யூஸ்டு மார்க்கெட்டில் பெட்ரோல் கார் வாங்க இதுவே சரியான தருணம்

மேலும், ஏற்கனவே, மிட்சைஸ் மற்றும் பிரிமியம் ரக பெட்ரோல் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் காரை வந்தவிலைக்கு விற்று விட்டு புதிய டீசல் காரை வாங்குவதில் முனைப்பு காட்டுகின்றனர்.
இதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் கைக்கு எட்டும் விலையில் அருமையான பெட்ரோல் கார்கள் கிடைக்கின்றன. குதிரைக் கொம்பாக இருந்த பெட்ரோல் கார்கள் தற்போது மிக்குறைந்த விலையில் கிடைக்கின்றன.
குறிப்பாக, மிட்சைஸ் பெட்ரோல் கார்களின் விலை மார்க்கெட்டில் 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்திருக்கின்றன. 5 ஆண்டுகள் ஓடிய ஹோண்டா சிவிக் கார் 5 லட்சம் முதல் 6 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது 5 ஆண்டுகள் ஓடிய ஹோண்டா சிவிக் 4 லட்சத்திலேயே கிடைக்கின்றன. இதேபோன்று, மாருதி எஸ்எக்ஸ்-4, ஃபியட் லீனியா, ஃபோர்டு ஃபியஸ்ட்டா, டொயோட்டோ கரோல்லா ஆல்டிஸ் ஆகிய கார்களின் பெட்ரோல் மாடல்களின் விலையும் கடுமையாக சரிந்துவிட்டன.
இதேபோன்று, பிரிமியம் எஸ்யூவி கார்களின் பெட்ரோல் மாடல் விலையும் 40 சதவீதம் அளவுக்கு அதிரடியாக குறைந்துவிட்டன. 7 லட்சத்திற்கு விற்கப்பட்டு வந்த ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவி தற்போது 5 லட்சத்திற்கு கிடைக்கிறது.
பெட்ரோல் விலை, குறைவான மைலேஜ் ஆகியவை பெட்ரோல் கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது. இதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் தற்போது பெட்ரோல் கார்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. எனவே, முடிந்த வரை பேரம் பேசினால்,மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் கார்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், என்ட்ரி லெவல் கார் மார்க்கெட்டில் டீசல் மாடல்கள் இல்லாததால், அந்த மார்க்கெட்டில் பெட்ரோல் கார்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.


Click it and Unblock the Notifications








