யூஸ்டு மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கும் கார்கள் மற்றும் விலை விபரம்

Hyundai Santro
நடுத்தர வர்க்கத்தின் கார் கனவை நிறைவேற்றுவதில் யூஸ்டு கார் மார்க்கெட் பெரும் பங்கு வகிக்கிறது. தற்போது கார் தயாரிப்பு நிறுவனங்களே யூஸ்டு கார்களை வாங்கி விற்பதால் அதிக நம்பிக்கையுடன் கார் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பைனான்ஸ் வசதி, ஆவணங்கள் சரிபார்த்தல், இன்ஸ்யூரன்ஸ், கார் சர்வீஸ் என சகல வசதிகளும் ஒரே குடையின் கீழ் கிடைப்பதால் யூஸ்டு கார்களை தற்போது பயமின்றி வாங்கும் நிலையை கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

இந்த நிலையில், அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் குறித்து பிரபல யூஸ்டு கார் நிறுவனம் கொடுத்த தகவலில் சான்ட்ரோ கார்தான் விற்பனையில் முன்னிலை(இந்த நிறுவனத்தின் விற்பனையின்படி) வகிப்பதாக கூறுகின்றனர்.

இதில், 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான சான்ட்ரோ கார்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஸ்விப்ட்டுக்குத்தான் டிமான்ட். இருந்தாலும், டிமான்ட் இருக்கும் அளவுக்கு ஸ்விப்ட் விற்பனைக்கு வருவதில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, ஹோண்டா சிட்டியின் இரண்டாம் தலைமுறை கார்களுக்கு அதிக மவுசு இருக்கிறதாம். அதாவது 2004-05ம் ஆண்டு டால்பின் மாடல் ஹோண்டா சிட்டி கார்கள் தற்போது ரூ.3.5 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சொகுசு யூஸ்டு கார்களில் 2002-03ம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் விலையில் விற்பனையாவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், கடந்த 8 மாதங்களில் பெட்ரோல் கார் வாங்குபவர்களைவிட டீசல் கார்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நினைத்து பாராத அளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர். அதேவேளை, யூஸ்டு கார் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் டீசல் கார்களின் எண்ணிக்கை குறைவு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களது டீலர்களில் விற்பனையாகம் கார்களில் 60 சதவீதம் அளவுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஓடிய கார்கள் எனவும், 3 ஆண்டுகளுக்கு குறைவான மாடல்களின் விற்பனை 20 சதவீதம் அளவுக்கே இருப்பதாகவும் அவர்களின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

எங்களிடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் 30 கார்களில் 25 கார்கள் 5 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கார்கள் என்றும் அவர்கள் கூடுதல் புள்ளிவிபரத்தை தருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, March 30, 2012, 15:11 [IST]
English summary
As we all know Santro is best selling car from Hyundai India. Its not only the best selling model in new car market, its also the selling model in used car market too. According to the market reports, cars such as Santro, City, various cars from Mercedes Benz are best selling models used car market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+