காரில் ஏசி ஃபுல்லா ஆன் ஆகி இருந்தாலும் வெயில் கொளுத்துதா? இதை ஃபாலோ பண்ணுங்க...

கோடை காலத்தில் காரில் பயணிப்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. காரில் ஏசி இல்லையென்றால் உங்கள் கதி அதோகதி தான். இன்றைய கால மாடர்ன் கார்கள் ஏசி வசதி இல்லாமல் விற்பனையாகுவது இல்லை என்பது இதில் நல்ல விஷயம். சில நேரங்களில், ஏசி ஆனில் இருந்தாலும் காரின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியாது. அத்தகைய சூழலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க எளிமையான 8 டிப்ஸ்...

சன்ஷேட்-ஐ பயன்படுத்துதல்: குற்ற செயல்களை தடுப்பதற்காக, காரில் டிண்ட் செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என ஏற்கனவே சட்டம் வந்துவிட்டது. ஆதலால், கண்ணாடிகள் வழியாக சூரிய ஒளி காருக்குள் நுழைவது எளிதாகிறது. இதனை தடுக்க, காரை பார்க் செய்த பின், கண்ணாடிகளின் உட்பக்கத்தில் சன்ஷேட்களை ஒட்டவும்.

keep your car cabin cool

நிழலில் காரை நிறுத்தவும்: சன்ஷேட்களை பயன்படுத்துவதை காட்டிலும் சிறந்தது காரை நிழலில் நிறுத்துவதாகும். எல்லா நேரங்களிலும் காரை நிழலில் நிறுத்த முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம். இருப்பினும், முடிந்தவரையில் இதனை செய்ய பாருங்கள். மழை பெய்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால், தைரியமாக மர நிழலில் கூட காரை நிறுத்தலாம்.

keep your car cabin cool

ஜன்னல் கண்ணாடிகளை சிறிது திறக்கவும்: காருக்கு உள்ளேயும், வெளியேயும் காற்று பரிமாற்றத்திற்காக காரை பார்க் செய்த பின் ஜன்னல் கண்ணாடிகளை சற்று திறந்துவிட்டு செல்லலாம். ஆனால், மிகவும் நம்பகமான இடத்தில் காரை பார்க் செய்தால் மட்டுமே இதனை செய்யவும். மழை பெய்தால் நீர் உள்ளே நுழைவதற்கும் வாய்ப்புள்ளதை இந்த விஷயத்தில் மறந்துவிடாதீர்கள்.

keep your car cabin cool

விண்டோ விஸரை பயன்படுத்தலாம்: காரின் ஜன்னல் கண்ணாடிகள் என்னதான் நன்றாக மூடியிருந்தாலும் ஏசி காற்று ஜன்னல் கண்ணாடி ஓரங்களின் வழியாக வெளியே கசிவதற்கு வாய்ப்புள்ளது. நீண்ட காலம் ஓடிய பழைய கார் என்றால், நிச்சயமாக கசிவு இருக்கும். இதனை தடுக்க, கண்ணாடிகளுக்கு பார்டர் போல் பொருத்தப்படும் விண்டோ விஸர்களை பயன்படுத்தலாம்.

keep your car cabin cool

லெதர்களை முக்கியமாக பாதுகாக்கவும்: வெப்பத்தை நீண்ட நேரத்துக்கு பிடித்து வைத்திருக்கும் பொருட்களுள் ஒன்று லெதர் ஆகும். பெரும்பாலான கார்களில் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் இருக்கைகள் லெதரால் மூடப்பட்டதாகவே வழங்கப்படுகின்றன. ஆதலால், சூரிய ஒளியில் இருந்து முக்கியமாக இவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே கூறியதுபோல், சன்ஷேட்களை பயன்படுத்தலாம் அல்லது இதற்கென்றே கவர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

keep your car cabin cool

கூலிங் சீட் குஷினை பயன்படுத்தவும்: இன்றைய கால கார்களில் வழங்கப்படும் அட்டகாசமான அம்சங்களுள் ஒன்று வெண்டிலேட்டட் இருக்கைகள் ஆகும். அதாவது இத்தகைய இருக்கைகளின் குஷின்கள் வெப்பம் தேவைப்படும்போது வெப்பத்தையும், குளிர்ச்சி தேவைப்படும்போது குளிர்ந்த காற்றையும் தருகின்றன. இத்தகைய சீட் குஷின் இல்லாத கார்களில் நாமாகவே தனியாக வாங்கி பொருத்த வேண்டியதாக இருக்கும்.

keep your car cabin cool

ஏசி-க்கு முன் விசிறியை போடவும்: இதை பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதாவது, ஏசி-ஐ ஆன் செய்வதற்கு முன் ஏசி-இல் 'விசிறி' மோட்-ஐ ஆன் செய்யவும். அந்த நேரத்தில் ஜன்னல் கண்ணாடிகள் சற்று திறந்து இருக்கட்டும். சில நிமிடங்கள் கழித்து ஏசி-ஐ ஆன் செய்யவும். இந்த முறை ஆனது காருக்குள் சூடான காற்றை குறைக்க உதவும்.

keep your car cabin cool

பயண நேரத்தை திட்டமிடல்: கோடை காலத்தில் முடிந்த வரையில் காலை மற்றும் மாலை நேரங்களில் எல்லா வேலைகளையும் முடித்து விடவும். அதாவது, உச்சி மதிய வேளையில் கார் டிரைவிங் வேண்டாம். கொளுத்தும் வெயிலில் ஏசி-ஐ போட்டுக் கொண்டு காரில் செல்லும்போது, காரின் பேட்டரி அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம் இந்தியா போன்ற நாட்டில் கோடை வெயில் கடுமையானதாக இருக்கும் என்பதை அனுபவித்துள்ளோம். ஆதலால், கார் பயணத்தின்போது வெயிலில் இருந்து தப்பிக்க மேற்கூறப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றலாம். ஆனால் உண்மையில், வெயில் காலத்தில் காரில் செல்வதை விட அரசு பேருந்துகள், லோக்கல் மின்சார இரயிலில் செல்வது இன்னும் சிரமமானது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 8:00 [IST]
English summary
Summer car tips simple ways to keep your car cabin cool check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X