மாடு மாதிரி உழைக்கும்... ஸ்கூட்டர் தானே என்று நிறைய பேர் இதை கவனிப்பது இல்லை!!

பைக்குகளின் எளிய வடிவமைப்பு தான் ஸ்கூட்டர்கள் ஆகும். நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளில் பயணிப்பதற்கு ஸ்கூட்டர்கள் மிகவும் ஏற்றவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே இந்தோனிஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களின் பயன்பாட்டை அதிகம் காண முடியும். இந்தியாவிலும், 2-வீலர் வாங்கும் இரண்டில் ஒருவர் ஸ்கூட்டரை தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கடந்த பல வருடங்களாக அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது.

ஒவ்வொரு மாதத்திலும் 1.5 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் அசால்ட்டாக ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. டிவிஎஸ், சுஸுகி போன்ற நிறுவனங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்கூட்டர்களை எளிதாக யார் வேண்டுமானாலும் ஓட்டுவதற்கு காரணம், அவற்றின் எளிமையான சிஸ்டம் ஆகும்.

scooter maintenance tips for engine

ஆனால், பைக்குகளில் செல்வதை போல் தொலைத்தூரத்திற்கு, அதிக வேகத்தில் ஸ்கூட்டர்களில் செல்ல முடிவதில்லை. சிஸ்டம் எளிமையானதாக, சிம்பிளாக உள்ளதால் பிரச்சனைகளும், பழுதுகளும் குறைவாகவே ஏற்படுகின்றன. அந்த குறைந்த பராமரிப்பு செலவை கூட எதிர்கொள்ள விரும்பாதவர்கள் நாங்கள் கூறும் இந்த 5 விஷயங்களை பின்பற்றி பார்க்கவும்.

அவ்வப்போது சர்வீஸ்: ஸ்கூட்டரையும் அவ்வப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதே நம்மில் நிறைய பேருக்கு தெரிவதில்லை. தெரிந்தவர்களும் ஸ்கூட்டர் தானே என அஜாக்கிரதையாக மறந்துவிடுகின்றனர். ஆனால் உங்களது ஸ்கூட்டர் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்க வேண்டும் என்றால், ஸ்கூட்டரை உருவாக்கிய நிறுவனம் கூறிய பரிந்துரையின்படி குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கட்டாயமாக சிறந்த பணியாளர்களால் சர்வீஸ் செய்ய வேண்டும்.

என்ஜின் ஆயிலை செக் செய்யவும்: எந்தவொரு வாகனத்தின் மென்மையான இயக்கத்திற்கு அதனுள் ஊற்றப்படும் என்ஜின் ஆயில் முக்கியமானது ஆகும். 2-வீலர்களில் என்ஜின் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆகவே, ஸ்கூட்டரில் என்ஜின் ஆயில் போதுமான அளவிற்கு உள்ளதா என்பதையும், பயன்படுத்தும் ஆயில் தூசி, மண்துகள்கள் கலக்காமல் நல்ல தரத்தில் உள்ளதா என்பதையும் அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள்.

scooter maintenance tips for engine

சரியான என்ஜின் ஆயில்: ஸ்கூட்டருகான என்ஜின் ஆயிலை பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றுள் சரியான மற்றும் தரமானதை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு ஸ்கூட்டருக்கு ஒவ்வொரு விதமான கிரேடில் என்ஜின் ஆயில் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் சந்தேகம் இருந்தால் ஸ்கூட்டரை வாங்கிய டீலர்ஷிப் ஷோரூமிலோ அல்லது நன்கு பழக்கப்பட்ட பைக் மெக்கானிக்கிடமோ கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.

ஏர் ஃபில்டரை மாற்றவும்: ஸ்கூட்டரின் என்ஜினிற்குள் ஆயில் எந்த அளவிற்கு தரமானதாக இருக்க வேண்டியது முக்கியமோ அதேபோல் காற்றும் சுத்திகரிக்கப்பட்டதாக இருப்பதும் முக்கியமாகும். தூசி, மண்துகள்கள் கலந்த காற்றினால் என்ஜின் பெரிய அளவில் சேதாரம் அடைவதற்கு வாய்ப்புள்ளது. இப்போது வரும் மாடர்ன் ஸ்கூட்டர்களில் ஏர் ஃபில்டர்கள் எளிதாக மாற்றக்கூடியவைகளாக வழங்கப்படுகின்றன.

என்ஜினை வெப்பப்படுத்தவும்: நீண்ட நாட்களுக்கு ஸ்கூட்டரை எடுக்கவில்லை எனில், பயன்படுத்துவதற்கு 2- 5 நிமிடங்களுக்கு முன்னர் என்ஜினை மட்டும் ஸ்டார்ட் செய்து நன்றாக ஓடவிடவும். இது என்ஜினை வெப்பத்தி, என்ஜின் ஆயிலை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லும். குறிப்பாக, பனிகாலங்களில் இந்த முறையை அடிக்கடி செய்வது நல்லது. இந்த ஒரு சின்ன விஷயம் உங்களை பெரிய செலவில் இருந்து காப்பாற்றும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார், பைக் அளவிற்கு ஸ்கூட்டரை நம்மில் நிறைய பேர் கவனித்துக் கொள்வதில்லை. ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் கட்டமைப்பு எளிமையானதாக இருந்தாலும், அவற்றையும் முறையாக பராமரிப்பது முக்கியமாகும். ஏனெனில், பைக்கில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அதனுடன் பைக்கை ஓட்ட முடியும். ஆனால், ஸ்கூட்டரில் சிறிய பிரச்சனை கூட அதனை முழுவதுமாக ஓரங்கட்ட வைத்துவிடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 12:52 [IST]
English summary
Scooter maintenance tips for long time engine run check all details here
மேலும்... #scooter #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+