பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் அடைந்து வரும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நாளுக்கு நாள் வாகனங்கள் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய மாடல் வாகனங்களை அறுமுகப்படுத்துவதில் காட்டி வந்த வேகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

பல்வேறு புதிய மாடல் வாகனங்களின் காரணமாக பலர் தங்கள் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குகின்றனர். இதனால் பயன்படுத்திய வாகனங்களுக்கான மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

பயன்படுத்திய கார்களின் விலையும் குறைவாக இருப்பதால் பைக்குகளின் போய்கொண்டிருந்த பலரும் இன்று பயன்படுத்தி கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

இங்கே பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதில் உள்ள நன்மைகளையும் அதனால் அந்த வாகனத்தை வாங்குபவர்கள் அடையும் லாபத்தையும் பற்றி நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம் அவற்றை பாார்க்கலாம் வாருங்கள்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

பணம் மிச்சம்

நீங்கள் புதிதாக கார் வாங்குவதை விட குறைவாக பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதால் உங்களுக்கு பெரும் அளவு பணம் மிச்சப்படும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

உதாரணமாக நீங்கள் டில்லியில் மாருதி சுசூகி ஸிப்ட் எல்எக்ஸ்ஐ காரை வாங்குவதாக இருந்தால் ஆன் ரோடு விலை சுமார் 5.28 லட்சம் வரை செலவாகும். அதுவே சுமார் 1 ஆண்டு பயன்படுத்தப்பட்டு சுமார் 12,000 கி.மீ. வரை ஓடிய கார் என்றால் டீலர்கள் மூலம் 4,15 லட்சத்திற்கும் நேரடியா விற்பனையாளரை அனுகினால் 3.85 லட்சத்திற்கும் கிடைக்கும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

இதன் மூலம் நீங்கள் சுமார் 1.5 லட்சம் வரை சேமிக்க முடியும். அதேபோல் உங்களது பட்ஜெட்டிற்கு தகுந்த புதிய காரை வாங்குவதை விட பழைய கார் வாங்க நீங்க முடிவு செய்தால் அதே விலையில் அதை விட அதிக வசதிகளும், அம்சங்களும் பொருந்திய கார்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

டென்ஷன் இல்லாத டிரைவ்

நீங்கள் புதிதாக கார் வாங்கினால் அதை கொண்டு இடைஞ்சல்களான பகுதியில் செல்லக்கூடாது. வேகமாக ஓட்டக்கூடாது மற்றவர்கள் ஸ்க்ராட்ச் போடுவதில் இருந்து காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை நீங்கள் பார்க்க வேண்டும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

புதிதாக வாங்கிய கார் இன்ஜின் ஏற்கனவே செட்டாகி இருக்கும். அதனால் நீங்கள் காரை வாங்கியுடனேயே வேகமாகவும், அதிக தூரம் பயணமும் செய்ய முடியும். உங்கள் கார் புதிய கார் போன்ற தோற்றத்தில் இல்லாததால் மற்றவர்கள் ஸ்காராட்ச் போட்டு விடுவார்களோ என்ற பயமும் இருக்காது.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

உத்திரவாதம் அளிக்கப்பட்ட கார்கள்

முன்பு போல பயன்படுத்திய வாகனங்களை வாங்குவது இன்று அவ்வளவு கடினம் அல்ல. பயன்படுத்திய கார்களை விற்கும் பல நம்பகமான நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களிடம் நீங்கள் வாங்கும் கார்களுக்கு சில உத்தரவாதமும் அவர்கள் அளிக்கின்றனர். இதனால் காரை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

தேய்மானம் குறையும்.

புதிய வாகனங்கள் பயன்படுத்த துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளில் தான் அதிக தேய்மானத்தை பெரும் அடுத்து தேய்மானத்தின் அளவு குறைந்து விடும். நீங்கள் புதிய கார்களை வாங்கினால் அதிக தேய்மானத்தை சந்திக்க வேண்டியதுவரும். பயன்படுத்திய காரை வாங்கும் போது பெரும்பாலான தேய்மானங்கள் நிழந்திருக்கும். அதனால் நீங்கள் வாங்கிய பின் தேய்மானம் ஆவது குறையும்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

இன்சூரன்ஸ் செலவு குறைவு

புதிய கார்களை காட்டிலும் பழைய கார்களை வாங்கினால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை குறைவாக இருக்கும். உதாரணமாக நீங்கள் புதிய காரை வாங்கும் போது உங்களுக்கு ரூ 18 ஆயிரம் இன்சூரன்ஸ் தொகையாக வசூலிக்கப்பட்டால் அதே காரை பயன்படுத்திய காராக வாங்கும் போது உங்களுக்கான இன்சூரன்ஸ் என்பது ரூ 11 ஆயிரமாக மட்டுமே இருக்கும் இதனால் நீங்கள் ரூ 6 ஆயிரம் வரை மிச்சம் செய்யலாம்.

பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதால் கிடைக்கும் லாபங்கள் என்ன தெரியுமா?

நீங்கள் புதிய வாகனம் வாங்க முடிவு செய்திருந்தால் அதே விலையில் பழைய வாகனங்கள் எதுவும் நல்ல கண்டிஷன்களுடன் கிடைக்கிறதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள் புதிய வாகனம் மீது உள்ள மோகத்தில் நல்ல டீலில் கிடைக்கும் பழைய வாகனத்தை நீங்கள் இழக்க நேரிடும்.

Most Read Articles

மேலும்... #எப்படி #how to
English summary
Reasons Why You Should Buy a Used Car. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X