அடிக்கிற வெயிலுக்கு காரே உருகிடும் போல! இந்த வெப்பத்திலிருந்து காரை பாதுகாப்பது எப்படி?
இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வெயிலிலிருந்து நீங்கள் தப்பிப்பது எப்படி முக்கியமோ அதேபோல உங்க வாகனங்களையும் தப்பிக்க வைக்க வேண்டும். அடிக்கும் வெயிலில் உங்கள் வாகனங்களுக்கு பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்த வெயில் காலத்தில் உங்கள் வாகனங்கள் என்ன விதமான பாதிப்புகளுக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது, அதை தடுப்பது எப்படி? என்ற விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெப்பம் உச்சகட்ட நிலையில் இருக்கிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் நாம் பெரும்பாலும் பகல் நேரங்களில் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறோம். அரசும் பெரும்பாலும் தேவையில்லாமல், வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கும் படி தான் கூறி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நம் வாகனங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அடிக்கும் வெப்பத்திலிருந்து நம் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்தால் தான் அதை பின்னர் பயன்படுத்த உதவியாக இருக்கும். அடிக்கும் வெயிலை பார்த்தால் வாகனங்களை சாலையில் நிறுத்தினாலே வாகனங்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது தான்.
வாகனங்களை வெயிலில் நிறுத்தினால் காரின் உட்புறத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. வெயிலில் வாகனம் நிற்கும் போது காருக்குள் வெப்பம் அதிகமாகி கொண்டே இருக்கும். இந்த வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகமாகும் போது காருக்குள் இருக்கும் நபர்களை அது அதிகம் பாதிக்கும்.

கார் கண்ணாடி வழியாக வெப்பம் வந்து உங்கள் டேஷ்போர்ட்டில் உள்ள பிளாஸ்டிக்கில் படும்போது நீண்ட நேரம் அந்த வெப்பம் ஒரே இடத்தில் இருந்தால் அது உங்கள் கார் டேஷ்போர்டு பிளாஸ்டிக் பாதிப்பிற்குள்ளாக அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இப்படியாக பல்வேறு விதமான பாதிப்புகளிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது என காணலாம்.
கார் வேக்ஸிங்: உங்கள் காரில் உள்ள வெறிபுறத் தோற்றத்தை பாதுகாக்க ஆண்டிற்கு இரு முறை கார் வேக்ஸிங் செய்ய வேண்டியது அவசியம். இப்படியாக கார் வேக்ஸிங் செய்து விட்டால் உங்கள் காருக்கு ஏற்படும் சிறிய ஸ்கிராச்சுகள், நேரடியாக சூரிய வெப்பம் படுவதால் ஏற்படும் யூவி சேதாரம் ஆகியவற்றை தடுக்க முடியும்.

இதுவே நீங்கள் நீண்ட கால தீர்வுக்கு தேடினால், உங்கள் காருக்கு செராமிக் கோட்டிங் கொடுப்பது சிறப்பானதாக இருக்கும். இந்த செராமிக் கோட்டிங் கொடுப்பதன் மூலம் காரின் வெளிப்புறத் தோற்றம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அதே நேரம் வெளிப்புற அம்சங்களால் பாதிப்பு ஏற்படுவது குறையும்.
விண்டு ஷீல்டு புரோடக்டர்: காரின் விண்டு ஷீல்டு பகுதியில் கண்ணாடி இருப்பதால் அதன் வழியாக காருக்குள் அதிகமான சூரிய வெளிச்சம் வருகிறது. இதுதான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் காரை பார்க்கையில் நிறுத்தி இருக்கும்போது விண்டு ஷீல்டு புரொடெக்டரை வைத்து காருக்குள் வெயில் வராத படி நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பெரிய பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
இந்தக் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதன் காரணமாக காரில் உள்ள ஃப்யூலிட்ஸ் எல்லாம் சீக்கிரம் தீர்ந்து போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் அடிக்கடி அதை செக் செய்து கொள்ளுங்கள். முக்கியமாக கூலன்ட், மோட்டார் ஆயில், கியர் ஃப்யூலிட் ஆகியவற்றை செக் செய்து கொள்வது நல்லது. இல்லையென்றால் இது பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
நீண்டநேரம் காருக்குள் வெப்பம் அல்லது சூரிய ஒளி இருந்தால் அது காரில் பொருத்தப்பட்டுள்ள லெதர் சீட்டுகளை பாதிப்பு ஏற்படுத்த வைக்கும். முக்கியமாக லெதர் சீட்டுகள் ட்ரை ஆகவோ அல்லது ஸ்டிஃப் ஆகவோ மாற்றிவிடும். இதனால் நீங்கள் காருக்குள் உள்ள சீட் கலரை தேர்வு செய்யும்போது லைட் கலராக தேர்வு செய்வது நல்லது. டார்க் கலராக தேர்வு செய்தால் இப்படியான சூழ்நிலைகளில் பாதிப்பு ஏற்படும் போது அது அப்பட்டமாக தெரிந்து விடும்.
இது மட்டுமல்ல அவ்வப்போது காரின் சீட்டுகளை டிரை வாஷ் செய்வது நல்லது. முக்கியமாக கோடை காலங்களில் காருக்குள் அதிகமாக வெப்பம் இருப்பதால் அதை சுத்தம் செய்து கொள்வதன் மூலம் நீண்ட கால உழைப்பை பெற முடியும். பலர் இந்த கோடை காலத்தில் சுத்தம் செய்யாமல் மழைக்காலத்தில் தான் வாகனங்களை சுத்தம் செய்து வைத்திருக்கிறார்கள். கோடை காலங்களில் காரின் உட்புறங்களையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது.
காரின் ஜன்னல் கண்ணாடிகளில் ஒட்டப்படும் சன்ப்ரூஃப் ஸ்டிக்கர்கள் குறித்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சட்ட விதிமுறைகள் இருக்கிறது. இதனால் உங்கள் மாநிலத்தில் உள்ள சட்ட விதிமுறைகளை பின்பற்றி கரெக்டான சன்ப்ரூஃப் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி ஒட்டினாலும் காருக்குள் வெயில் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் காரை பார்க்கிங்கில் வைத்திருக்கும் போது ஜன்னல் கண்ணாடிகளையும் புரொடக்ட் செய்து செய்யும் கருவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடை வெயில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில் உங்கள் வாகனத்தை பராமரிக்க வேண்டியது உங்கள் கடமையாக இருக்கிறது. இதனால் நீங்கள் மேலே சொன்ன டிப்ஸ்களை பின்பற்றி உங்கள் வாகனத்தை முறையாக பராமரித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய பல லட்ச ரூபாய் செலவு சேமிப்பாகும்.


Click it and Unblock the Notifications









