காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும் நீங்க செய்ய வேண்டிய முதல் வேலை இது தான்!

கார் ஓட்டும்போது ஒருவர் சரியான பொசிஷனில் அமர்ந்து கார் ஓட்டினால் தான் அவருக்கு கார் ஓட்டும்போது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். இப்படியாக சரியான பொசிஷனில் அமர்ந்து கார் ஓட்டுவது என்பது எப்படி என்பதை தான் இங்கு காணப் போகிறோம்.

கார் ஓட்டும்போது நாம் காரின் சீட்டில் அமர்ந்து கார் ஓட்டுவோம் இது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம் தான். ஆனால் சரியான பொசிஷனல் அமர்ந்து கார் ஓட்டுகிறோமா? இந்த கேள்விக்கு பலரிடம் நிச்சயம் விடை இருக்காது. சரியான பொசிஷன் என்றால் என்ன?

car sitting posture

இதைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது முன் சரியான பொசிஷனில் இல்லாமல் அமர்ந்து கார் ஓட்டுவதால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை முதலில் பார்ப்போம். இது சரியான சொகுசு, பாதுகாப்பு நீண்ட தூர பயணம், முதுகு மற்றும் கழுத்து வலி இல்லாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் சரியான பொசிஷனில் அமர்ந்து கார் ஓட்டுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் ஆகும்.

சரி இல்லாத பொசிஷனில் கார் ஓட்டினால் உங்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதோடு, மயக்கம், விபத்து ஏற்படும்போது அதிக காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு, கழுத்து வலி மற்றும் முதுகு வலி, உடல் வலி உள்ளிட்ட ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படும். சரி சரியான பொசிஷனில் இருந்து கார் ஓட்டுவது எப்படி என காணலாம்.

car sitting posture

சீட்டை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்: பொதுவாக சீட்டின் பொசிஷன் என்பது ஒவ்வொரு நபரின் உயரத்துக்கும் உடல் அமைப்பிற்கும் தகுந்தாற்போல் மாறுபடும். அதனால் நீங்கள் காரில் ஏறி அமர்ந்தவுடன் முதலில் உங்கள் சீட்டை தான் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். உங்களுக்கு தகுந்தாற்போல் சீட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் சீட்டில் அமர்ந்திருக்கும் போது உங்கள் முதுகுப் பகுதி லேசாக சாய்ந்த படி பின்பக்கம் உள்ள ரெஸ்ட்டில் சாய்ந்து இருக்க வேண்டும். கால் பகுதி ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் கிளட்ச் ஆகியவற்றை முழுமையாக அழுத்தும் அளவில் வசதியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

car sitting posture

ஸ்டேரிங் வீல் பொசிஷன்: ஸ்டியரிங் வீலிங் பொசிஷனும் ஒவ்வொரு தனி நபருக்கும் மாறுப்படும். இதில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், நிச்சயம் சிறிய சிறிய மாற்றங்கள் இருக்கும். இதை சரியான பொசிஷனில் வைத்துக் கொண்டால் கார் ஓட்டும்போது உங்களுக்கு இந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

நீங்கள் காரின் சீட்டில் அமர்ந்து கொண்டு ஸ்டியரிங் விலை பிடிக்கும் போது உங்களின் கைமுட்டி பகுதி லேசாக பெண்ட் ஆன நிலையில் இருக்க வேண்டும். அதுதான் சரியான பொசிஷன் ஆகும் அதேநேரம் உங்கள் தோள்பட்டையை ரிலாக்ஸ் ஆகவும் உங்கள் முதுகுப் பகுதியை சாய்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றார் போல் ஸ்டேரிங் வீல் பொசிஷனை மாற்றிக் கொள்ளுங்கள்.

கார் சீட்டின் உயரம்: சில உயர்ரக கார்களில் கார் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும். அதை வைத்து நீங்கள் காரின் சீட் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் காரின் சீட்டில் அமர்ந்திருக்கும் போது உங்களுக்கு ரோடு நல்ல வியூ கிடைக்க வேண்டும். அதே நேரம் உங்கள் காலுக்கு ஆக்சிலரேட்டர், பிரேக், கிளட்ச் எல்லாம் சரியாக எட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஹெட் ரெஸ்ட் அட்ஜஸ்ட்மென்ட்: சில உயர்ரக வாகனங்களில் டிரைவர் சீட்டிற்கு மேலே ஹெட் ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷன் இருக்கும். இப்படியான ஹெட்ரெஸ்ட் உங்கள் தலைக்கு வசதியாக இருக்கும் படி அட்ஜஸ்ட் செய்து கொள்வது சிறந்தது. இதனால் கழுத்து வலி வருவது குறையும். அதே நேரம் சடன் பிரேக் பிடிக்கும்போதோ அல்லது விபத்து நிகழும்போதோ ஏற்படும் ஆபத்துகளும் குறையும்.

கவனமாக இருங்கள்: நீங்கள் காரில் பயணிக்கும் போது உங்கள் உடலுக்கு ஏற்றவாறு எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை எப்பொழுதும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு அசௌகரியம் இருக்கும்படி இருந்தால் எந்த விதத்தில் அசெளகரியம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதை உடனடியாக சரி செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு பெரிய பிரச்சனை எதுவும் வராமல் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களை எல்லாம் பார்க்கும்போது இது சாதாரண சின்னச் சின்ன டிப்ஸ்கள் போல உங்களுக்கு தோன்றலாம். இதனால் என்ன ஆகிவிடப் போகிறது எனவும் தோன்றலாம். ஆனால் நாளடைவில் தவறான பொசிஷனில் கார் ஓட்ட பழகிவிட்டால் அது உங்களுக்கு உடல் வலிகள் மற்றும் தசை பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, October 20, 2023, 20:25 [IST]
English summary
Proper posture for driver when driving car tips and tricks
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X