கார், பைக் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் கசப்பான அனுபவங்கள்!

இந்த செய்திக்கு கருத்து தெரிவித்த வாசகர்களுக்கு நன்றி. நீங்கள் தந்துள்ள விபரங்கள் பிறருக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

கார், பைக் வாங்கும் வாடிக்கையாளர்கள் பட்ஜெட், மாடலை பற்றி யோசிப்பதற்கு முன்னால் விற்பனைக்கு பின் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்வதே அடிப்படையாகிறது.

சிறந்த சர்வீஸ் கட்டமைப்பு வசதி கொண்ட நிறுவனங்களாக இருந்தாலும், அங்கு பணிபுரிபவர்களால் பல கசப்பான அனுபவங்களை வாடிக்கையாளர்கள் பெற வேண்டிய நிலை இருக்கிறது.

காலம் தாழ்த்துதல்

காலம் தாழ்த்துதல்

சொல்லியபடி உரிய நேரத்தில் கொடுக்காமல் பல சர்வீஸ் மையங்கள் காலம் தாழ்த்துவது வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அலுவலகம் செல்வது, குழந்தைகளை பள்ளியில் விடுவது, அவசர தேவைகள் என பல்வேறு நடைமுறை இன்னல்களை வாடிக்கையாளர்கள் சந்திப்பதற்கு தள்ளப்படுகின்றனர்.

அணுகு முறை

அணுகு முறை

பல சர்வீஸ் மையங்களில் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் சரியான அணுகுமுறையை கையாள்வதில்லை. மேலும், போதிய தகவல்களையும் அவர்கள் தருவதில்லை.

தகவல் தொடர்பு

தகவல் தொடர்பு

காரில் இருக்கும் பிரச்னை சரிசெய்யப்படவில்லை அல்லது வேறு காரணங்களால் கால தாமதம் ஏற்பட்டால் அதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கும் பழக்கமும் பல சர்வீஸ் மையங்கள் கடைபிடிப்பதில்லை.

புதிய பிரச்னை

புதிய பிரச்னை

வாகனத்தில் பிரச்னையை சரிசெய்யாமல் புதிய பிரச்னையை உண்டு பண்ணுவது, அனுபவமில்லாத மெக்கானிக்குகளை வைத்திருப்பது, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

தலைசுற்றல்

தலைசுற்றல்

இலவச சர்வீஸ்களை தாண்டிய பின் சர்வீஸ் மையங்களில் போடப்படும் பில்தான் பல வாடிக்கையாளர்களுக்கு விழி பிதுங்க வைக்கிறது.

 உங்களுக்கும் பிரச்னையா?

உங்களுக்கும் பிரச்னையா?

இதுபோன்ற மோசமான அனுபவங்களை வாகனங்களை வைத்திருக்கும் பல வாடிக்கையாளர்கள் இன்று எதிர்கொள்கின்றனர். அந்த அனுபவத்தை கீழ்க்கண்ட கருத்து பெட்டியில் பதிவு செய்யலாம். பிரச்னைக்குரிய பிராண்டு அல்லது சர்வீஸ் மையத்தின் விபரங்களையும் இங்கே பதிவு செய்யலாம். இது புதிதாக கார், பைக் வாங்கும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட சர்வீஸ் மையங்களை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்க உதவும்.

 சிறந்த டீலரையும் எழுதுங்கள்?

சிறந்த டீலரையும் எழுதுங்கள்?

பிரச்னை இல்லாத இடம் இல்லை. இருப்பினும், அதில் பெரிது படுத்த முடியாத சிறந்த சர்வீஸ் வழங்கும் பிராண்டு அல்லது டீலரின் விபரத்தையும் பதிவு செய்தாலும் புதிய கார், பைக் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2013, 13:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+