பெட்ரோலில் இத்தனை டைப் இருக்குதா? இவ்வளவு நாளா இது தெரியாம இருந்துட்டோமே!
இந்தியாவில் எரிபொருள் என்றாலே பலருக்கும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால் பெட்ரோலிலேயே பல்வேறு வகையான பெட்ரோல்கள் தற்போது இந்தியாவில் பயன்பாட்டிற்கு உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இப்படியான எரிபொருட்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. உங்கள் வாகனத்திற்கு சரியான எரிபொருள் எது என்பதை இங்கே முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் பல்வேறு விதமான வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெட்ரோல் வாகனங்களிலேயே ஒவ்வொரு வாகனத்திற்கு ஒவ்வொரு விதமான பெட்ரோல் என்பது தேவைப்படுகிறது. நீங்கள் பெட்ரோல் வாகனத்தை பயன்படுத்தும் போது உங்கள் வாகனத்திற்கு ஏற்ற பெட்ரோலை பயன்படுத்தினால் தான் உங்கள் வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும். அந்த எரிபொருளுக்கு ஏற்றவாறு தான் உங்கள் வாகனத்தில் இன்ஜின் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

இந்தியாவில் விற்பனையாகும் பெட்ரோல் வகையை ஆக்டேன் ரேட்டிங் மற்றும் அதனுடன் சேர்க்கும் பொருட்களை வைத்து முடிவு செய்கிறார்கள். ரெகுலரான பெட்ரோல் 87 ஆக்டேன் ரேட்டிங் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பெட்ரோல தான் பெரும்பாலும் பெட்ரோல் பங்குகளில் கிடைக்கிறது. நார்மலான கார்களில் இந்த பெட்ரோல் தான் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய மற்றும் மிட் ரேஞ்ச் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களுக்கு இந்த பெட்ரோல் போதுமானது தான்.
91 ஆக்டேன் பெட்ரோல்: பொதுவாக அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட இன்ஜின் களில் 91 ஆக்டேன் பெட்ரோலை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஸ்போர்ட்ஸ் கார்கள், சொகுசு கார்களில் இப்படியான பெட்ரோலை பயன்படுத்துகிறார்கள். இது வாகனத்தின் இன்ஜின் பெர்ஃபார்மென்சை மேம்படுத்துகிறது. மேலும் இன்ஜின் நாக் ஏற்படுவதை தடுக்கிறது. இன்ஜினின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது.

89 ஆக்டேன்: இந்த ரக பெட்ரோல் நார்மல் மற்றும் பிரீமியம் ஆகிய கார்களுக்கு இடைப்பட்ட ரகத்தில் இருக்கும் கார்களுக்காக தயாரிக்கப்படும் பெட்ரோல் ஆகும். இந்த பெட்ரோலை பயன்படுத்தும் போது வாகனத்தின் பெர்ஃபார்மென்ஸ் அதிகரிக்கிறது. அதே நேரம் இந்த பெட்ரோலின் விலையும் குறைவாக இருக்கிறது. பிரீமியம் பெட்ரோலை விட இந்த பெட்ரோல் விலை குறைவாக இருப்பதால் மக்கள் இந்த பெட்ரோலை அதிகம் வாங்க விரும்புகிறார்கள்.
எத்தனால் கலந்த பெட்ரோல்: தற்போது மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் கலப்பை ஊக்கப்படுத்தி வருகிறது. 10 சதவீதமான எத்தனால் கலப்பு தற்போது இந்தியாவில் அதிகமாகியுள்ளது. இது விரைவில் 15 சதவீதமாக சத்தியமாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20% எத்தனால் கலப்பை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முடியும். அதே நேரம், வெளிநாட்டில் இருந்து பெட்ரோலுக்காக பெறப்படும் கச்சா எண்ணையின் அளவும் குறையும் என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. தற்போது இந்தியாவில் 10,15 மற்றும் 85 சதவீதமான எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்து விட்டன.
ஆனால் எத்தனால் கடந்த பெட்ரோல் பழைய வாகனங்களுக்கு பொருத்தமாக இருக்காது. புதிய வாகனங்கள் மட்டுமே எத்தனால் கடந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரும் புதிய கார்கள் எல்லாம் பெரும்பாலும் 20% எத்தனால் கடந்த பெட்ரோலை பயன்படுத்தும் ரக கார்களாகவே உள்ளன.
நீங்கள் சாதாரண காரை வைத்திருந்தால் உங்களுக்கு 87ஆக்டேன் அளவு அல்லது அதற்கும் குறைவான ஆக்டேன் அளவு கொண்ட பெட்ரோலே சரியானது. நீங்கள் அதிக பெர்ஃபார்மென்ஸ் தரும் இன்ஜின் கொண்ட காரை வைத்திருந்தால் உங்களுக்கு 91 ஆக்டேன் கொண்ட பெட்ரோல்கள் தான் பொருத்தமானது. இரண்டுக்கும் மத்திய ரக இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு 89ஆக்டேன் பெட்ரோல் பொருத்தமானது தான். ஆனால் இந்த ரக இன்ஜின் கொண்ட கார்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனத்திற்கான சரியான பெட்ரோலை தேர்வு செய்வது மிக முக்கியமானது. முக்கியமாக உங்கள் வாகனத்திற்கு தகுந்த பெட்ரோல் எது என்பதை உங்கள் வாகன வாங்கும் போது வழங்கப்பட்டுள்ள மேனுவலில் சரி பார்க்கவும். அதில் இது குறித்த சரியான தகவல்கள் இருக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் ஆயுள் அதிகரிக்கும். அதே நேரம் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









