இதை மட்டும் கரெக்டா செட் பண்ணா போதும் காருக்குள்ள சிம்லா மாதிரி குளு குளுன்னு இருக்கும்!

தற்போது இந்தியா முழுவதும் கோடை காலம் என்பது துவங்கிவிட்டது. கோடை காலத்தில் காரில் பயணிப்பவர்கள் அதிக அளவு ஏசியை பயன்படுத்துவார்கள். இந்த நேரத்தில் ஏசி இல்லாமல் காரில் பயணிப்பது என்பது சிரமமான விஷயமாக இருக்கும். இந்நிலையில் இந்த கோடை காலத்தில் காரில் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தக் கோடை காலத்தில் நீங்கள் காரில் பயணிக்கும் போது ஏசி மட்டும் வேலை செய்யவில்லை என்றால் அவ்வளவுதான் அந்த நாளே உங்களுக்கு மிக மோசமான நாளாக இருக்கும். காருக்குள்ளே இருக்கும் வெப்பம் என்பது வெளியில் உள்ள வெப்பத்தை விட அதிகமாக இருக்கும். அதனால் காருக்குள் ஏசி இல்லாமல் பயணித்தால் உங்களுக்கு அதிகமான வெப்பம் உணரப்படும்.

summer car ac tips

இதனால் கோடை காலத்துக்கு முன்பே காரன் ஏசியை சர்வீஸ் செய்து கொள்வது நல்லது. தற்போது கிட்டத்தட்ட கோடை காலம் துவங்கி விட்டதால், நீங்கள் உங்கள் காரின் ஏசியை இப்பொழுதே செக் செய்து கொள்ளுங்கள். ஒரு வேலை காரின் ஏசி சரியாக வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக அதை சரி செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இந்த கோடையை நீங்கள் பிரச்சனை இல்லாமல் கடந்து செல்ல முடியும்.

இந்த கோடை காலத்தில் நீங்கள் காரில் பயணத்தை துவங்கப் போகிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது காரில் உள்ள அனைத்து ஜன்னல் கண்ணாடிகளையும் திறந்து விட வேண்டும். இப்படி செய்தால் காருக்குள் இருக்கும் வெப்பமான காற்று முழுவதும் வெளியேறிவிடும். காரில் சன்ரூஃப் இருந்தால் அதையும் திறந்து விடுவது நல்லது. காரின் மேல் பகுதி வழியாக வெப்பம் வெளியேறுவது என்பது சுலபமாக இருக்கும்.

summer car ac tips

சிறிது நேரம் கார் ஜன்னல்கள் எல்லாம் திறந்து விட்டு வெளியில் உள்ள வெப்பமும், காரின் உள்ளே இருக்கும் வெப்பமும், கிட்டத்தட்ட ஒரே அளவிற்கு வந்த பின்பு நீங்கள் காரில் பயணத்தை துவங்கலாம். இப்படியாக துவங்கும் போது சன்ரூஃப், ஜன்னல் என அனைத்தையும் அடைத்து விட்டு ஏசியை ஆன் செய்ய வேண்டும். அப்பொழுது ரீசர்குலேஷன் மோடை கட்டாயம் ஆப் செய்து வைத்திருக்க வேண்டும்.

ரீசர்குலேஷன் மோடு ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தால் தான் வெளியில் உள்ள காற்றை எடுத்து ஏசி அதை குளிர்வித்து காருக்குள்ளே அனுப்பும். இதனால் காரின் கேபின் மிக விரைவாக குளிர்ச்சியாக மாறிவிடும். உங்களுக்கு காருக்குள்ளே போதுமான குளிர்ச்சி கிடைத்தவுடன் காரில் ரீசர்குலேஷன் மோடை ஆன் செய்து விட வேண்டும்.

காருக்குள் இருக்கும் குளிரான காற்று மீண்டும் குளிர்விக்கப்படும்போது ஏசி இயந்திரம் அதிகமாக சிரமப்பட தேவை இல்லை. இதனால் விரைவாக உங்களுக்கு குளிர் தன்மை கிடைக்கும். மேலும் ஏசியின் பயன்பாடும் குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு போதுமான குளிர் கிடைத்தவுடன் ரீசர்குலேஷன் மோடை ஆன் செய்வதை கட்டாயமாக பின்பற்றுங்கள்.

உங்களுக்கு காருக்குள்ளே அதிகமான குளிர் தேவை என்றால் ஏசியின் டெம்பரேச்சரை குறைத்து, ஃபேன் ஸ்பீடை அதிகம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் காருக்குள்ளே அதிகமான குளிர்ச்சி என்பது இருக்கும். ஆனால் இதை செய்வதால் காரின் மைலேஜ் பெரிய அளவுக்கு பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கோடை காலத்தில் மைலேஜ் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை என்றால் இதை செய்யலாம்.

இதுபோக நீங்கள் காரில் தனியாக பயணிக்கிறீர்கள் என்றால் உங்கள் பகுதியில் இருக்கும் ஏசியை மட்டும் ஓப்பன் செய்து வைத்து மற்ற ஏசிகளை அடைத்து வைப்பதன் மூலம் உங்களுக்கு விரைவான குளிர் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் கொஞ்சம் மைலேஜ் மிச்சப்படுத்த முடியும். ஒரு வேளை காரின் முன்பக்க சீட்டில் மட்டும் பயணிகள் இருந்தால் பின்பக்கம் உள்ள ஏசியை அடைத்து வைக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடை காலத்தில் காரில் பயணிப்பவர்கள் எல்லாம் கோடை வெப்பத்தை சமாளிக்க ஏசியை கட்டாயம் அதிகம் பயன்படுத்துவார்கள். அவர்கள் எல்லாம் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்தால் நிச்சயம் என்னதான் வெளியில் வெயில் வெளுத்து கூட்டினாலும் காருக்குள்ளே சிம்லா போல குளுகுளு என ஏசி இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2024, 10:45 [IST]
English summary
Summer car ac tips how to cool your cabin
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+