இன்றி வெளியேறுவதால் அந்த உறுமல் சப்தத்தை தரும். ஆனால், ப்ரீ ப்ளோ புகை போக்கி குழாய் பொருத்தும்போது ஒவ்வொரு கார் மாடலுக்கும் வடிவமைப்பு வேறுபடும் என்பதால் கவனம் தேவை. குறிப்பாக, பெட்ரோல் கார்களில் ப்ரீ ப்ளோ புகை போக்கி குழாய்களிலிருந்து வரும் சப்தம் அலாதியாக இருக்கும். சிலர் புகைபோக்கி குழாயில் இருக்கும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரை எடுத்துவிட்டுகூட சுலபமாக உறுமல் சப்தத்தை பெறுவர். கார்பன் எமிசன் பிரச்னை இல்லாத வரை இந்த புகை போக்கி குழாயை பொருத்திக் கொள்ளலாம்.

ஹை ப்ளோ ஏர் பில்டர் மற்றும் இந்த ப்ரீ ப்ளோ புகை போக்கி குழாய் பொருத்துவதன் மூலம் 10 சதவீத கூடுதல் பிக்கப்பை பெற முடியும்.

பிரத்யேக ஸ்பார்க் பிளக்குகள்: ரூ.2,500

பிரத்யேக தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்பார்க் பிளக்குகள் சிறந்த பெர்ஃபார்மென்ஸை கொடுக்கும். சில ஸ்பார்க் பிளக்குகள் பல் திசை பொறி தொழில்நுட்பத்தையும், சிலவை ஒரே திசையில் பொறியை உற்பத்தி செய்யும் அமைப்புடனும் இருக்கும். என்ஜிகே உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த இரிடியம் மற்றும் பிளாட்டின பூச்சுடன் கூடிய இந்த ஸ்பார்க் பிளக் தயாரிப்பில் சிறந்து விளங்குகின்றன. இந்த ஸ்பார்க் பிளக்குகளுக்கு பிளக் கேபிள் மற்றும் கனெக்டர்களும் மாற்ற வேண்டியது அவசியம். இந்த ஸ்பார்க் பிளக்குகள் எஞ்சின் ஸ்மூத்தாக இயங்கவும், அதிக பிக்கப்பை தரும் வகையிலும் இருப்பதோடு கூடுதல் மைலேஜையும் தரும்.

ஆக்டேன் பூஸ்டர்ஸ்: ரூ.200

அதிக பிக்கப்பை பெறுவதற்கு அடுத்த எளிய வழி பெட்ரோலில் ஆக்டேன் பூஸ்டர்களை கலந்து கொள்ளலாம். ஒரு முறை பெட்ரோல் நிரப்பும்போது 250 மில்லி ஆக்டேன் பூஸ்டரையும் சேர்த்து நிரப்பினால் போதுமானது. எஸ்டிபி உள்ளிட்ட பிராண்டுகளின் ஆக்டேன் பூஸ்டர்கள் சந்தையில் கிடைக்கிறது. இல்லையென்றால் அதிக ஆக்டேன் கலந்த சூப்பர் பெட்ரோலை போடுவதும் சிறந்த பிக்கப்பை பெறலாம்.

இசியூ ரீமேப்: ரூ.28,000

எஞ்சின் கன்ட்ரோல் யூனிட் (இசியூ) ரீமேப் என்பது புதிய சாப்ட்வேர். எஞ்சினை கட்டுப்படுத்தும் குறியீடுகள் அடங்கிய இந்த சாப்ட்வேர் மூலம் அதிக பிக்கப்பை எளிதாக பெற முடியும். எரிபொருள் செலுத்துதல், எஞ்சின் டைமிங் ஆகியவற்றில் இந்த இசியூ ரீமேப் சாப்ட்வேர் மூலம் மாறுதல்களை செய்ய முடியும். இதில், பலவிதமான மாறுதல்கள் கொண்ட இசியூ ரீமேப் சாப்ட்வேர்கள் கிடைக்கின்றன. ஆக்சிலரேசன் உச்சாணியை தொடுவதற்கும் மற்றும் சிறந்த டார்க்கை பெறுவதற்கு இது உதவும். பீட்டேஸ் மற்றும் கிர்ரஸ் ஆகிய நிறுவனங்கள் இசியூ ரீமேப் சாப்ட்வேர்களை விற்பனை செய்கி்ன்றன. பெட்ரோல், டீசல் கார்களுக்கு ரீமேப் செய்ய முடியும் என்றாலும் டீசல் கார்களுக்கு இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் 20 சதவீதம் அதிக பிக்கப்பை பெற முடியும்.

டீசல் டியூனிங் பாக்ஸ்(சிப்): ரூ.28,000

இசியூ ரீமேப் போன்று இதுவும் எஞ்சினை கட்டுப்படுத்தும் கருவி. பெட்டேஸ் மற்றும் டீசல்ட்ரோனிக் நிறுவனங்கள் இந்த சாப்ட்வேரை விற்கின்றன. இந்த தொழில்நுட்பம் இசியூ மற்றும் எரிபொருள் செலுத்துதும் சிஸ்டத்துக்கும் இடையில் இணைப்பாக செயல்பட்டு எஞ்சினை கட்டுப்படுத்தும். எஞ்சின் குளிர்ச்சியாக இருந்தாலும் கூட இசியூ யூனிட் கட்டுப்பாடு இல்லாமல் தன்னிச்சையாக எரிபொருளை எஞ்சினுக்கு அதிக அளவில் செலுத்தி காருக்கு உடனடி பிக்கப் தரும். 10 முதல் 15 சதவீதம் கூடுதல் பிக்கப்பை தரும் அதேவேளையில் அதிக கரும்புகையை வெளியேறும் என்பதால் எமிசன் பிரச்னை எழுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

முழுமையாக மாற்றும் வழிகள்:

முற்றிலுமான பெர்ஃபார்மென்ஸ் காராக மாற்ற முடிவு செய்துவிட்டால் அதற்கு அதிக வழிமுறைகள் இருக்கின்றன. பெட்ரோல் கார்களில் நைட்ராக்ஸ் இஞ்செக்ஷன் சிஸ்டம் சிறந்ததாக இருக்கும். டர்போ சார்ஜரை சேர்த்தாலும் பிக்கப் தாறுமாறாக அதிகரிக்கும். டீசல் கார்களுக்கு பெரிய டர்போ மற்றும் இன்டர்கூலர்கள் பொருத்தினால் பிக்கப் அதிகரிக்கும். ஆனால், இதுபோன்று மாறுதல்களை செய்வதற்கு லட்சக்கணக்கில் செலவிட வேண்டும்.

இத்துடன் முடிந்துவிடாது. பவரை அதிகரிக்கும்போது சஸ்பென்ஷன், பிரேக் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் செலவிட வேண்டும். சஸ்பென்ஷனுக்கு 50,000 வரையிலும், பிரேக் சிஸ்டத்துக்கு 50,000 வரையிலும் கொடுத்து மேம்படுத்த வேண்டும். தவிர, கிளட்சை மேம்படுத்துவதோடு, வீல்கள் மற்றும் டயர்களும் மாற்ற வேண்டியிருக்கும். இதற்கு 30,000 வரை செலவாகும்.

ஆனால், குறைந்த செலவில் அதிக பிக்கப் வேண்டுவோர் மேற்கண்டவற்றை செய்து தங்களது காரை பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக மாற்றிக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 29, 2012, 12:49 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+