ரோட்டில் வில்லனாக மாற வேண்டாமே!

By Super
Road Rage
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அலுவலகத்திற்கோ வீட்டிற்கோ செல்லும்போது வாகனத்தில் வேகத்தை காண்பிப்பது பலருக்கு பழகிவிட்டது. வேகம் விவேகமானதல்ல என்பதை யாரும் யோசிப்பதில்லை.

சிக்னல்களில் முண்டியடித்துக்கொண்டு செல்லும்போது முன்னாள் செல்லும்போது வாகனத்தின் மீது பலர் உரசிக்கொண்டும்,இடித்துத் தள்ளிக் கொண்டும் செல்வது அன்றாட நிகழ்வுகளி்ல் ஒன்று. இதனால், பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

இதுபோன்று வேகமாக செல்லும்போது அடுத்தவர்களுடன் ஏற்படும் வாய்த்தகராறு சில சமயம் அடிதடி வரைகூட சென்று விடுகிறது. சாலை விதிகளை மதிக்காமல் செல்லும்போது, நமக்கு மட்டுமல்ல அடுத்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்வதில்லை.

சாலையில் செல்லும்போது சில வழிமுறைகளை கடைபிடித்தால்,தேவையற்ற பிரச்சினைகளையும், இழப்புகளையும நிச்சயம் தவிர்க்க முடியும்.

- வேகமாக வண்டியை ஓட்டுவதற்கு மிக முக்கிய காரணமே, கால தாமதம்தான். எனவே, எங்கு சென்றாலும் முன்கூட்டியே கிளம்புவதற்கு பழகி கொள்ளுங்கள். இதனால் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் தேவையற்ற பதட்டத்தை தவிர்க்கலாம்.

- நெருக்கடியான சாலைகளில் செல்லும்போது தவறுதலாக பிற வாகனங்களுடன் உரசிவிட்டால், 'சாரி' சொல்ல தயங்க வேண்டாம்.இதனால்,நாம் பெரிதாக எதையும் இழந்து விட போவதில்லை.

- சிறு பிரச்சினைகளை பெரிதுபடுத்தி பிறருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அது உங்கள் நேரத்தையும்,வேலைகளையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- சில சமயங்களில் விபத்துக்கள் நிகழும்போது,விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முற்படுங்கள். அதைவிட்டு விட்டு விபத்தை ஏற்படுத்திய வரை வாய்க்கு வந்தபடி திட்டி தீர்ப்பதில் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

- சாலைகளில் ஒருவர் உங்களை முந்திச்செல்ல முயன்றால்,அவருக்கு வழிவிடுங்கள்.அதைவிட்டு, அவரை முந்தி செல்ல ஆக்சிலேட்டரை கையை முறுக்கிக்கொண்டு திருக வேண்டாம். அவரை முந்தி சென்றவுடன் உங்களுக்கு மோட்டோ ஜிபி பந்தயத்தில் வெற்றி பெற்றதற்கான பதக்கம் கிடைக்கப் போவதில்லை.

- வாகனத்தில் வெளியில் புறப்படும்போது எதையும் மறக்காதீர்கள்,ஈகோவை தவிர. ஆம், ஈகோவை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வெளியில் கிளம்புங்கள். ரோட் ரேஜ் என்று கூறப்படும் சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக சீறிப்பாய்வதற்கு ஈகோவும் ஒரு முக்கிய காரணம்.

- சாலைகளில் செல்லும்போது முழு கவனத்தையும் வாகனம் ஓட்டுவதில் செலுத்துங்கள்.

- அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதே;வீ்ட்டு கரண்ட் பில் கட்ட மறந்துவிட்டோமே என்பதை பற்றியெல்லாம் யோசித்துக்கொண்ட செல்வதை தவிர்த்து விடுங்கள்.

- இவை எல்லாவற்றையும் விட உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் மிக முக்கியமானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.இவற்றை கடைபிடித்தால் சாலைகளில் நீங்கள் வில்லனாக மாறமாட்டீர்கள், அசல் ஹீரோ நீங்கள்தான்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 5, 2011, 12:55 [IST]
English summary
All vehicles compete for space on potholed chennai city roads,cases of road rage too are on the rise. There is few remedies to avoid road rage.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+