யாருக்குமே SRS Airbag-ன்னா என்ன அர்த்தம்ன்னு தெரியாது! உண்மையான விரிவாக்கம் இது தான்!
இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் அத்தனை கார்களிலும் கட்டாயம் ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது புதிதாக வாங்கும் வாகனங்களில் எங்கெங்கு ஏர்பேக் இருக்கிறதோ அந்த இடத்தில் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் என்ற குறியீடு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். எஸ்ஆர்எஸ் என்றால் என்ன ஏர்பேக்கிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப்படுகிறோம்.
கார்களின் இன்று ஏர்பேக் கட்டாயமாக இருக்கிறது. விபத்து நேரங்களில் காரில் இருக்கும் மனித உயிரை காப்பாற்றுவதற்காக இந்த ஏர்பேக் பயன்படுகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை தயாரிக்கும் போது கட்டாயம் ஏர்பேக் உடன் தான் தயாரிக்க வேண்டும் என விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது. அதன்படி தான் தற்போது வாகனங்களில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இப்படியாக தயாரிக்கப்படும் வாகனங்களில் எந்தெந்த பகுதியில் ஏர்பேக் இருக்கிறது என்பதை பயணிகளுக்கு தெரிவிப்பதற்காக அந்த இடத்தில் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் என்ற எழுத்தை அச்சு செய்திருப்பார்கள். பொதுவாக ஏர்பேக் என எழுதாமல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் என எழுதுவதற்கு என்ன காரணம் இந்த எஸ்ஆர்எஸ் என்ற இடத்திற்கு என்ன காரணம் என பலருக்கும் தெரியாது. பலர் இதை ஏர்பேக் தயாரிக்கும் நிறுவனம் என நினைத்துக் கொள்கிறார்கள் ஆனால் அப்படி அல்ல.
எஸ்ஆர்எஸ் என்பதற்கு விரிவாக்கம் சப்ளிமெண்டல் ரெசிஸ்டன்ஸ் சிஸ்டம் என்பதாகும். சாதாரண ஏர்பேக்கும் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்கும் என்ன வித்தியாசம் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வாகனம் விபத்தில் சிக்கினால் ஏர்பேக் ஓப்பன் ஆகிவிடும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் சில விபத்துகளில் இப்படியாக ஏர்பேக் திறப்பதும்கூட பல்வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

ஏர்பேக் திறந்ததாலேயே பலருக்கு உயிர் போகும் நிலை கூட ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து அடுத்த கட்ட ஆய்வு நடந்த போது ஏர்பேக் என்பது ஒரு பயணி சீட்டில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டால் அவர் சீட்டில் அமர்ந்திருக்கும் பொசிஷனில் அமர்ந்திருந்தால் மட்டுமே சரியான அளவு குஷனை ஏற்படுத்தி அவருக்கான காயம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
ஆனால் சில மோசமான விபத்துகளில் ஏர்பேக் திறக்கும் அந்த சில வினாடிகளுக்கு முன்பாகவே பயணிகள் சீட்டிலிருந்து வேறு பொசிஷனுக்கு மாறினால் ஏர்பேக் திறக்கும் வேகத்தில் காருக்குள் இருக்கும் பயணிக்கு மிக மோசமான அளவு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு தான் இருக்கிறது. ஏர்பேக் காரணமாகவே கூட விபத்துக்கள் பெரிதாக வாய்ப்பிருப்பதால் இதை சரி செய்ய ஒரு புதிய முயற்சியை செய்தார்கள்.

விபத்து ஏற்பட்டாலும் பயணி சீட்டை விட்டு அதிக அளவில் நகராமல் இருப்பதற்காக சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கினார்கள். ஏர்பேக் சிஸ்டத்தை சீட் பெல்ட் உடன் இணைத்து விட்டார்கள். சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே ஏர்பேக் திறக்கும் என்ற முறைப்படி ஏர்பேக்கை கட்டமைத்து இருந்தார்கள்.
இந்த சிஸ்டத்திற்கு தான் சப்ளிமெண்டல் ரெசிஸ்டன்ஸ் சிஸ்டம் என பெயர். இதை சுருக்கி தான் எஸ்ஆர்எஸ் என அழைக்கிறார்கள். குறிப்பிட்ட ஏர்பேக் சீட் பெல்ட் அணிந்து இருந்தால் மட்டுமே செயல்படும் என்பதை குறிப்பதற்காக தான் எஸ்ஆர்எஸ் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். நீங்கள் காரில் பயணிக்கும் போது இப்படியாக எஸ்ஆர்எஸ் என குறிப்பிட்டு இருந்தால் அதற்கு இதுதான் சரியான அர்த்தம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ரெனால்ட் கார்களில் மட்டும் எஸ்ஆர்பி ஏர்பேக் என குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த எஸ்ஆர்பி என்றால் சப்ளிமென்டர் ரெசிஸ்டென்ஸ் பேக்கேஜ் என அர்த்தம் ஆகும். இந்த வகை ஏற்பாடுகளில் வெறும் சீட் பெல்ட் மட்டுமல்லாமல் மற்ற சில சென்சார்களையும் வைத்து தான் ஏர்பேக் திறக்கப்பட வேண்டுமா? அல்லது திறக்காமல் இருக்க வேண்டுமா என்பதை சிஸ்டமே முடிவு செய்யும். இதை குறிப்பதற்காக எஸ்ஆர்பி என குறிப்பிடுகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் ஏர்பேக்கில் மிக கட்டாயமாக தேவை இதனால் நீங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிந்தால் மட்டுமே ஏர் பேக்குகள் வேலை செய்யும். இது இந்திய அரசின் விதிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள சிஸ்டம் ஆகும். இதனால் வாகனத்தில் நீங்கள் எப்பொழுது பயணம் செய்தாலும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications









