ஹேட்ச்பேக் கார்களின் மைலேஜ் ஒப்பீட்டு விபரம்

By Saravana

கார் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியதில், மைலேஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. மாதந்தோறும் சம்பளத்தில் காருக்கான எரிபொருள் செலவீனத்துக்கு குறிப்பிட்ட தொகையை கட்டாயம் ஒதுக்க வேண்டியிருப்பதால், அதிக மைலேஜ் தரும் கார்களை பற்றி தெரிந்து கொண்டு வாங்குவது நல்லது.

அந்த வகையில், இந்தியாவில் விற்பனையாகும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களின் மைலேஜ் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அராய் சான்றுபடி வெளியிடப்பட்ட மைலேஜ் விபரங்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.

ஓட்டுதல் முறை மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவற்றை பொறுத்து இந்த மைலேஜ் விபரங்களுக்கும், நடைமுறையில் கார்கள் தரும் மைலேஜுக்கும் வேறுபாடுகள் இருக்கும். எனவே, கார் வாங்கும்போது அடிப்படையாக இதனை கவனத்தில் கொள்ளலாம். முதலில் பெட்ரோல் கார்களையும், தொடர்ந்து டீசல் கார்களின் மைலேஜ் விபரங்களை வரிசைப்படுத்தியுள்ளதை ஸ்லைடரில் காணலாம்.

 ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ 1.2 லிட்டர் ஃபையர் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 15.2 கிமீ மைலேஜையும், 1.4 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 14.6 கிமீ தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 195 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட இந்த காரின் 1.2 லிட்டர் எஞ்சின் 68 பிஎச்பி பவரையும், 1.4 லிட்டர் பெட்ரோல் மாடல் 90 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 15.6 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 1196சிசி எஞ்சின் 70 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 டாடா விஸ்டா

டாடா விஸ்டா

டாடா இண்டிகா விஸ்டாவின் பெட்ரோல் மாடல் 16.7 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 65 பிஎஸ் பவரை அளிக்கும் திறன் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

போலோவின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜ் தருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 73.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

செவர்லே செயில் யுவா

செவர்லே செயில் யுவா

செயில் யுவா காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காரின் எஞ்சின் 84.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த காரின் எஞ்சின் 1198சிசி பெட்ரோல் எஞ்சின் 74.48 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோவின் 1.2 லிட்டர் எஞ்சின் லிட்டருக்கு 18.4 கிமீ மைலேஜை தருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் எஞ்சின் 89 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.5 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் லிட்டருக்கு 18.6 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

செவர்லே பீட்

செவர்லே பீட்

இந்த கார் லிட்டருக்கு 18.61 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10 கார் அதிகபட்சமாக லிட்டருக்கு 20.03 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்று தெரிவிக்கிறது. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டீசல் கார்களின் மைலேஜ் ஒப்பீட்டு விபரங்கள்.

ஃபோர்டு ஃபிகோ

ஃபோர்டு ஃபிகோ

1.4 லிட்டர் டியூராடார்க் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 20.0 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ டீசல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20

ஹூண்டாய் ஐ20 காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ

ஃபோக்ஸ்வேகன் போலோ டீசல் மாடல் லிட்டருக்கு 22.07 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செயில் யுவா

செயில் யுவா

செயில் யுவா காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

டாடா விஸ்டா

டாடா விஸ்டா

டீசல் மாடல் லிட்டருக்கு 22.3 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 22.9 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ராவின் டீசல் மாடல் லிட்டருக்கு 23.08 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ்

டீசல் ரிட்ஸ் கார் லிட்டருக்கு 23.2 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்டியோஸ் லிவா

எட்டியோஸ் லிவா

டீசல் லிவா லிட்டருக்கு 23.59 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

செவர்லே பீட்

செவர்லே பீட்

செவர்லே பீட்டின் டீசல் மாடல் லிட்டருக்கு 25.44 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைலேஜ் விபரங்களுக்கும் நடைமுறையிலான மைலேஜுக்கும் வித்தியாசம் இருக்கும். வாசகர்கள் நடைமுறையில் தங்களின் கார் மைலேஜ் விபரங்களை கருத்துப் பெட்டியில் பதிவு செய்யவும். இது புதிதாக கார் வாங்க செல்லும் வாசகர்களுக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2013, 13:40 [IST]
English summary
Here you can see the average mileage of several Indian cars as tested by the ARAI. But since these figures only reveal the mileage figures from a standard test. How close are these numbers to the real world numbers? Do tell us the real world mileage you get out your cars. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+