அடிக்கிற வெயிலுக்கு ரோட்ல அடிக்கடி பஞ்சராகி நிக்கும் கார்கள்! இன்னும் வேறென்ன பிரச்சனையெல்லாம் வருது?
இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கி வருகிறார்கள். இந்நிலையில் சாலையில் பயணிக்கும் கார்களில் இந்த வெயிலில் வெப்பம் தாங்காமல் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி சமாளிப்பது இந்த கோடை வெப்பத்திலிருந்து எப்படி நம் வாகனங்களை பாதுகாப்பது என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெயில் இந்த கோடை காலத்தில் அடித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பலர் வீட்டை விட்டே வெளியே வர தயக்கம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக மத்திய மாநில அரசுகளும் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.

இருந்தாலும் பள்ளிகள் விடுமுறை காரணமாக பலர் சுற்றுலா செல்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார்கள். இப்படியாக சாலைகளில் பயணிக்கும் கார்கள் சமீப காலமாக சில முக்கியமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதிக வெப்பம் காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. பலரும் எதிர்பாராத அளவிற்கு இதன் பாதிப்புகள் இருக்கிறது.
இப்படியாக இந்த வெயில் நேரங்களில் பலர் சந்திக்கும் பிரச்சினை டயர் பஞ்சராவது அல்லது வெடிக்கும் பிரச்சினை தான். இதற்கு முக்கியமான காரணம் கோடை வெயில் காரணமாக சாலையில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதிக வெப்பத்தை டயர் தாங்க வேண்டியது இருக்கும். இந்த வெப்பம் நேரடியாக டயருக்குள் இருக்கும் காற்றுக்குள் கடத்தப்படும்.

இதன் காரணமாக டயருக்குள் இருக்கும் காற்று விரிவடைந்து அதன் பிரஷர் அதிகமாகும் இந்த பிரச்சனை அதிகமாவது காரணமாக பஞ்சர் அல்லது டயர் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்காக கார்களில் எப்பொழுதும் நைட்ரஜன் காற்றை அடைத்துக் கொள்வது நல்லது இந்த நைட்ரஜன் காத்து அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது. இதனால் இது போன்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அடுத்ததாக இன்ஜின் சூடாகி வாகனம் பழுதாகி நடுரோட்டில் நிற்கும் பிரச்சினையை பலர் சந்தித்து வருகிறார்கள். இதற்கு முக்கியமான காரணமும் வெப்பம்தான். இன்ஜின் வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் வெளியிலிருந்து வரும் காற்று அந்த வெப்பத்தை குளிர்விக்க வேண்டும். ஆனால் வெளியிலிருந்து வெப்பமான காற்று வருவதால் இன்ஜின் மேலும் சூடாகிறது.

இதை தவிர்ப்பதற்காக நீங்கள் வாகனங்களில் செல்லும்போது அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவதை தவிர்க்க வேண்டும். இதனால் இன்ஜினில் இருந்து குறைவான வெப்பம் தான் வெளியாகும் வெளியில் உள்ள வெப்பமும் சேரும்போது இது பெரிய அளவிலான வெப்பத்தை ஏற்படுத்தாது. இதனால் இன்ஜின் சூடாகி கார் நடுரோட்டில் நிற்கும் சம்பவங்கள் குறையும்.
அதே நேரம் இந்த பிரச்சனைக்கு ரேடியேட்டர் கூட காரணமாக இருக்கலாம். அதனால் நீங்கள் பயணத்தை துவங்கும் முன்பு ரேடியேட்டரில் உள்ள கூலன்ட் அளவை சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலும் ரேடியேட்டரில் ஓட்டை எதுவும் இருக்கிறதா பேனில் உள்ள பெல்ட் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்.
ரேடியேட்டர்களில் ஊற்றப்படும் தண்ணீர் சாதாரண தண்ணீராக ஊற்றினால் அது 100 டிகிரி வெப்பத்தில் ஆவி ஆகிவிடும். அதனால் நீங்கள் எத்தலின் கிளைக்கால் தண்ணீரை ரேடியேட்டரில் நிரப்பினால் அது 130° வரை ஆவியாகாமல் தடுக்கப்படும். இதனால் இன்ஜின் அதிகமாக குளிர வாய்ப்புகள் உள்ளது. இதனால் இன்ஜின் அதிகமாக சூடாகி நடுரோட்டில் நிற்கும் பிரச்சனை தவிர்க்கப்படலாம்.
அதே நேரம் கோடை காலத்தில் நீங்கள் காரில் பயணிக்கும் போது கட்டாயம் ஏசியை பயன்படுத்துங்கள். ஏசி இல்லாமல் காரில் பயணம் செய்யாதீர்கள். இது உங்களுக்கு உயிரே எடுக்கும் அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தி கூட ஏற்படுத்தி விட வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் ஏசியை அளவாகவும் பயன்படுத்துங்கள் ஏசி காற்று வெளியே போகாதபடி ஜன்னல்களை அடைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
காரில் வெண்டிலேட்டர் சீட் இல்லை என்றால் தனியாக ஏதாவது குஷன் போன்ற அமைப்பு அல்லது பாசி போன்ற விஷயங்களை சீட்டின் மீது போட்டு அதன் மீது அமர்வது ஓரளவு வெப்பம் உங்கள் உடலுக்கு ஏறுவதை தவிர்க்க உதவும். இது போன்ற விஷயங்களை செய்யும்போது இந்த கோடை கால வெப்பத்தை ஓரளவு சமாளிக்கலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கோடை காலத்தில் விடுமுறை என்பதால் நீங்கள் குழந்தைகளுடன் வெளியூர் செல்லலாம் என வாகனத்தை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற கோடை காலத்தை விட இந்த கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் நீங்கள் பல்வேறு விஷயங்களை சோதனை செய்துவிட்டு பயணித்து துவங்கினால் உங்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் பயணம் சுலபமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









