உப்பு தண்ணீரை வைத்து காரை கழுவினால் இவ்வளவு பிரச்சனை வருமா? இது தெரியாம போச்சே!

தண்ணீரை வைத்து காரை கழுவினால் காரின் மதிப்பு குறைந்துவிடும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உப்பு தண்ணீருக்கும் காரின் மதிப்பிற்கும் இடையே மிகப்பெரிய அளவுக்கு ஒரு சம்பந்தம் இருக்கிறது. பலருக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. பலர் இன்றும் உப்பு தண்ணீரிலேயே காரை கழுவி வருகின்றனர். ஏன் உப்பு தண்ணீரில் காரை கழுவ கூடாது என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

நீங்கள் வசிக்கும் வீட்டில் நிலத்தடி நீர் அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறதா? அல்லது உங்கள் வீட்டில் உப்பு தண்ணீர் மட்டுமே அதிகமாக புழக்கத்தில் இருக்கிறதா? நல்ல தண்ணீரை நீங்கள் புழங்கவில்லையா? உங்களிடம் கார் இருக்கிறது என்றால் அந்த காருக்கு சீக்கிரம் வயசாகிவிடும். என்ன காருக்கு வயசாகுமா? என நீங்கள் கேட்பது புரிகிறது. வயசாகிவிடும் என்றால் கார் தனது மதிப்பை சீக்கிரமே குறைந்துவிடும் என அர்த்தம்.

salt water car wash

ஏனென்றால் நீங்கள் வாகனத்தை பராமரிக்கும் போது பெரும்பாலும் உப்பு தண்ணீரை பயன்படுத்தியே வாகனத்தை சுத்தப்படுத்துவீர்கள். இப்படியாக வாகனத்தை சுத்தப்படுத்த உப்பு தண்ணீரை பயன்படுத்தினால் அது உங்கள் காருக்கு பல்வேறு வகையில் தீங்குகளை ஏற்படுத்தும். என்னென்ன விஷயங்கள் எல்லாம் உப்பு தண்ணீரை பயன்படுத்துவதன் மூலம் பிரச்சனையாகும் என்ற விபரத்தை காணலாம் வாருங்கள்.

பெயிண்ட் பாதிப்பு: நீங்கள் காரை கழுவும் போது அது தண்ணீரில் இருக்கும் உப்பு தன்மை காரில் உள்ள பெயிண்டை பாதிக்கும். சில நேரம் பெயிண்ட்களில் கிராக்குகளை ஏற்படுத்தி விடும். அதன் கலரை மங்க செய்துவிடும், பளபளப்பு தன்மை உப்பு தண்ணீரால் குறையும் நிலை ஏற்படும். அதேநேரம் காரை நல்ல தண்ணீரில் கழுவினால் அல்லது உப்பு தன்மை குறைவாக உள்ள தண்ணீரில் கழுவினால் இந்த பிரச்சனைகள் எல்லாம் வராமல் தடுக்க முடியும்.

salt water car wash

துருப்பிடிக்கும் தன்மை: உப்பு தண்ணீரை பயன்படுத்தி காரை கழுவினால் காரின் வெளிப்புறப் பகுதியில் ஈஸியாக துருப்பிடிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடும். இந்த உப்பு தண்ணீர் காரின் பாடி பகுதியை பலம் இழக்க செய்து விடும். இதனால் காரின் மதிப்பும் குறைந்து விடும். உப்பு தண்ணீர் துருப்பிடிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும். நல்ல தண்ணீரை பயன்படுத்தினால் இந்த பிரச்சனை வர அதிக காலம் எடுத்துக் கொள்ளும்.

எலெக்ட்ரானிக் பாகங்கள் சேதமாகும்: உப்பு தண்ணீரை பயன்படுத்தி நாம் வாகனத்தை கழுவும் போது அந்த தண்ணீர் தெரியாமல் காரின் எலெக்ட்ரானிக் பாகங்கள் மீது பட்டால் அந்த தண்ணீரில் உள்ள உப்பு தன்மை அந்த எலக்ட்ரானிக் பாகத்தில் ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தி விடும்.

salt water car wash

இதனால் அந்த எலெக்ட்ரானிக் பாகம் பாதிக்கப்படும். நல்ல தண்ணீரில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்காது. நல்ல தண்ணீர் பட்டால் அந்த தண்ணீர் காய்ந்த பின்பு அந்த எலெக்ட்ரானிக் பாகத்தை ஆன் செய்தால் இந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கும். இது உப்பு தண்ணீரை பயன்படுத்துவால் ஏற்படும் அதிக செலவு கொண்ட பிரச்சனையாகும்.

ரப்பர்களுக்கு பாதிப்பு வரும்: வாகனங்களில் பாடி பேனலை விட ரப்பர் பகுதி தான் மிக முக்கியமான பகுதியாக இருக்கும். இதுதான் வாகனத்திற்கு உள்ளே தண்ணீர் வராமல் தடுக்கும். கதவு பகுதியை சுற்றியுள்ள ரப்பர் மற்றும் கண்ணாடிகளை சுற்றியுள்ள ரப்பர் பகுதி உப்பு தண்ணியால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ரப்பரின் ஆயுள் குறையும். குறிப்பாக வெடிப்பு, விட்டுப் போதல் மற்றும் பலத்தை இழத்தல் போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

எப்படி இதை தவிர்ப்பது?: இதை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் வாகனத்தை கழவும் போது உப்பு தண்ணீரை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக நல்ல தண்ணீரில் வாகனத்தை கழுவினால் இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் வராது. மேலும் உப்பு தண்ணீரை பயன்படுத்தியவுடன் அந்த தண்ணீர் காரின் மேல் பகுதியில் எங்கும் இல்லாதவாறு அதை சுத்தமாக துடைத்து விட வேண்டும் அப்படி துடைத்து விட்டால் இந்த பாதிப்புகளை குறைக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனத்தின் மதிப்பு என்பது நீங்கள் அதை எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை வைத்தே இருக்கிறது. வாகனத்தை தொடர்ந்து நன்கு பராமரித்தால் அதன் மதிப்பு மெதுவாக தான் குறையும். இதனால் நீண்ட நாட்களுக்குப் பிறகும் இந்த வாகனத்தை நீங்கள் விற்க முயன்றால் நல்ல ரேட் கிடைக்கும். ஆனால் உப்பு தண்ணீரை தொடர்ந்து பயன்படுத்தி கழுவி வந்தால் வாகனத்தின் மதிப்பு வேகமாக குறைந்து விடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 15, 2023, 17:26 [IST]
English summary
Salt water car wash effects on resale value why to avoid
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X