காரில் பவர் விண்டோஸ் இருப்பது நல்லதா? எல்லாரும் வாங்குவதால் நீங்களும் வாங்காதீங்க - கார் வாங்கும்முன் இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க
புதியதாக கார் வாங்கும்போது பவர் ஜன்னல்களை தேர்வு செய்வதா அல்லது மேனுவல் ஜன்னல்களை தேர்வு செய்வதா என்கிற குழப்பம் நம்மில் சிலருக்கு ஏற்படலாம். அத்தகையவர்களுக்காக, பவர் கார் விண்டோஸின் நன்மைகள் மற்றும் தீமைகளை இனி பார்க்கலாம். இன்றைய கால மாடர்ன் கார்களில் பவர் விண்டோஸ் அதிகமாக வழங்கப்படுகின்றன.
அந்த அளவிற்கு, பவர் ஜன்னல்கள் இன்றைய அனைத்து கார்களிலும் பரவலாக உள்ள அம்சம். ஆனால், ஒரு காலத்தில் பிரீமியம் கார்களுக்கு மட்டுமே இந்த அம்சம் பிரத்யேகமாக இருந்தது. மின்சாரம் மூலம் இயங்கும் இத்தகைய ஜன்னல்கள், மேனுவலாக இயக்கப்படும் கிராங்க் ஜன்னல்கள் போல் இல்லாமல், ஒரு பட்டனை அழுத்துவதன் மூலமாக எளிமையாக இயக்கப்படுகின்றன.

பவர் ஜன்னல்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் வருகின்றன. அவை ஓட்டுநர் மற்றும் கார் பயணிகளின் வசதிக்கு கணிசமாக பங்களிக்கின்றன. இதன் காரணமாகவே இன்றைய மாடர்ன் கார்களில் பவர் ஜன்னல் கண்ணாடிகள் கட்டாய அம்சமாக மாறி உள்ளன. பவர் ஜன்னல் கண்ணாடிகளை மேலும் பிரபலமாக்கும் அவற்றின் சில முக்கிய நன்மைகளை இனி பார்க்கலாம்.
பவர் விண்டோக்களின் முதன்மையான மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்க நன்மை, அவை வழங்கும் வசதியும் எளிமையும் ஆகும். உடல் உழைப்பு தேவையில்லை; ஒரு பொத்தானை அழுத்தினாலே, செயல்பட ஆரம்பித்துவிடும். அதுமட்டுமின்றி, பவர் ஜன்னல் கண்ணாடிகளின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், அவற்றை கட்டுப்படுத்த ஒரு பொத்தான் வழங்கப்படுகின்றது.

கார் ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் சவுகரியத்தை வழங்குவது மட்டுமில்லாமல், பவர் ஜன்னல்கள் கூடுதல் பாதுகாப்பையும் கொண்டுவருகின்றன. ஒன்-டச் பவர் விண்டோ சிஸ்டம் மூலம், நீங்கள் அனைத்து ஜன்னல்களையும் உடனடியாக மூடலாம். அவசர சூழ்நிலைகளில் கார் ஜன்னல் கண்ணாடிகளை ஒரே நேரத்தில் திடீரென மூடுவதற்கு இது உதவும்.
பவர் ஜன்னல் கண்ணாடிகளில் இவ்வாறு பல நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போலவே, பவர் விண்டோக்களும் அவற்றின் தீமைகளின் பங்கைக் கொண்டுள்ளன. ஆதலால், புதியதாக கார் வாங்கும்போது அவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அட்வான்ஸான தொழிற்நுட்பத்தை நோக்கி செல்ல செல்ல அவற்றிற்கு செலவிடும் தொகை அதிகமாக இருப்பது மட்டுமின்றி, அவற்றின் பராமரிப்பு செலவும் அதிகமாக இருக்கிறது. பவர் ஜன்னல் கண்ணாடிகளின் முதல் குறைபாடும் அதன் பழுதுபார்க்கும் செலவு ஆகும். பவர் விண்டோ மெக்கானிசம் தோல்வியுற்றால், பாரம்பரிய மேனுவல் விண்டோக்களை சரிசெய்வதை விட பழுதான பாகத்தை மாற்றுதல் மற்றும் பழுதுபார்ப்பு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் பராமரிப்பதற்கு செலவு மிக்கவைகளாக இருப்பது மட்டுமில்லாமல், அவை பெரும்பாலும் மின்சாரத்தை நம்பியே இருக்கும். பவர் ஜன்னல்களின் மற்றொரு தீமையும் அவை காரின் மின் அமைப்பை சார்ந்து இருப்பதாகும். காரின் எலக்ட்ரிக் சர்க்யூட்டில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், அது பவர் விண்டோ சிஸ்டம் செயல்படாமல் போவதற்கு வழிவகுக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒட்டு மொத்தத்தில், பவர் ஜன்னல்கள் ஆட்டோமொபைல் துறையில் ஒரு பெரிய முன்னேற்றமாக நிற்கிறது. அவற்றின் நன்மைகள் பெரும்பாலும் பலருக்கு தீமைகளை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், ஒரு காரை வாங்கும் போது இந்த நன்மை தீமைகளை மனதில் வைத்திருப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த முடிவை எடுப்பதற்கு நிச்சயமாக உதவும்.


Click it and Unblock the Notifications









