கோடை காலம் துவங்குவதற்கு முன் உங்கள் காரில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த மார்ச் மாதமே வெயில் கோடை வெயில் போல வெளுத்து வாங்கி வருகிறது. பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இந்த மாதிரியான வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் உங்கள் காரை சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம். இதனால் நாம் இங்கே கோடை நேரத்தில் உங்கள் காரை எப்படி எல்லாம் பராமரிக்க வேண்டும் என்ற டிப்ஸ்களை இங்கே உங்களுக்காக வழங்கி உள்ளோம்.
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகமான வெயில் என்பது இருக்கும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் பல தற்போதைய கோடை துவங்கி விட்டதாக பேசி வருகின்றனர். இந்நிலையில் கோடை காலங்களில் கார்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியமான விஷயமாக இருக்கிறது.

கோடை காலம் துவங்கும் முன்பு நீங்கள் காரின் இன்ஜின் ஆயிலை மாற்றுவது சிறந்தது. கோடை காலத்தில் பள்ளி விடுமுறை காரணமாகவும், அதிக வெப்பம் காரணமாகவும் பலர் டூர் திட்டமிடும் காரணமாகவும், காரின் பயன்பாடு அதிகமாக இருக்கும். இதனால் நீண்ட நாட்களாக குறைவான பயன்பாட்டில் இருக்கும் திடீரென பயன்பாடு அதிகரித்தால் அது இன்ஜினில் பாதிப்பை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் கோடை காலம் துவங்கும் முன்பே இன்ஜின் ஆயிலை மாற்றி விடுவது சிறந்தது.
ஒரு காரின் இன்ஜின் ஆயிலை மாற்றும்போது ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றுவது என்பது நல்ல விஷயம்தான். இது காரின் இன்ஜின் ஆயுளை அதிகரிக்கும். நீங்கள் காரின் இன்ஜின் ஆயிலை மாற்றும்போது கட்டாயம் ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றி விடுங்கள். கோடை காலத்தில் அதிகமாக கார் பயன்படும் போது இது நிச்சயம் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

காரின் இன்ஜின்களில் உள்ள கூலன்ட் மாற்றுவது நல்லது. வெளியில் வெப்பம் அதிகமாக இருக்கும் போது, நீண்ட தூரம் நீங்கள் காரை ஓட்டினால் காரின் இன்ஜின் உள்ளே வெப்பம் அதிகரிக்கும். இதனால் காரின் இன்ஜின் கூலன்ட் போதுமான திறனில் இல்லை என்றால் அது நேரடியாக இன்ஜினின் ஆயுளை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. தேவைப்பட்டால் அதை மாற்றியோ அல்லது டாப் அப் செய்தோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெயில் காலங்களில் கார் இன்ஜினில் உள்ள கூலன்ட் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்ய வேண்டியது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. இதனால் நீங்கள் ரேடியேட்டர் பேன் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஒரு தடவை செக் செய்து கொள்ளுங்கள். ரேடியட்டர் ஃபேன் வேலை செய்யவில்லை என்றால் உடனடியாக அதை சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் காரின் இன்ஜின் அதிகமாக வெப்பமாகாமல் தடுக்கும்.

கோடை காலங்களில் குடும்பத்துடன் டூர் நீண்ட தூரம் காரில் செல்ல பயணம் திட்டமிட்டு இருப்போம். அதற்கு காரின் உள்ளே உள்ள ஏர் ஃபில்டரை செக் செய்து கொள்வது நல்லது. அதை சுத்தம் சுத்தமாக இருந்தால் காருக்குள்ளே காற்று சிறப்பாக இருக்கும். இல்லை என்றால் நீண்ட தூரம் காரில் பயணிக்கும் போது காரில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கோடை காலங்களில் நிச்சயம் காரில் பயணிக்கும் போது ஏசி என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கும். இதுவரை மழை மற்றும் குளிர்காலம் இருந்ததால் ஏசியை பலர் பயன்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அவர்கள் ஒருமுறை காரை ஸ்டார்ட் செய்து ஏசி எல்லாம் சரியாக வேலை செய்கிறதா ஏசிக்கான அனைத்து விஷயங்களும் காரில் இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.

கோடை காலம் என்பது காருக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் காலமாக இருக்கிறது. இந்த காலங்களில் நீங்கள் காரை பார்க் செய்யும்போது வெட்ட வெளியில் பார்க் செய்யாமல் காரை முடிந்த அளவுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து மறைத்து வைத்திருங்கள். அதிகமாக சூரிய வெளிச்சம் காரின் மீது படும்போது அதன் பெயிண்ட் பாலாக வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடை காலம் நெருங்கி வருவதால் தற்போதைய உங்கள் கார்களில் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். தேவையான விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் கோடை காலத்தில் நீங்கள் அதிகமாக சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications









