யாரையும் நம்ப முடியாது... தனியாக டிராவல் என்றால் இதை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!

நாகரீகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம் என மார்தட்டிக் கொண்டாலும், ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், துன்புறுத்தல்களும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ஒரு கார் டாக்ஸியை பிடித்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது எவ்வளவு எளிதான செயல்முறை. ஆனால், இதுவே ஒரு இளம்பெண் கார் டாக்ஸியை புக் செய்வதில் இருந்து, செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேருவதற்குள் அவரது மனதில் பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன. ஆகையால், கார் டாக்ஸி, ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்றவற்றில் பயணம் செய்யும்போது பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கார் டாக்ஸி நிறுவனத்தை சரிப்பார்க்கவும்: கேப் சர்வீஸை வழங்கும் நிறுவனங்களை பற்றி கூகுளில் ஒரு சிறிய அலசல் செய்து பார்ப்பது நல்லது. லோக்கல் கேப் சர்வீஸை பயன்படுத்தாமல், முடிந்தவரையில் பெரிய நெட்வொர்க்கை கொண்ட சர்வீஸை தேர்வு செய்யவும். காருக்குள் அமர்வதற்கு முன், உங்களை அழைத்து செல்ல வரும் கார் டாக்ஸியின் பதிவெண்ணை கேப் சர்வீஸ் நிறுவனத்தின் வெப்சைட்/ செயலியில் சரிப்பார்க்கவும்.

tips while taking cab alone

டிரைவரை சரிப்பார்க்கவும்: காரின் பதிவெண் சரி என்றான பின் காருக்குள் அமர்வதற்கு முன்னர் டிரைவரை சரிப்பார்க்கவும். இன்றைய கால கேப் சர்வீஸ் நிறுவனங்கள் டிரைவரின் முழு விபரங்களை புகைப்படத்துடன் வெளியிடுகின்றன. அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் டிரைவராக வந்துள்ளாரா என்பதை சரிப்பார்ப்பது முக்கியமான ஒன்றாகும். அவரால் வர முடியவில்லை... ஆதலால் நான் வந்துள்ளேன் என வேறு நபர் இருந்தால் உடனே கேப்-ஐ கேன்சல் செய்துவிடுங்கள்.

விபரங்களை பறிமாறுதல்: காருக்குள் அமர்ந்த பின், ஒடிபி மற்றும் செல்ல வேண்டிய இடத்தை தவிர்த்து வேறெந்த விபரங்களையும் டிரைவருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். தினந்தோறும் உங்களை அழைத்து செல்லும் நபராக இருந்தாலும், தனிப்பட்ட விபரங்களை பகிர வேண்டாம். அதேபோல், காருக்குள் அமர்ந்திருக்கும்போது மொபைல் போனில் பேசும்போதும் கவனம் தேவை.

tips while taking cab alone

எப்போதும் மொபைல் போன் கையில் இருக்கட்டும்: தனியாக டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிக்கும்போது உங்களுக்கு உறுதுணை உங்களது மொபைல் போன் மட்டுமே என்பதை மறவாதீர்கள். கார் டாக்ஸியின் மீதும், டிரைவரின் மீதும் அதிக சந்தேகம் இருப்பின், போனில் வீடியோ எடுத்தப்படி கூட பயணிக்கலாம். ஆதலால், இவ்வாறான பயணம் மேற்கொள்ள உள்ளீர்கள் எனில், அதற்கு முன்னதாகவே போனில் சார்ஜ் நிரப்பிக் கொள்ளுங்கள்.

மேப்-ஐ பயன்படுத்தவும்: நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறீர்களா என்பதை தெரிந்துக் கொள்ள கூகுள் மேப்பை பயணம் முழுவதும் ஆனில் வைத்து இருக்கவும். கேப் சர்வீஸ் நிறுவனங்களும் அவற்றின் மொபைல் செயலிகளில் வரைப்படத்தை வழங்குகின்றன. அதனை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது.

tips while taking cab alone

குறுக்கு வழி தேவையில்லை: விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக வேறு வழிகளில் அல்லது குறுக்கு வழிகளில் செல்ல டிரைவரிடம் கூற வேண்டாம். ஒருவேளை டிரைவர் தானாக வேறு வழியில் சென்றால் உடனே அதுகுறித்து அவரிடம் வினாவவும். அவர் சரியான பதில் அளிக்காத பட்சத்தில் உடனே காரை நிறுத்த சொல்லி கீழே இறங்கிவிடவும் அல்லது போனில் தெரிந்தவர்களிடம் அதுகுறித்து தெரிவிப்பது நல்லது.

மிகுந்த கவனத்துடன் இருக்கவும்: பெண்கள் மட்டுமல்லாமல், எவரொருவரும் இவ்வாறு தனியாக பயணிக்கும்போது மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். பயணம் முழுவதும் கவனமாக இருப்பதால், தன்னையும், உடைமைகளையும் பாதுகாப்பதுடன், கூடுதல் கட்டணங்களில் சிக்காமலும் தவிர்க்கலாம். தெரியாத இடங்களுக்கு முதல்முறையாக செல்லும்போதும் இன்னும் கூடுதல் விழிப்பு அவசியம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உண்மையில் கண்டிக்கத்தக்கது. நம் சுதந்திர இந்தியாவில் பெண்கள் நிறைய விஷயங்களில் முன்னேற்றம் கண்டுவிட்டார்கள் என்றாலும், பொது போக்குவரத்து சேவையை கூட பெண்களால் பாதுகாப்பாக மேற்கொள்ள முடிவதில்லை எனும்போது அது ஏற்கக்கூடியது அல்ல. ஏற்கனவே கூறியதுதான், இந்த டிப்ஸ்கள் பெண்களுக்கு மட்டுமின்றி, தனியாக பயணம் செய்யும் அனைவருக்குமானது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 15, 2024, 8:00 [IST]
English summary
Safety tips to follow while taking a cab or auto rickshaw alone
மேலும்... #car tips #tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X