Summer வெயிலில் பைக்கை ஓட்டியே ஆக வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸ்களை கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க!!
சுட்டெரிக்கும் கோடை காலத்தை அடைந்துவிட்டோம். அடுத்த மே மாதத்தில் இருந்து அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க உள்ளது. இவ்வாறான கோடை வெயிலில் மோட்டார்சைக்கிளை ஓட்ட பலர் விரும்புவதில்லை. இருப்பினும், சிலரால் கோடையிலும் பைக்கை இயக்காமல் இருக்க முடியாது. அத்தகையவர்களுக்காக, கோடை காலத்தில் பைக்கை முறையாக பராமரிப்பதற்கான சில டிப்ஸ்...
இருக்கை கவரை மாற்றலாம்: வெயிலில் பைக்கை நிறுத்திவிட்டு அதன்பின் அதனை இயக்க இருக்கையில் அமர்ந்தால், எந்த அளவிற்கு சூடாக இருக்கும் என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும். கோடை காலத்தில் எவ்வாறான கம்பளி ஆடைகளை உடுத்தவே நாம் முயல்கிறோமோ அதேபோன்றுதான், பைக்கின் இருக்கைக்கும் வெப்பத்தை உமிழாத கவரை வாங்கி பொருத்தலாம். வெயிலில் நிறுத்திய பின்னர் பைக்கில் ஏறி அமர்வதற்கு முன்பாக இருக்கையின் மீது நீரை தெளித்துவிட்டு அமரலாம்.

ரைடிங் ஜாக்கெட்டை அணியலாம்: மழை மற்றும் பனி காலத்தில்தான் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு பயணிக்க வேண்டியிருக்கும், வெயில் காலத்தில் எல்லாம் அவ்வாறான ஜாக்கெட் தேவைப்படாது என்கிற தவறான கருத்து நம்மிடத்தில் உள்ளது. ரைடிங் ஜாக்கெட்டுகள் வெயிலின் வெப்பத்தை உள்ளே நுழைய அனுமதிக்காது என்பதால், ஜாக்கெட்டை கோடை காலத்திலும் தாராளமாக அணியலாம். அதற்கேற்ப காற்றோட்டமான ரைடிங் ஜாக்கெட்களை வாங்கவும்.
உடலின் நீர் சத்தை பராமரிக்கவும்: மற்ற நாட்களை காட்டிலும் கோடை காலத்தில் உடலில் இருந்து நீர் சத்து வேகமாக குறையும். ஆதலால் பைக் பயணித்தின்போது கூடவே ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்து செல்வது நல்லது. நீண்ட நேரத்திற்கு நீர் அருந்தாமல், அதன்பின் ஒரேடியாக அதிக நீரை அருந்துவதை காட்டிலும், அவ்வப்போது சிறுக சிறுக நீரை அருந்துவது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். ஆதலால் வெயிலில் பைக் ஓட்டுகிறீர்கள் என்றால், குறிப்பிட்ட நிமிட பயணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக நீர் அருந்தவும்.

பயண நேரத்தை திட்டமிடுங்கள்: முடிந்தவரையில், உச்சி வெயிலில் பைக் பயணம் வேண்டாம். ஆதலால் ஏதேனும் வேலை இருந்தால், அதனை அதிகாலையிலேயோ அல்லது வெயில் அதிகரிப்பதற்கு முன்பாகவோ முடித்துவிடுவது நல்லது. கோடை காலத்தில் சூரிய வெளிச்சம் சீக்கிரமாக காலை 6 மணிக்கு முன்பாகவே கிடைக்க ஆரம்பித்துவிடும். அவசரமற்ற பைக் பயணங்களை மாலையிலோ அல்லது இரவிலோ மேற்கொள்ளலாம்.
ஆக்ஸஸரீகளை பயன்படுத்தலாம்: பைக்கை குளிர்விக்கும் வகையில் எந்த ஆக்ஸஸரீயும் விற்கப்படுவதில்லை. ஆனால், வெயிலின் வெப்பத்தில் இருந்து பயணிகளை காக்கும் வகையில் சில பல ஆக்ஸஸரீகள் உள்ளன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கூலிங் வெஸ்ட். குளிர்ந்த காரை வழங்கக்கூடிய கூலிங் வெஸ்ட்டை பயன்படுத்தினால், நீண்ட நேரத்திற்கு குளிர்ச்சியான காற்றை பெறலாம்.

காற்று பாதுகாப்பு: கோடை காலத்திலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், காற்றும் வெப்பமாக இருக்கும் என்பதுதான். சூடான காற்றுடன் தூசியும், மண்துகள்களும் கலந்து வந்தால், எவரொருவரும் அசவுகரியமாக உணர்வார்கள். இதனை தவிர்க்க, உங்களது 2-வீலரில் விண்ட் ஷீல்டை பொருத்தலாம். பயணத்தின்போது, கூலிங் கிளாஸை பயன்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நம் நாட்டில் பல கிராம புற பகுதிகளில் சாலைகளின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நான் கூற வேண்டியது இல்லை. அப்படிப்பட்ட பயண சூழலை சூடான வெயிலில் எதிர்கொள்வது அவ்வளவு சரியானதாக தெரியவில்லை. ஆதலால், முடிந்தவரையில் உச்சி வெயிலில் பைக்கையோ, ஸ்கூட்டரையோ இயக்க வேண்டாம். அல்லது மேற்கூறப்பட்ட ஆக்ஸஸரீகளை உடுத்தி கொண்டு பயணம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









