மீண்டும் மழை வரப்போகுது! உங்க கார்ல உடனே இதை பண்ணுங்க, இல்லேன்னா பர்ஸ் காலியாகிடும்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் சிக்கி வருகின்றனர். இப்படியாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வாகனங்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. கடந்த 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த மழை வெள்ளத்தில் காஸ்ட்லியான கார்களான போர்ஷே, மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கார்கள் கூட பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இப்பொழுது நாம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வருவதற்கான எச்சரிக்கையை பெற்றுள்ள நிலையில், இந்த மழை வெள்ளத்தில் இருந்து நம் காரை பாதுகாப்பது எப்படி என்ற விவரங்களை தான் காணப் போகிறோம்.

பொதுவாக மழை நேரங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கக்கூடும். இப்படியான தண்ணீர் தேங்கி இருக்கும் சாலைகளில் முடிந்த அளவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருந்தால் அந்த பகுதியில் ஆபத்து நிறைந்திருப்பதாக அர்த்தம். அதனால் அந்த பகுதி வழியாக காரை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.
வேறு வழி இல்லை காரை எடுத்துச் செல்ல தான் வேண்டுமென்றால் முடிந்த அளவுக்கு மெதுவாக செல்ல வேண்டும். முதல் கியரிலேயே ஓட்ட வேண்டும். அப்பொழுதுதான் கார் தண்ணீருக்கு அடியில் இருக்கும் சகதியில் சிக்கினாலும் உடனடியாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் மீண்டு வெளியே வரும்.

இப்படியாக தண்ணீருக்குள் தேங்கி இருக்கும் சாலை நீங்கள் அடிக்கடி சென்று வரும் சாலையாக இருந்தால் உங்களுக்கு அந்த சாலை இப்படியான அமைப்பில் இருக்கிறது என்ற ஒரு புரிதல் இருக்கும். அதன்படி சாலையில் மேடான பகுதி எங்கே இருக்கிறதோ அந்த பகுதி வழியாக வாகனத்தை கொண்டு செல்வது ஓரளவுக்கு வாகனத்தில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வாய்ப்பு இருக்கிறது. பள்ளமாக இருக்கும் பகுதிக்கு வாகனம் சென்றால் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படும்.
அதிகமாக தண்ணீர் இருக்கும் பகுதிக்குள் உங்கள் கார் சென்று சிக்கிவிட்டால், நீங்கள் காரை ஸ்டார்ட் செய்வதை தவிர்க்க வேண்டும். காரை அப்படியே விட்டுவிட்டு உங்களை பாதுகாக்கும் முயற்சியில் தான் இறங்க வேண்டும். முடிந்த அளவுக்கு கார் கதவை திறக்காமல் கண்ணாடி வழியாக காருக்கு மேலே ஏற முடியுமா என பாருங்கள். தண்ணீர் அளவு அதிகரித்தால் காருக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு இருக்கிறது.

மழை வருவதற்கு முன்னரே தற்போதைய எச்சரிக்கை வந்துள்ளதால் முடிந்த அளவுக்கு உங்க காரை தண்ணீர் அதிகம் வராத பகுதி அல்லது மேடான பகுதியில் பார்க் செய்வது நல்லது. இதனால் மழை வெள்ளம் உங்கள் வாகனத்தை பாதிக்காமல் பாதுகாக்க முடியும். இதேபோல பார்க் செய்யும் போது காரின் அனைத்து கண்ணாடிகளையும் ஏற்றி காரை மூடி வைத்து விடுவது நல்லது. இதனால் காருக்குள் தண்ணீர் புகுந்து செல்லும் அபாயம் வெகுவாக குறையும்.
காருக்குள் இருக்கும் பேட்டரி தான் உங்கள் காருக்கு எமனாக இந்த நேரத்தில் அமையும். அதனால் முடிந்த அளவுக்கு பேட்டரியை தனியாக கழட்டி வைத்து விடுங்கள். இதை செய்தாலே பெரிய அளவிலான பாதிப்புகள் நமக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும். அதையும் மீறி காருக்குள் தண்ணீர் ஏறிவிட்டால் மீண்டும் தண்ணீர் வடிந்த பின்பு காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.
காரில் எந்த பகுதி எல்லாம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு கைதேர்ந்த மெக்கானிக்கை அழைத்து செக் செய்து கொள்ளுங்கள். அவர் முழுமையாக செக் செய்து முடித்த பின்பே காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யுங்கள். பெரும்பாலும் டிஸ்க் பிரேக் உள்ள கார்களில் டிஸ்க் பேடுகளை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கும்.
காருக்குள் இருக்கும் உட்புற கட்டமைப்பு தண்ணீர் காருக்குள் புகுந்தால் சேதம் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் தண்ணீர் காருக்கு தண்ணீர் புகுந்துள்ளதா என்பதை செக் செய்துவிட்டு அப்படி புகுந்திருந்தால் அதை சுத்தப்படுத்திவிட்டு பின்னர் காரை பயன்படுத்துங்கள். இதனால் வாகனத்தின் உட்பகுதி அதிகமாக சேதமாக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் உங்கள் காரை தற்போதைய பாதுகாத்துக் கொள்வது நல்லது இல்லையென்றால் உங்கள் கார் முழுமையாக சேதமாக வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் முறையாக நீங்கள் செய்தாலே உங்களது பெரும் நஷ்டத்தை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









