யூஸ்டு காரை ஆன்லைனில் விற்க சில எளிய வழிமுறைகள்

புதிய கார் வாங்குவதற்கோ அல்லது பிற காரணங்களுக்காக பயன்படுத்திய காரை விற்பனை செய்யும்போது பல இடையூறுகளை சந்திக்க நேரிடுகிறது. முறையாக பராமரித்த நமது காரை புரோக்கரிடமோ அல்லது யூஸ்டு கார் டீலரிடமோ கொண்டு செல்லும்போது சிலர் படிக்கு பாதி கேட்பார்கள். இதனால், நாம் விரக்தி அடைய நேரிடலாம்.

இதை தவிர்த்து உங்களது எதிர்பார்ப்புக்கு தக்க சரியான விலைக்கு உங்களது பயன்படுத்திய காரை ஆன்லைனில் விற்பதே சிறந்ததாக இருக்கும். ஏனெனில், உங்களது காரை வாங்குபவரே நேரிடையாக தொடர்பு கொள்ளும் வசதி இருப்பதால் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுக்க வேண்டி இருக்காது.

இருப்பினும், ஆன்லைனில் கார் விற்பனை செய்ய திட்டமிட்டால் சில வழிமுறைகளை கடைபிடித்தால் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக விற்பனை செய்ய முடியும். இதற்கான சில வழிமுறைகள் கீழே காணலாம்.

Used car selling tips

விலை நிர்ணயம்:

பயன்படுத்திய கார் வாங்க வருபவர்களுக்கு விலைதான் முக்கிய காரணியாக பார்க்கின்றனர். எனவே, உங்களது காரில் இருக்கும் வசதிகளை பொறுத்தும், கார் தயாரிப்பாளர், வாங்கப்பட்ட வருடத்தை அடிப்படையாக கொண்டும் விலை நிர்ணயம் செய்யுங்கள். மேலும், ஆன்லைனிலேயே பயன்படுத்திய கார்களின் வருடத்தை அடிப்படையாக கொண்டு விலை தெரிவிக்கும் கால்குலேட்டர்கள் இருக்கின்றன. அதையும் பயன்படுத்தி உங்கள் காரில் இருக்கும் வசதிகளை சேர்த்து விலையை நிர்ணயிக்கவும்.

புகைப்படங்கள்:

வாங்குபவர்களை கவர்வதற்கு புகைப்படங்கள் மிக முக்கியம். எனவே, துல்லியமான, சரியான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்துங்கள். சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை விளம்பரத்தில் கொடுங்கள். வெளிப்புறத்தை தவிர, உட்புறத்தையும் உங்களது விளம்பரத்தில் இடுங்கள். வாடிக்கையாளரை சட்டென்று கவர இது ஏதுவாக இருக்கும்.

விபரங்கள்:

வாங்குபவர்கள் காரை பற்றி விரிவான விபரங்களை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். அதற்காக, ரொம்பவும் விரிவாக எழுத முடியாது. எனவே, தயாரிக்கப்பட்ட ஆண்டு, எஞ்சின், நிறம், பராமரிப்பு குறித்த விபரங்கள், ஏசி, மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை குறிப்பிடுங்கள். இதன்மூலம், வாங்குபவரை எளிதாக கவர முடியும். மேலும், விற்பனை செய்வதற்கான காரணத்தையும் தவறாமல் குறிப்பிடுங்கள். விலை பேரம் குறித்து உங்களது எண்ணத்தையும் பளிச்சென்று சொல்லி விடுங்கள்.

விளம்பரம்:

உங்கள் காரை ஆன்லைனில் விற்பனை செய்ய விளம்பரம் செய்யும்போது உங்களது தொடர்பு மொபைல்எண் அல்லது இ-மெயில் முகவரியை தெரிவிப்பதோடு, எந்த நேரத்தில் நீங்கள் ஓய்வாக இருப்பீர்கள் என்பதையும் மறவாமல் தெரிவியுங்கள். மேலும், காரை நேரில் பார்க்க வருவதற்கான நேரத்தையும் விளம்பரத்தில் தெரியப்படுத்துங்கள்.

விளம்பரத்தை அடிக்கடி சோதியுங்கள்:

விளம்பரம் செய்தவுடன் அதை தினமும் சோதிப்பது அவசியம். சிலர் நீங்கள் குறிப்பிட்ட விலையை சரியானதாக கருதி உடனே வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்து இருப்பர். இல்லாவிடில் உங்களது இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொண்டிருப்பர். எனவே, நல்ல விலை கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்தவரை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்புதான்.

மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து உங்களது பயன்படுத்திய காரை ஆன்லைனில் விற்பனை செய்யுங்கள். இருந்த இடத்திலிருந்தே செலவில்லாமல் உங்களது காரை ஆன்லைன் மூலம் விற்பது பணத்திற்கு மட்டுமல்ல, உங்களது பொன்னான நேரத்தையும், வீண் அலைச்சலையும் தவிர்க்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 11, 2012, 12:14 [IST]
English summary
Buying a new car involves lot of research. Buyers visit official websites of carmakers as well as sites such as drivespark.com. While online research before buying a new car is a norm in some places, even people planning to buy used cars now use the internet extensively to find a right car. Now if you are someone looking to sell your used car online, here are some useful tips to help you sell your used car online.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+