யாருக்கு எப்ப என்ன நடக்கும்னே தெரியாது... பலவீனமான இதயம் உள்ளவங்க இந்த வீடியோவை தயவு செஞ்சு பாக்காதீங்க...
ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் (Heart Attack) எந்த நேரத்திலும் ஏற்படலாம். சமீப காலமாக இளம் வயதினருக்கு கூட, ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வாகனம் ஓட்டும்போது, ஹார்ட் அட்டாக் பிரச்னையால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு கொண்டுள்ளனர் என்பது வேதனையான ஒரு விஷயமாக உள்ளது. இந்த வரிசையில் பெங்களூரில் வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது, ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. அவர் பிஎம்டிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) பஸ் டிரைவர் (Bus Driver) ஆவார்.
பெங்களூர் நகரின் நீலமங்களா-தாசனபுரா வழித்தடத்தில் அவர் பஸ் ஓட்டி கொண்டுள்ளார். இதன்படி நேற்று (நவம்பர் 6) அவர் வழக்கம் போல பணியில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதன் காரணமாக சுய நினைவை இழந்த அவர் ஒரு பக்கமாக சாய்ந்து விழுந்தார்.

இதன் காரணமாக அவ்வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு பஸ்ஸின் மீது, அவர் ஓட்டி கொண்டிருந்த பஸ் மோதியது. அந்த நேரத்தில் பஸ் கண்டக்டர் சமயோசிதமாக செயல்பட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் உடனடியாக பிரேக் பிடித்து பஸ்ஸை நிறுத்தினார். இதன் காரணமாக பஸ் பயங்கரமான விபத்தில் சிக்குவது தவிர்க்கப்பட்டது.
இந்த சமயோசிதமான செயலுக்காக பஸ் கண்டக்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் துரதிருஷ்டவசமாக ஹார்ட் அட்டாக் ஏற்பட்ட பஸ்ஸின் டிரைவர் உயிரிழந்து விட்டார். அவரது பெயர் கிரண் குமார் (Kiran Kumar) ஆகும். 40 வயதாகுவர் அவரின் மறைவுக்கு பிஎம்டிசி இரங்கல் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டு பஸ்ஸை நிறுத்திய கண்டக்டர் ஒபலேசுக்கு (Obalesh) நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் சரியான நேரத்தில் பஸ்ஸை நிறுத்தாமல் போயிருந்தால், இன்னும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
தற்போது அந்த பஸ்ஸில் என்ன நடந்தது? என்பதை விளக்கும் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஸ்ஸின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வைரல் வீடியோ, பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பணியில் இருக்கும்போது ஹார்ட் அட்டாக் காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் கவலைக்குரிய ஒன்றுதான். ஆனால் பஸ் மற்றும் லாரிகளின் டிரைவர்களுக்கு, ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். பஸ் மற்றும் லாரிகளின் டிரைவர்களின் நீண்ட நேரம் உட்கார்ந்த நிலையிலேயே வாகனங்களை இயக்க வேண்டிய சூழல் உள்ளது.
அவர்களின் இந்த அதிதீ உழைப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவை, ஹார்ட் அட்டாக் பிரச்னையை ஏற்படுத்தலாம். இவற்றுடன் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்னைகள் சேர்ந்து கொண்டால், வாகனம் ஓட்டும்போது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்து விடும்.
எனவே வாகனங்களின் டிரைவர்கள் பணியுடன் சேர்த்து, தங்கள் உடல் மற்றும் மன நலனினும் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். ஒருவேளை இவற்றை எல்லாம் மீறி, வாகனம் ஓட்டும்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால், அதை முன்கூட்டியே கண்டறிவது கடினம். ஏனெனில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு முந்தைய அறிகுறிகள் மிகவும் நுட்பமானவை.
இருப்பினும் திடீரென அதிக வியர்வை, தலை சுற்றல், சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், வழக்கத்திற்கு மாறான சோர்வு மற்றும் மார்பில் அசௌகரியம் ஏற்பட்டால், அவை ஹார்ட் அட்டாக் ஏற்பட போகிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது, இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், வாகனத்தை சாலையோரமாக பாதுகாப்பான முறையில் நிறுத்தி விடுவது நல்லது.
முதலில் நிதானமாக இருக்க வேண்டும். இது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். அத்துடன் உடைகளை தளர்த்துதல், உடனடியாக செல்போன் மூலம் மருத்துவ உதவியை நாடுதல் போன்ற விஷயங்களையும் செய்ய வேண்டும். இது போன்ற இக்கட்டான சூழல்களில், டிரைவர்களுடன் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications








