கார் கதவுல கீழ் பகுதியில் மட்டும் துரு பிடிக்கிறதா? இந்த சின்ன ஓட்டை தான் இதுக்கெல்லாம் காரணம்!
நீண்ட நாட்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களில் கதவின் கீழ் பகுதியில் மட்டும் துருப்பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். இப்படியாக மற்ற பகுதியில் எல்லாம் துருப்பிடிக்காமல் கதவின் கீழ் பகுதியில் மட்டும் துருப்பிடிப்பதற்கான காரணம் என்ன? இதுவும் குறிப்பாக பழைய கார்களில் மட்டும் இப்படியான பிரச்சினைகள் ஏன் ஏற்படுகிறது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
நீண்ட நாட்களாக வாகனங்களை பயன்படுத்தி வருபவர்களுக்கு வாகனம் துருப்பிடிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. வாகனம் துருப்பிடித்தால் அந்த பாகத்தை உடனடியாக சரி செய்யாமல் விட்டால் அந்த பாகமே மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு மாறிவிடும். அந்த அளவுக்கு வாகனத்திற்கு மிக மோசமான விளைவுகளை துரு ஏற்படுத்தி விடும்.

நீண்ட நாட்களாக கார்களை பயன்படுத்தி வரும் நபர்களுக்கு வாகனத்தின் கதவின் கீழ் பகுதியில் துருப்பிடிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும். இது மட்டுமல்லாமல் வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் இருக்கும் கண்ணாடி பகுதியை ஒட்டி உள்ள பாடி பகுதியிலும் துரு பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
இப்படியாக மற்ற பகுதியில் எல்லாம் துருப்பிடிக்காமல் இந்த பகுதியில் மட்டும் துருப்பிடிப்பதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. நாம் வாகனம் ஓட்டும்போது அடிக்கடி மழையில் வாகனம் ஓட்டி செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அல்லது மழை பெய்யும் நேரத்தில் மழையிலேயே வாகனத்தை பார்க் செய்ய வேண்டிய சூழ்நிலையும் இருக்கும்.காரை அவ்வப்போது வாட்டர் வாஷ் செய்வோம்.

இப்படியாக கார் மீது விழும் தண்ணீர் பக்கவாட்டு கண்ணாடி வழியாக வழிந்து கண்ணாடிக்கும் பாடிக்கும் இடையே இருக்கும் ரப்பர் பகுதி வழியாக இருக்கும் சிறிய துளை வழியாக கதவுக்குள் சென்று விடும். பொதுவாக இப்படியாக செல்லும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக கதவின் கீழ் பகுதியில் சிறிய ஓட்டை ஒன்று இருக்கும். அந்த ஓட்டை வழியாக தண்ணீர் வெளியேறிவிடும்.
ஆனால் நீண்ட நாட்களாக வாகனத்தை பயன்படுத்தும் போது இந்த ஓட்டையில் ஏதாவது தூசு அல்லது சகதி போய் அடைத்து இருந்தால், அந்த தண்ணீர் வெளியேற முடியாமல் கதவிலேயே தேங்கி நிற்கும். இப்படியான சூழ்நிலைகளில் தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி இருக்கும் போது அந்த பகுதியில் இருக்கும் இரும்பு பகுதியில் துருப்பிடிக்க வைத்து விடும்.

புதிய கார்களில் இந்த ஓட்டை வழியாக தண்ணீர் வெளியேறி விடுவதால் சீக்கிரம் துரு பிடிக்காது. ஆனால் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வரும் வாகனங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் முக்கியமாக இந்த ஓட்டையில் இருக்கும் அடைப்பு எடுக்கப்படாமல் இருந்தால் நிச்சயம் துருப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த துரு கார் கதவின் வெளிப்பகுதியில் மட்டுமல்லாமல் உட்பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக துருப்பிடித்து அது அதிகரித்துவிட்டால் கதவையே மாற்ற வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். இதனால் நீண்ட நாட்களாக வாகனங்களை பயன்படுத்திக் கொள்பவர்கள் பழைய வாகனங்களை பயன்படுத்தி வருபவர்கள். கார் கதவின் அடியில் தண்ணீர் வெளியேறுவதற்கான ஓட்டை சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.
முறையாக பராமரிப்பு செய்தால் இந்த மாதிரியான துருப்பிடிப்பது ஏற்படாமல் இருக்கும். வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடி பகுதியில் இப்படியாக சத்தம் வரக்கூடாது என ரப்பர் கொடுத்து இருப்பார்கள். அது ஒரு வேலை தண்ணீரை வெளியே விடாமல் உள்ளே தேக்கி வைத்து விட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம். என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் பயன்படுத்தும் பலர் அதை சரியாக பராமரிக்காமல் இப்படியான பிரச்சினைகள் சிக்கி விடுகிறார்கள். ஒரு வாகனம் வாங்கும் போது எதையெல்லாம் பராமரிக்க வேண்டும் என முதலில் தெரிந்து கொண்டு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பலருக்கும் இப்படியாக கதவில் இருக்கும் ஓட்டை குறித்த தகவல் எதுவும் தெரியாமல் இருக்கும். இனி நீங்கள் வாகனத்தில் இந்த பகுதியையும் செக் செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









