கார் டிஸ்க் பிரேக் துரு பிடித்தால் இது தான் அர்த்தமா? இதை யாரும் உங்ககிட்ட சொல்ல மாட்டாங்க!
நீண்ட நாட்களாக காரை பயன்படுத்தி வரும் பலர் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அவர்கள் காரின் வீலில் உள்ள டிஸ்க் பிரேக்கில் அதிகாலை நேரத்தில் எழுந்து பார்க்கும் போது துருப்பிடித்தது போன்ற படர்வு இருக்கும். பலருக்கு இது குறித்த விபரம் தெரியாமல் இருக்கும்.
இது எப்படி ஏற்படுகிறது? ஏன் ஏற்படுகிறது? இதனால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என அவர்கள் குழம்பிப் போய் இருப்பார்கள். ஆனால் பயன்படுத்த பயன்படுத்த துரு மறைந்து போய்விடும். இதனால் உண்மையில் என்ன பிரச்சனை இருக்கிறது. இது ஏன் ஏற்படுகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள பிரேக் பேடும் ரோட்டார்களும், ஸ்டீல் உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகள் ஆகும். இதனால் இது தண்ணீர் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றுடன் தொடர்பு ஏற்படுத்தும் போது துரு போன்ற விஷயம் ஏற்படும். நேரடியாக தண்ணீர் பட்டாலோ மழை தண்ணீர் பட்டாலோ அல்லது குளிர்காலத்தில் ஏற்படும் பனியால் நீர் துளிகள் அதன் மேல் படர்ந்தாலோ இப்படியான துரு பிடிக்க நேரிடும்.
பழைய நாள்பட்ட கார்களில் என் பராமரிப்பு குறைவு காரணமாக இப்படியான துரு ஏற்படலாம். புதிய கார்களில் இது போன்ற துரு ஏற்பட வாய்ப்பு இல்லை. இந்த துரு என்பது பெரும்பாலும் டிஸ்க் பிரேக்கில் உள்ள ரோட்டார் பகுதியில் தான் அதிகம் ஏற்படும். இதுதான் வெளிப்புறத்தில் அதிகமான அளவு காண்டாக்ட் உடன் இருக்கும் கருவியாகும். இந்த துரு என்பது ரோட்டாரின் மேல் புறம் மட்டுமே ஏற்படும்.

குறிப்பாக நீண்ட நாட்களாக வாகனம் ஓட்டாமல் இருக்கும் வாகனங்களில் இப்படியான துரு ஏற்படுவது என்பது சாதாரண ஒரு விஷயமாக இருக்கிறது. இப்படியாக பிரேக்கில் துன்படிப்பது என்பது பிரேக் இருக்கும் வாகனத்தின் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் இருக்கும் பிரச்சினை ஏற்படுத்துமா என்று கேட்டால் அவன் நிச்சயம் பிரச்சினையை ஏற்படுத்தும். முதலில் இப்படியாக துருப்பிடித்த டிஸ்க் பிரேக்கை கொண்ட வாகனங்களில் நீங்கள் பிரேக் பிடிக்கும்போது அதிகமான சத்தம் ஏற்படும்.
இப்படியாக துருப்பிடிக்க பட்ட பிரேக்குகளை நீண்ட நாட்கள் கவனிக்காமல் வந்தால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும். சில நேரம் இந்த துரு காரணமாக பிரேக் மொத்தமாக வீட்டிலிருந்து கழண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளன. இப்படியாக துருப்பிடித்து விட்டால் அந்த பிரேக்கை ரிப்பேர் செய்வது என்பது முட்டாள்தனமான காரியமாக இருக்கும். இதை ரிப்பேர் செய்ய முடியாது முழுமையாக மாற்றம் மட்டுமே முடியும்.

இப்படியாக ரோட்டாரில் முழுமையாக துருப்பிடித்து விட்டால் அது தனது ஸ்மூத்தான தன்மையை இழந்து விடும். இதனால் வாகனத்தின் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸ் என்பது பாதிக்கப்படும் ஸ்மூத்தாக இருக்கும் போது சிறப்பாக இருந்த பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸ் துருப்பிடித்த பின்பு மிக குறைவான பெர்ஃபார்மென்ஸ்சையே காட்டும். இதனால் முழுமையாக ரோட்டாரை மாற்றி விடுவது நல்லது.
இப்படியாக டிஸ்க் பிரேக்கில் உள்ள ரோட்டாரில்துரு பிடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் முதலிலேயே நல்ல தரமான பிரேக்கிங் பேடுகளை தேர்வு செய்ய வேண்டும். தரமான பிரேக்கிங் பேடுகள் நீண்ட காலத்திற்கு இதுபோன்ற பிடிக்கும் தன்மை மாறாமல் உழைக்கும். குறிப்பாக குளிர்காலங்களில் தான் இது போன்ற துரு என்பது பிடிக்கும்.
புதிய கார்களில் இதுபோன்று டிஸ்க் பிரேக் பொருத்தப்படும் போது அது துருப்பிடிக்காத அளவிற்கு அதன் மேல் கெமிக்கல் கோட்டிங் என்பது போடப்பட்டிருக்கும் அதனால் இது சில ஆண்டு காலம் வரை துரு பிடிக்காமல் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் அந்த கோட்டிங் என்பது தனது பலத்தை இழந்து விடும். இதனால் துருப்பிடிக்க துவங்கிவிடும்.
இது டிஸ்க் பிரேக் மட்டுமல்லாமல் டிரம் பிரேக்கில் கூட இப்படியான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் அதை அவ்வப்போது சரி செய்து செக் செய்து கொள்வது நல்லது. முறையான பராமரிப்பு இருந்தால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து சுலபமாக தப்பிக்க முடியும். உங்கள் வாகனத்தை முறையாக பராமரிப்பதன் மூலம் இதை தவிர்க்கலாம். உங்கள் வாகனத்தில் இது போன்ற துருப்பிடித்த பிரேக் இருந்தால் உடனே அதை மாற்றி விடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனத்தை நீங்கள் முறையாக பராமரித்தால் மட்டுமே இது போன்ற துருப்பிடிக்கும் பிரச்சினைகள் எல்லாம் ஏற்படாமல் இருக்கும். குறிப்பாக பிரேக் போட்டார்கள் இதுபோன்ற துருப்பிடித்தால் அது நிச்சயம் வாகனத்தின் பிரேக்கிங் பெர்ஃபார்மென்ஸை பாதிக்கும் இதனால் உங்கள் வாகனம் விபத்தில் சேர்க்க கூட வாய்ப்பு இருக்கிறது. இப்படியான பிரச்சனையை கண்டறிந்தால் உடனடியாக அதை சரி செய்து விடுங்கள்


Click it and Unblock the Notifications









