காரிலிருந்து வரும் வித்தியாசமான வாடைகளும், ஆபத்துக்களும்...!!
புதிய கார் வாங்கியவுடன் அதிலிருந்து வரும் ஒருவித பிளாஸ்டிக் வாசனை வருவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், சில நேரம் காரிலிருந்து சில வித்தியாசமான வாசனை அல்லது நாற்றம் வந்தால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டியது அவசியம்.
இதுபோன்று, காரிலிருந்து வரும் வாடையை நுகர்ந்தே சில முக்கிய பிரச்னைகளை கண்டுபிடிக்கலாம். இதன்மூலம், பெரிய ஆபத்துக்களிலிருந்தும், செலவீனங்களிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.

எச்சரிக்கை
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காரிலிருந்து வரும் 6 வித்தியாசமான வாடைகளை குறித்து தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

ரப்பர் தீயும் வாடை
டிரைவ் பெல்ட் கழன்றுவிட்டாலோ அல்லது எஞ்சினுக்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் ஹோஸ் குழாய்கள் சரியான இடத்தில் பொருத்தப்படாமல் டிரைவ் புல்லியில் உராய்ந்து கொண்டிருந்தாலோ ரப்பர் தீயும் வாடை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

சூடாகிய ஆயில் வாடை
சூடான ஆயில் வாடை அடித்தால் எக்சாஸ்ட் அமைப்பில் ஆயில் கசிவு ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ளளாம்.

எரிபொருள் வாடை
பெட்ரோல் அல்லது டீசல் வாடை அதிகமாக இருந்தால் ப்யூவல் இன்ஜெக்டர் அல்லது எரிபொருள் தொட்டியில் கசிவு இருப்பதாக அர்த்தம். இது தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதால் உடனடியாக சர்வீஸ் மையத்தில் பரிசோதித்துவிட வேண்டும்.

சிரப் வாடை
சிரப் போன்ற வாடை வந்தால் கூலண்ட் கசிவு அல்லது எஞ்சினை குளிர்விக்கும் அமைப்பில் பிரச்னை இருக்கலாம்.

தரைவிரிப்பு தீயும் வாடை
தரைவிரிப்பு தீயும் போது வரும் வாடை போன்று வந்தால் பிரேக்கில் பிரச்னை இருப்பதாக அர்த்தம் கொள்ளலாம்.

அழுகிய முட்டை நாற்றம்
அழுகிய முட்டை நாற்றம் வந்தால் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் பிரச்னை இருப்பதாக அர்த்தம் கொள்ளலாம். கேட்டலிடிக் கன்வெர்ட்டர் கருவி சரியாக ஹைட்ரஜன் சல்ஃபடை ஹைட்ரஜன் டை ஆக்சைடாக வடிகட்டவில்லையென்று அர்த்தம். இது எஞ்சினில் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.

எச்சரிக்கை
எப்போதுமே காரிலிருந்து வித்தியாசமான வாடை எதுவும் வந்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சர்வீஸ் மையத்திலோ அல்லது மெக்கானிக்கிடம் கொண்டு சென்று சோதித்து விடுவது நல்லது. மேலும், அந்த வாடை எதனால் வருகிறது என்பதையும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களது அனுபவம்?
இதேபோன்று உங்களது அனுபவத்தில் கண்டறிந்த விஷயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








