பருவ வயதில் பாதுகாப்பான டிரைவிங் - சில டிப்ஸ்
விபத்து குறித்த செய்தி இல்லாத நாள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகம் நடப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கள் ஏற்படுவதற்கும், விபத்தில் உயிரிழப்புகளிலும் இளைய சமுதாயத்தினரின் பங்கு அதிகமிருப்பதாகவும் அந்த விபரங்கள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக 20 வயது முதல் 30 வயதுடையோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு காரணம் அந்த வயதில் இருக்கும் அசட்டு துணிச்சலும், முறையான டிரைவிங் பயிற்சி இல்லாததுமே காரணங்களாக உள்ளன. இளைய சமுதாயத்தினரின் அலட்சிய டிரைவிங்கால் அவர்கள் மட்டுமின்றி, எதிரில் வரும் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இதனை தவிர்க்கும் விதமாக டிரைவிங்கின்போது கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டு முறைகளை ஸ்லைடரில் காணலாம்.

ப்ளான் பண்ணி போகணும்
ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், எவ்வளவு தூரம், சாலையில் போக்குவரத்து நிலவரம் ஆகியவற்றை கணக்கிட்டுக் கொண்டு ஒரு 10 நிமிடமாவது முன்கூட்டியே கிளம்புவது உத்தமம். இது தேவையற்ற டென்ஷனையும், வேகத்தையும் தவிர்க்கும்.

மொபைலில் பேச்சு
மொபைல்போனில் பேசிக் கொண்டே செல்வதால்தான் பெரும்பாலான இளைஞர்கள் விபத்தில் சிக்குவதற்கு காரணமாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, போனில் பேசுவதை அறவே தவிருங்கள். அப்படி அவசரமாக பேச வேண்டியிருந்தால், டிரைவிங் செய்வதை தெரிவித்து பின்னர் அழைப்பதாக துண்டித்து விடுங்கள்.

பேச்சை குறைப்பீர்
நண்பர்களுடன் சேர்ந்து செல்லும்போது அரட்டை அடிப்பது, தேவையில்லாத விஷயங்களை அதிகம் பேசாதீர். இது நிச்சயம் கவனக் குறைவை ஏற்படுத்தும். பேசாமல் செல்ல முடியாது என்றாலும், பேச்சை குறைத்துக் கொண்டு சாலையில் கவனம் செலுத்துவது நல்லது.

நிதானம்
எப்போதும் நிதானமாக ஓட்டப் பழகுங்கள். குறிப்பாக, கோபம் அல்லது துக்கமாக இருக்கும் சமயங்களில் அவசரப்படாமல், மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டு புறப்படுங்கள்.

மது வேண்டாம்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை அறவே தவிருங்கள். எத்தனை ஆண்டு அனுபவம் கொண்ட சூரப்புலியாக இருந்தாலும், மது போதையில் முழுமையான கட்டுப்பாடு கிடைக்காது.

மியூசிக் சிஸ்டம்
புறப்படும்போது உங்களுக்கு பிடித்த பாடல் கலெக்ஷனை தேர்வு செய்து மிதமான ஒலி அளவுடன் மியூசிக் சிஸ்டத்தை இயக்குங்கள். டிரைவிங் செய்யும்போது அடிக்கடி மாற்றுவம், ஒலி அளவை கூட்டிக் குறைத்துக் கொண்டே செல்வதும் விபத்துக்கு வழி கோலும்.

வேக கட்டுப்பாடு
சாலைக்கான வேகக்கட்டுப்பாட்டு அளவை மீறி செல்லாதீர். இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி செல்வதும் விபத்துக்களுக்கு அடி கோலுகிறது.

தற்காப்பு டிரைவிங்
சாலைக்கான வேகக்கட்டுப்பாட்டு அளவை மீறி செல்லாதீர். இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை மீறி செல்வதும் விபத்துக்களுக்கு அடி கோலுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்
கார் வாங்கும்போது ஏபிஎஸ், ஏர்பேக் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகள் கொண்ட வேரியண்ட்டுகளை தேர்வு செய்து வாங்குங்கள்.


Click it and Unblock the Notifications








