சில மெக்கானிக்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாது! பிரேக் பிடிக்குறப்ப ஸ்டிரியங் வீல் வைப்ரேட் ஆனா என்ன அர்த்தம்?
நீங்க காரில் செல்லும் போது கார் பள்ள மேடுகளில் பயணித்தால் காரின் உள்ளே அதிர்வுகள் ஏற்படும் இதை நாம் காரில் செல்லும் போது நிச்சயம் உணர்ந்திருப்போம். இதற்கான காரணம் நமக்கு புரியும் ஆனால் காரில் பிரேக் போட்டாலே காருக்குள் அதிர்வு இருக்கும் என சொன்னால் நம்ப முடிகிறதா? காரில் பிரேக் போடும்போது எல்லாம் முக்கியமாக ஸ்டேரிங் வீல் அதிரும் அது ஏன் என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.
பொதுவாக காரின் ஸ்டேரிங் வீலில் அதிர்வுகள் வருவது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம் தான். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக ஸ்டேரிங் வீல் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள பகுதி சரியாக பொருத்தாமல் இருந்தாலும், அல்லது ரிம்மில் ஏதாவது பெண்டு இருந்தாலோ,அல்லது ஜாயிண்ட் மோசமான நிலையில் இருந்தாலோ

அல்லது சில நட்டுகள் லூசாக இருந்தாலும் இவ்வாறான அதிர்வுகள் ஏற்படும். ஆனால் இந்த காரணம் எல்லாம் வாகனத்தில் பிரேக் பிடிக்கும் போது மட்டும் ஸ்டீரிங் வீல் அதிர்வதற்கான காரணமாக இருக்க முடியாது. இது சாதாரணமாக வண்டியை ஸ்டார்ட் செய்து பயணிக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் தான்.
வண்டியில் பிரேக் பிடிக்கும்போது மட்டும் ஸ்டியரிங் வீல் அதிர்வு ஏற்பட்டால் அதற்கு ரோட்டார்கள் தான் காரணம். அப்படி என்றால் என்ன? பிரேக் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டுள்ள பிரேக் பேட் பிரேக் பிடிக்க அழுத்தும் சாதனம் தான் ரோட்டார். இது ஒரு முக்கியமான சாதனமாக இருக்கிறது. இந்த சாதனம் எப்படி பிரேக் பிடிக்கும் போது காரின் ஸ்டியரிங் வீலை அதிர வைக்கிறது? என்பதை தான் விரிவாக இன் காணப் போகிறோம்.

ரோட்டார்கள் என்பது ஒரு மெட்டல் சாதனமாகும். இது குறிப்பிட்ட அளவிலான அகலத்தில் வட்ட வடிவில் வழங்கப்பட்டிருக்கும். ஒரு வாகனத்தின் பிரேக்கை டிரைவர் மிதிக்கும் போது அந்த பிரேக் ஏற்படுத்தும் உராய்வு காரணமாக வெப்பம் ஏற்படும். இந்த வெப்பம் ரோட்டார் முழுவதுமாக பரவும். லேசாக பிரேக் பிடிக்கும்போதும் கூட இந்த வெப்பம் ரோட்டாருக்கு மாறும். இப்படியாக தொடர்ந்து வெப்பமாகி அது அதிக பயன்பாட்டுக்கு ஆளாகும்போது ஒரு கட்டத்தில் ரோட்டார் சேதமாக துவங்கும்.
இப்படி ஆங்காங்கே சேதமாகியோ அல்லது ரோட்டாரின் தடிமன் அளவு குறைந்தோ இருந்தால், அப்பொழுது அதிக வேகத்தில் செல்லும்போது டிரைவர் பிரேக் பிடித்தால் ரோட்டார் அதிகம் வெப்பமாகி அந்த வெப்பத்தை தாங்க முடியாமல் பிரேக் பெடலில் அதிர்வை ஏற்படுத்தும். இந்த அதிர்வு அப்படியே ஸ்டேரிங் வீலுக்கும் கடத்தப்பட்டு ஸ்டேரிங் வீல் மேலும் அதிரும். இதுதான் பிரேக் பிடிக்கும்போது ஸ்டீரிங் வீல் அதிர்வதற்கான முக்கியமான காரணமாக இருக்கிறது.

