தூய்மை இந்தியா: கார் இன்டிரியரை சுத்தமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை!
தூய்மை இந்தியா திட்டத்திற்காக, தனது கார்களில் சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகளை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. கார் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் இனிமையான பயணங்களுக்கு கேரண்டி. மேலும், கார் கேபினுக்குள் சிதறும் உணவுப் பொருட்களால் துர்நாற்றம் வரும் என்பதோடு, அது உடல்நலத்திற்கும் கேடானதாக அமையும்.
முந்துங்கள்... இச்சலுகை விலை ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!
குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் கார் கேபின் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். மேலும், கார் கேபினை சுத்தமாக பராமரிப்பதன் மூலம், தூசு தும்பட்டிகளால் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றையும் தவிர்க்கலாம். கார் கேபினை சுத்தமாக பேணுவதற்கான சில எளிய வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.

திண்பண்டங்கள்
திண்பண்டங்களை காருக்குள் வைத்து உண்பதை தவிர்த்தாலே பாதி பிரச்னை குறையும். இடுக்குகளில் விழும் திண்பண்டங்களிலிருந்து சில நாட்களில் கெட்ட வாடை வீச ஆரம்பிக்கும். எனவே, நொறுக்குத் தீனிகளை காருக்குள் வைத்து உண்பதை தவிர்க்கலாம். நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டுமெனில், காரை சில நிமிடங்களில் நிறுத்திவிட்டு வெளியே நின்று சாப்பிடலாம். வயிறும் நிறைந்து போவதோடு, சற்று ஆசுவாசப்படுத்தியது போலவும் உணரலாம்.

தண்ணீர் குடிப்பது
காருக்குள் குழந்தைகளுக்கு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை அருந்த கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் சிந்தி சில சமயங்களில் பவர் விண்டோஸ் சுவிட்ச் போன்ற எலக்ட்ரிக் பாகங்களில் பிரச்னை எழு வாய்ப்புண்டு. மேலும், குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்கு கூட தொண்டை அடைக்கும் ஆபத்தும் அதிகம். காரின் வேகத்தை குறைத்து சாலை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு தண்ணீர் அருந்தலாம். மேலும், கார் ஓட்டிக் கொண்டே தண்ணீர் அருந்தும்போதும் சில சமயம் கவனக்குறைவு ஏற்படவும், தொண்டையில் நீர் அடைத்து விபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு.

தூசி தும்பட்டிகள்
கார் ஜன்னலை திறந்து விட்டு ஓட்டும்போது அதிக அளவில் காருக்குள் தூசி, தும்பட்டிகள் படியும். எனவே, நேரம் கிடைக்கும்போதெல்லாம், கார் வாக்கம் க்ளீனர் மூலமாக மிதியடிகள், ஏசி வென்ட்டுகள், இருக்கைகள், அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சென்டர் கன்சோலை வாக்கம் க்ளீனரின் சாஃப்ட் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். மேலும், 15,000கிமீ தூரத்துக்கு ஒருமுறை கார் கேபின் ஏர் ஃபில்டரையும் மாற்றுவது அவசியம். வீட்டிற்கு வந்தவுடன் தேவையில்லாத கவர்கள், குப்பைகளை எடுத்துவிடங்கள். மிதியடிகளை சுத்தம் செய்து போட்டு விட்டு காரை பூட்டிச் செல்லுங்கள்.

எண்ணெய் அழுக்கு
திண்பண்டங்களை சாப்பிட்ட பின்னால் சிலர் கைகளை இருக்கைகளில் வைத்து விடுகின்றனர். இதனால், எண்ணெய் பிசுக்கு கறை இருக்கைகளை சுத்தத்தை கெடுத்துவிடும். குறிப்பாக, லெதர் இருக்கைகள் பயன்படுத்துவோர் எண்ணெயில் பொறிக்கப்பட்ட திண்பண்டங்களை அறவே தவிர்ப்பது அவசியம். மேலும், லெதர் இருக்கைகளை சுத்தப்படுத்தும்போது, அதற்கான பிரத்யேக பாலிஷை பயன்படுத்தவும். மேலும், புதிய பாலிஷை பயன்படுத்தும்போது, சிறிய பகுதியில் தேய்த்து பார்த்துவிட்டு, பின்னர் இருக்கை முழுவதையும் சுத்தப்படுத்தவும். சில பாலிஷ்கள் அதிக வழுவழுப்பையும் கொடுத்து, இருக்கையில் அமரும்போது பிடிமானம் இல்லாமல் செய்துவிடும். எண்ணெயில் பொறித்த திண்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு, கையை துடைக்காமல் ஸ்டீயரிங் வீலை பிடித்தால் வழுக்கும் வாய்ப்பு அதிகம்.

சிகரெட் சாம்பல்
கார் ஓட்டும்போதும், உடன் செல்லும்போதும் சிகரெட் பிடிப்பதை தவிர்க்கலாம். சிகரெட்டிலிருந்து விழும் சாம்பலும், அந்த வாடையும் காரில் படிய துவங்கும். மேலும், குடும்பத்தினர் மற்றும் உங்களது குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். சில சமயம் உங்களது தோழியை காரில் அழைத்து செல்ல விரும்பும்போது, அவர் முகம் சுழித்து வர மறுக்கலாம்.

பிளாஸ்டிக் பைகள்
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு தீங்கானதாக குறிப்பிட்டாலும், தற்சமயம் 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தலாம். எனவே, காரில் எப்போதும் பிளாஸ்டிக் பைகளை வைத்து குப்பைகளை அதில் சேர்த்து குப்பைத் தொட்டியில் சேர்த்துவிடங்கள். கண்ட இடங்களில் கொட்டுவதையும், காரில் செல்லும்போதே கை கழுவுவதையும், பிளாஸ்டிக் கவர்களை ரோட்டில் வீசி எறிவதையும் தவிர்க்கவும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை கார் இன்டிரியரை சுத்தம் செய்து பாலிஷ் செய்தால், இன்டிரியர் பளிச்சென சுத்தமாக இருக்கும். தரமான ஏர் ப்ரெஷ்னரை வாங்கி பயன்படுத்துங்கள். நமது குடும்பத்தால் உடல்நலத்திற்கும், கார் நலத்திற்கும் இது சிறப்பானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








