உங்க கார் டயர் பஞ்சராகாம இருக்கனுமா இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க! பிரச்சனையே வராது!
உங்கள் காரில் நீண்ட தூரம் லாங் டிரைவ் செய்கிறீர்களா? நீங்கள் பயணிக்கும் போது நடுவழியில் கார் பஞ்சர் ஆகாமல் இருக்க வேண்டும் என்றால் கீழே சொன்ன சில விஷயங்களை பயணத்திற்கு முன்பாக கடைபிடியுங்கள்.
நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பினால் முதலில் உங்கள் காரை ஒரு தடவை சர்வீஸ் செய்து கொள்ளவேண்டும் அப்பொழுதுதான் கார் பயணத்தின் போது எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும் என்பது எனக்கு நினைப்பீர்கள். ஆனால் இப்படியாக சர்வீஸ் செய்யும் பலர் டயர் பெயர் குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதில்லை.

காரின் டயரில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நீங்கள் பயணம் செய்யும்போது நடுவழியில் காரன் டயர் பஞ்சராகி போகக்கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் உங்கள் பயணம் பாதியில் தடைப்பட வாய்ப்புள்ளது. இதனால் நீண்ட பயணம் செய்ய செல்லும் போது உங்கள் காரின் டயரையும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இப்படியாக நீண்ட பயணத்திற்கு முன்பு கார் டயரில் இதையெல்லாம் செக் செய்ய வேண்டும் என்று தான் இங்கு நாம் விரிவாக காணபோகிறோம்.
ஏர்பிரஷர்: நீங்கள் நீண்ட தூரம் பயணம் செல்கிறீர்கள் என்றால் உங்கள் காரின் அனைத்து வீல்களிலும் சரியான அளவில் ஏர்பிரஷர் இருக்க வேண்டும். இதனால் நீங்கள் சர்வீஸ் விடும் போது காரின் டயரில் உள்ள ஏர்பிரஷரையும் செக் செய்து அனைத்து வீல்களிலும் சரியான அளவு பிரஷர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். டயர்பிரஷர் குறைவாக இருந்தால் காரின் மைலேஜ் பாதிக்கப்படும். அதேநேரம் கார் விரைவில் பஞ்சர் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

நைட்ரஜன் ஏர் பிரஷர்: நீங்கள் சாதாரண காற்றை உங்கள் பெயரில் அடைத்தால் அது நீண்ட தூர பயணத்தின் போது டயர் வெடிக்கக்கூட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு பதிலாக நைட்ரஜன் காற்றே டயர்களில் அடித்தால் அது உங்களுக்கு டயர் வெடிக்கும் வாய்ப்பை குறைக்கும்.
இந்த நைட்ரஜன் ஏர் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் இருக்கும். 100 கிலோமீட்டருக்கு மேல் நீங்கள் தொடர்ந்து பயணிக்க போகிறீர்கள் என்றாலே உங்கள் கார் டயரில் நைட்ரஜன் காற்றில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் அதிக சூடு ஏற்பட்டாலும் டயர் வெடிக்காது.
அதிக லோடு தேவையில்லை: ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவிலான எடையை மட்டுமே சுமந்து செல்லும் திறன் இருக்கும். இப்படியாக உங்கள் வாகனத்தின் திறன் எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் மட்டுமே எடையை காரில் ஏற்றுங்கள். உதாரணமாக நான்கு பேர் பயணம் செய்யும் காரில் ஆறு பேரை ஏற்றினால் கார் அதிக பாரம் தாங்க வேண்டிய சூழ்நிலைக்கி உருவாகும்.
அதிக பாரம் கொண்டு நீண்ட தூரம் பயணித்தால் அது உங்கள் வாகனத்தில் இன்ஜினை பாதிக்கும். அது மட்டுமல்லாமல் உங்கள் வாகனத்தின் டயரையும் பாதிக்கும். இதனால் நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது சரியான அளவிலான எடை மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பயணிக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிக வேகம் தேவையில்லை: காரீல் நீண்ட தூரம் பயணிக்கும் பல விரைவாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக போக வேண்டும் என்ற காரணத்திற்காக காரில் செல்லும் போது அதிக வேகத்தில் பயணிப்பார்கள். இப்படியாக நீண்ட தூரம் செல்லும் போது அதிக வேகத்தில் பயணித்தால் முதலில் உங்கள் காரின் மைலேஜ் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதே நேரம் காரின் டயர்களும் அதிக வேகம் காரணமாக அதிகமாக சூடேறி வெடிக்க கூட வாய்ப்புள்ளது. முக்கியமாக அதிக வேகத்தில் செல்லும்போது அதிகமாக பிரேக் பிடிக்க வேண்டியது வரும். பிரேக் அதிகம் பிடிக்கும் போது காரின் டயர்கள் அதிகம் பாதிக்கப்படும். இதனால் நீங்கள் நிதானமான வேகத்தில் பயணிப்பதே உங்கள் உயிருக்கு பாதுகாப்பானது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் நீண்ட தூரம் பயணம் செய்வது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம்தான். பலர் இதை நீண்ட நாள் கனவாக வைத்து இந்த பயணத்தை மேற்கொள்வார்கள். இப்படியான பயணம் பாதுகாப்பானதாகவும் அதே நேரம் உங்கள் பயண திட்டங்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் பயணத்திற்கு முன்பாக காரின் டயரை செக் செய்ய வேண்டிய அவசியம்.


Click it and Unblock the Notifications