உங்கள் காரில் பிரேக் பிடிக்கும்போது மட்டும் ஸ்டேரிங் வீலில் அதிர்வு ஏற்பட்டால் நீங்கள் கவனிக்க வேண்டியது ஸ்டேரிங் வீலை அல்ல ரோட்டாரை தான். ரோட்டாரை கவனித்து சரியில்லாத ரோட்டாரை நீங்கள் மாற்றிவிட்டால் மட்டுமே போதுமானதாக இருக்கும் இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க. பலருக்கும் இப்படியான விஷயம் ஒன்று இருப்பதே தெரியாது.
சில மெக்கானிக் கூட இப்படியான பிரச்சனை இருப்பது தெரியாமல் வரும் வாடிக்கையாளர்களை டார்கெட் செய்து அவர்களிடம் காரின் ஸ்டியரிங் வீலில் அது பிரச்சனை இது பிரச்சனை என ஒவ்வொரு பிரச்சனையாக கூறி அதிக செலவை இழுத்து விட்டு விடுவார்கள். இதனால் அடுத்த முறை உங்கள் காரில் பிரேக் பிடிக்கும் போது மட்டும் ஸ்டியரிங் வீலில் அதிர்வு இருந்தால் அதற்கு ரோட்டார் தான் பிரச்சனை. நேரடியாக ரோட்டாரை மாற்ற சொல்லி கேட்கலாம்.

ஒருவேளை உங்கள் கார் ஸ்டார்ட் ஆனது முதல் தொடர்ந்து ஸ்டியரிங் வீலில் அதிர்வுகள் இருந்தால் அதற்கு ரோட்டாள் பிரச்சனை காரணமாக இருக்காது. அதற்கு நாம் மேலே குறிப்பிட்டபடி ஏதாவது ஒரு பிரச்சினை காரணமாக இருக்கலாம். இதனால் உங்கள் ஸ்டீரிங் வீல் அதிர்வதற்கு எது காரணம் என்பதை முதலில் சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதை அப்பொழுதுதான் பிரச்சினையை சரி செய்ய ஏதுவாக இருக்கும்.
ரோட்டார் தான் பிரச்சனை என்பதை எளிதாக கண்டுபிடிக்க சில வழிமுறைகள் இருக்கிறது. ரோட்டாரை தனியாக எடுத்து கையால் சுற்றி பார்க்கும் போது எந்த பிரச்சினையும் இல்லாமல் அது சுற்றினால் ரோட்டரி பிரச்சனை இல்லை என அர்த்தம் ஆனால் அதை சுற்றும் போது அதில் ஏதாவது மேடு பள்ளங்களோ அல்லது அதிர்வுகளோ இருந்தால் நாம் அதை எளிதாக கண்டுபிடித்து விட முடியும். அதன் மூலம் ரோட்டாரை மாற்றினால் இந்த பிரச்சனை சரியாகும்.
இப்படியான மோசமான ரோட்டாரை கொண்டு வாகனம் ஓட்டுவது என்பது நிச்சயம் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆரம்ப கட்டத்தில் இது பெரிய பிரச்சினையாக உங்களுக்கு தோன்றாவிட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் இந்த நிலைமை மோசமாகி பிரேக் ஃபெயிலியர் கூட ஆகி விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இப்படியான ரோட்டார் பிரச்சனை அதிகம் ரோட்டார் தேய்மானம் ஆனாதல் மட்டும் அல்லாமல் சில நேரம் ரோட்டாரை பொருத்தும் போது சரியாக நட்டு போல்டுகளை டைட் செய்யாமல் இருந்தாலும் இப்படியான பிரச்சினைகள் ஏற்படும். இதனால் புதிய கார் தானே புதிய ரோட்டார் தானே அதில் எப்படி பிரச்சினை இருக்கப் போகிறது? என நீங்கள் அசால்டாக இருக்காமல் இதையும் செக் செய்து கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வைத்திருக்கும் பலருக்கு காரில் பிரச்சனை இருப்பதால் காட்டும் அறிகுறிகள் குறித்து பெரிதாக தெரிவதில்லை. பலருக்கும் பிரேக் பிடிக்கும்போது அதிர்வது சாதாரண விஷயம் என கருதிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் இல்லை, இது பிரேக் பிடிப்பதில் உள்ள பிரச்சனையின் அறிகுறியாகும். இதனால் இந்த பிரச்சனையை உடனடியாக கண்டறிந்து சரி செய்வதே சிறந்தது.


Click it and Unblock the Notifications









