கார்ல இத்தனை சென்சார் இருக்குமா? இதெல்லாம் எதுக்கு யூஸ் ஆகும் தெரியுமா?
இந்தியாவில் தற்போது விற்பனையாகும் கார்களில் பெரும்பாலும் சென்சார்கள் உள்ளன. வாகனங்களில் தற்போது பல்வேறு விதமான சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இது வாகனத்தின் பாதுகாப்பு, ஓட்டுநருக்கு வசதி உள்ளிட்ட பல அம்சங்களை வழங்குகிறது. இப்படியாக இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் உள்ள சென்சார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அடாஸ்
இந்தியாவில் புதிய கார்களில் தற்போது அடாஸ் தொழிற்நுட்பம் அதிகமாக பொருத்தப்படுகிறது.இந்த அடாஸ் தொழிற்நுட்பத்திற்கு பல்வேறு சென்சார்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சென்சார்களை வைத்து கார்கள் விபத்து நடக்கப்போவதை முன்னரே உணர்ந்து அதை தடுக்கும் வகையில் செயல்படும்.

இந்த தொழிற்நுட்பத்தில் வாகனத்தின் முன்பக்க சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். கார் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலில் செல்லும் போது முன்பக்கம் உள்ள வாகனம் நிறுத்தினால் ஓட்டுநர் பிரேக் பிடிக்காவிட்டாலும் இந்த சென்சாரில் உள்ள தகவலை வைத்து கார் தானாக பிரேக் பிடித்துவிடும்.
பின்பக்க பார்க்கிங் சென்சார்
வாகன ஓட்டிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்றால் ரிவர்ஸ் எடுப்பது தான். பலர் ரிவர்ஸ் எடுக்கும் வாகனம் விபத்தில் சிக்கி விடுகிறது. இதை தடுப்பதற்கு தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வாகனத்தின் பின்பக்கத்தில் சென்சார்களை பொருத்தியுள்ளனர். இந்த சென்சார்கள் வாகனம் ரிவர்ஸில் வரும் போது மட்டுமே வேலை செய்யும். இந்த சென்சார்கள் வாகனம் ரிவர்ஸில் வரும் போது அருகில் தடுப்புகள் இருந்தால் கண்டறிந்து வாகன ஓட்டியை எச்சரிக்கை செய்யும்.

சீட் பெல்ட் சென்சார்கள்
முன்பு வாகனங்களில் சீட்பெல்ட்களுக்கு தனி சென்சார்கள் எதுவும் கிடையது. ஆனால் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதை கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு சொல்லிவிட்டது. வாகனத்தில் சீட்டில் பயணிகள் அமர்ந்திருக்கும் போது வாகனம் நகர்ந்து செல்லும் வேளையில் சீட் பெல்டை ஒருவர் அணியாமல் இருந்தால் எச்சரிக்கைஒலி வரும். அதை வைத்து உடனடியாக சீட்பெல்டை அணிய முடியும்.
ரெயின் சென்சிங் வைப்பர்கள்
வாகனங்களில் பயணிக்கும் போது திடீரென மழை பெய்வது சாதாரண விஷயம் தான். ஆனால் வாகனம் ஓட்டும்போது வைப்பரை கண்ட்ரோல் செய்வது பலருக்கு எரிச்சலூட்டும் விஷயம் இதை புரிந்து கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மழை பெய்தால் தானாக வைப்பர்கள் செயல்படும்வகையில் சென்சார்கள் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனங்களில் சென்சார்கள் சாதாரண விஷயமாக உள்ளன. இந்த சென்சார்கள் எப்படி பயன்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்நிலையில் இந்த பதிவு இது உங்களுக்கு தெளிவான விளக்கத்தை தரும் என நினைக்கிறோம்.

Click it and Unblock the Notifications