ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

காரில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கு சில எளிய வழிகளை பின்பற்றுவது பலன் தரும். நிதானமான வேகத்தில் காரை இயக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை கட்டுக்குள் வைத்திருக்க சில உபாயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

01. ஒரே மூச்சில் முடியுங்கள்...

சிலர் வீட்டுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக சின்ன சின்ன வேலைகளுக்காக கூட காரை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஷாப்பிக் மற்றும் இதர வீட்டு வேலைகளுக்காக காரை எடுக்க வேண்டி இருந்தால் முதலில் திட்டமிடுங்கள். அனைத்து வீட்டு வேலைகளையும் ஒரே தடவையில் செய்து முடிப்பது சாலச் சிறந்தது.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

காரணம், பல மணிநேரம் நிற்க வைக்கப்பட்டு இருக்கும் காரின் எஞ்சின் குளிர்ச்சியில் இருக்கும்போது, ஒவ்வொரு முறையும் ஸ்டார்ட் செய்யும்போது சற்றே கூடுதல் எரிபொருள் செலவாகும். இதனால், மைலேஜ் குறையும். அருகில் இருக்கும் வீட்டு வேலைகளை செய்ய நடந்து செல்வதும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதும் சிறந்தது.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

02. டிராஃபிக் ஜாம்

தினசரி அலுவலகம் செல்வோர், போக்குவரத்து நெரிசல் நேரங்களை தவிர்த்து அரை மணி நேரம் முன்னதாக செல்வதும், சில கிலோமீட்டர்கள் கூடுதலாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைவான சாலைகளை தேர்வு செய்து செல்வதும் ஓரளவு பயன்தரும். டிராஃபிக் ஜாமில் சிக்கினால், முதல் கியரில் வைத்து, கிளட்ச் அதிகம் பயன்படுத்தும் போது எரிபொருள் அதிகம் செலவாகும்.

அதேபோன்று, திரும்பும்போது சற்று தாமதமானாலும், போக்குவரத்து நெரிசல் குறைவான நேரத்தில் வீடு திரும்புவது எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான வழியாக இருக்கும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

03. குழப்பம்

கார் மெதுவாக செல்லும்போது ஜன்னல் திறந்து வைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 20 கிமீ வேகத்தை தாண்டிச் செல்லும்போது ஜன்னல்களை மூடிவிடுங்கள். அதேபோன்று, சன்ரூஃப் இருந்தாலும் மூடி வைப்பது நல்லது. காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

04. கேரியரும் பிரச்னைதான்...

காரில் கேரியர் மற்றும் ரூஃப் ஸ்கை பாக்ஸ் ஆகியவை இருந்தால் தேவைப்படாத நேரத்தில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். ஸ்கை பாக்ஸில் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தால் கூட அது ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்படுத்தி மைலேஜை குறைய காரணமாகிவிடும். தற்போது வரும் கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ்களை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மேலும், கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ் எடையும் மைலேஜ் குறைய காரணமாக இருக்கும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

05. தேவையில்லாத ஆணி....

காரை அழகு படுத்துகிறோம் என்ற பெயரில், எக்ஸ்ட்ரா பம்பர் உள்ளிட்ட தேவையில்லாமல் ஏராளமான ஆக்சஸெரீகளை பொருத்துவதால் அதிக எடையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இதுவும் எரிபொருள் சிக்கன அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருக்கும். அதேபோன்று, சில பேர் கார் டிக்கியில் விளையாட்டு பொருட்கள், உடைமைகளை தேவையில்லாமல் போட்டு வைத்திருப்பதும் வழக்கம். இதுவும் மைலேஜ் குறைய வாய்ப்பை ஏற்படுத்தும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

06. இதை செய்யாதீர்

காரை எடுத்தவுடன் அதிக ஆக்சிலரேட்டரை கொடுத்து உறுமச் செய்து எடுப்பது சிலரின் வாடிக்கை. இதுவும் தேவையில்லாத வேலையே. காரை சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஆக்சிலரேட்டரை அதிகப்படியாக கொடுத்து எரிபொருளை வீணடிக்காதீர். இது எரிபொருள் விரயத்தால் பர்ஸுக்கு பதம் பார்ப்பதோடு, புகையால் காற்று மாசுபடுதலும் அதிகரிக்கிறது.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

07. நிதானம்...

பொதுவாக கார் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், சீரான வேகத்தில் இயக்குவது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும். இதற்கு சரியான கியரில் இயக்குவது அவசியம். குறிப்பாக, டாப் கியரில் வைத்து சீரான வேகத்தில் ஓட்டும்போது நீங்கள் நினைத்ததைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நெடுஞ்சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கிமீ வேகத்தை கடைபிடிக்கும்போது மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

08. பிரேக்

அடிக்கடி பிரேக் பிடிப்பதும் காரில் தேவையற்ற எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதும், நிதானமான வேகத்தை கடைபிடிப்பதும், போக்குவரத்தை கணக்கில்கொண்டு ஓட்டும்போதும் தேவையில்லாமல் பிரேக் பிடிப்பதை தவிர்க்க முடியும்.

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை. . . எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்!!

09. பராமரிப்பு

மேலே சொன்ன காரணங்கள் மட்டுமின்றி, காரின் பராமரிப்பும் மிக முக்கியம். தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையின்படி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம். 5,000 கிமீ தூரத்திற்கு ஒருமுறை காருக்கு பராமரிப்புப் பணிகள் செய்வது அவசியமாகும். கார் எஞ்சின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் இருக்க வேண்டும். மேலும், டயரில் காற்றழுத்தம் அளவையும் அவ்வப்போது பரிசோதிப்பது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 11, 2018, 13:23 [IST]
English summary
Some Fuel Saving Tips Every Driver Should Know.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+