தீபாவளி போனஸை நல்ல விதமா செலவு பண்ணனும்னா இந்த விஷயத்தை கரெக்டா பண்ணுங்க!

தீபாவளியை முன்னிட்டு பலர் புதிதாக கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இதனால் பல காரணங்களின் ஷோரூமிற்க்கு சென்று அவர்களுக்கு பிடித்த கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பார்கள். இப்படியாக டெஸ்ட் டிரைவ் செய்யும்போது எதையெல்லாம் செக் செய்ய வேண்டும் என காணலாம் வாருங்கள்.

தீபாவளி நெருங்கி விட்டது, இன்னும் பத்து நாட்களில் நாம் அனைவரும் தீபாவளியை கொண்டாட உள்ளோம். இதனால் வேலைக்கு செல்லும் பலருக்கு அவர்களது அலுவலகத்தில் இருந்து தீபாவளி போனஸ் வழங்கி இருக்கக்கூடும். பலர் தங்கள் வாழ்நாள் கனவான கார் வாங்கும் கனவை இந்த தீபாவளிக்கு நிறைவேற்ற ஒரு காரை வாங்கலாம் என முடிவு செய்திருப்பார்கள்.

test drive tips

இப்படியாக போனஸ் வந்த கையோடு அவர்கள் ஒவ்வொரு கார் நிறுவனத்தின் ஷோரூமிற்கும் சென்று இவ்வளவு நாள் அவர்கள் வாங்க வேண்டும் என கனவில் வைத்திருந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பார்கள். முதன்முறையாக கார் வாங்கும் பலருக்கு டெஸ்ட்டை செய்யும்போது இதையெல்லாம் செக் செய்ய வேண்டும் என்ற புரிதல் சரியாக இருக்காது. கார் ஓட்டும்போது நன்றாக இருக்கிறதா என்ற அனுபவத்தை மட்டுமே பார்ப்பார்கள்.

காரின் மற்ற விஷயங்கள் கார் வாங்கிய பின்பு நமக்கு எதெல்லாம் பிரச்சனையாக இருக்கும், என்பதை கண்டறிந்து அதை முன்கூட்டியே சோதனை செய்து பார்ப்பது உள்ளிட்டவற்றை செய்யாமல் விட்டு விடுவார்கள். அவர்களுக்கு ஒரு ஆலோசனையாக நாம் இங்கே புதிதாக கார் வாங்கும்போது அதை டெஸ்ட் செய்யும் போது, இதையெல்லாம் செக் செய்ய வேண்டும் என பட்டியலிட்டுள்ளோம்.

test drive tips

நீங்கள் வாங்கும் வேரியன்டை டெஸ்ட் செய்யவும்: கார் வாங்கும் பலர் முன்கூட்டியே தாங்கள் எந்த நிறுவனத்தின் எந்த மாடல் காரை வாங்க வேண்டும் என்ற முடிவுடன் தான் ஷோரூமிற்கு வருவார்கள். ஷோரூமில் குறிப்பிட்ட காரை டெஸ்ட் செய்து விட்டு அந்த காரை புக்கிங் செய்வார்கள்.

ஆனால் அவர்கள் டெஸ்ட் செய்தது ஒரு வேரியண்டாக இருக்கலாம், அவர்கள் புக்கிங் செய்வது வேறு வேரியன்டாக இருக்கலாம். இப்படியாக இருக்கும் போது நீங்கள் டெஸ்ட் செய்யும் போது கார் எப்படி உங்களுக்கு ஒரு அனுபவத்தை கொடுத்ததோ அதே அனுபவத்தை நீங்கள் கார் வாங்கிய பின்பும் பெறுவது கஷ்டம்.

test drive tips

சில வேரியின்ட்களில் இன்ஜின் கூட மாறுதல் இருக்கும். சில வேரியண்ட்களில் உட்புற வசதிகளில் மாறுதல்கள் இருக்கும். அதனால் நீங்கள் எந்த வேரியண்ட்டை வாங்க முடிவு செய்துள்ளீர்களோ அந்த வேரியன்ட் காரையே டெஸ்ட் செய்வது நல்லது. அப்பொழுது தான் கார் வாங்கிய பின்பு எந்த பிரச்சனையும் வராது.

சரியான நேரத்திற்கு செல்லுங்கள்: பெரும்பாலும் ஷோரூம் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்குவார்கள். அந்த நேரத்தில் மட்டுமே நாம் காரை எடுத்துக்கொண்டு ஓட்டிப் பார்க்க முடியும். பெரும்பாலும் மாலை 5-6 என்ற நேரத்தில் தான் டெஸ்ட் டிரைவ் நடைபெறும்.

test drive tips

இதனால் உங்களுக்கு வழங்கப்படும் நேரத்தை அறிந்து அதற்கு முன்பாகவே நீங்கள் ஷோரூமில் இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் காரை டெஸ்ட் செய்ய உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும். அவசரகதியில் காரை டெஸ்ட் டிரைவ் செய்தால் நீங்கள் சில விஷயங்களை கவனிக்க தவறி விடுவீர்கள்.

அடுத்தடுத்து கார்களை உடனே டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்: சிலருக்கு கார் வாங்கும் போது இரண்டு மூன்று தேர்வுகள் இருக்கும் இதில் எந்த காரை வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும். இதனால் டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு அதன் அடிப்படையில் காரை தேர்வு செய்யலாம் என முடிவு செய்வீர்கள். அப்படியாக டெஸ்ட் டிரைவ் செய்யும் போது அடுத்தடுத்து வேறு வேறு கார்களில் உங்கள் டெஸ்ட் டிரைவ்கள் இருக்கும்படி திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் உங்கள் அனுபவத்தை ஒப்பிட்டுப் பார்க்க சரியாக இருக்கும். ஒரு மாதம் ஒருக்கார் மற்றொரு மாதம் வேறு ஒரு கார் என நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தால் முதல் காரை டெஸ்ட்டை செய்யும் போது ஏற்பட்ட அனுபவத்திற்கும் தற்போது டெஸ்ட் டிரைவ் செய்யும் போது ஏற்படும் அனுபவத்திற்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியாது.

குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் செல்லுங்கள்: நீங்கள் உங்கள் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் போது எப்பொழுதும் உங்கள் குடும்பத்தினர்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பர்களை அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்கு என்ன தேவை என்பது உங்களைவிட அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் நீங்கள் சில நேரங்களில் அவசரமாக தவறான முடிவை எடுக்கும் நிலையில் இருந்தாலும், அவர்கள் உங்களை திருத்தி உங்களுக்கு தேவையான கார் எதுவோ அதை தேர்வு செய்ய உதவியாக இருப்பார்கள்.

அடிப்படை விஷயங்களை கவனியுங்கள்: ஒரு காரை நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் போது அதனை அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டியது முக்கியமாகிறது. டிரைவிங் அனுபவம், இன்ஜின் திறன், ஸ்டேரிங் திருப்புவதற்கு எப்படி இருக்கிறது? கியர் மாற்றும்போது எப்படி இருக்கிறது? பிரேக்கிங் எப்படி இருக்கிறது? சீட் சொகுசு எப்படி இருக்கிறது? உள்ளிட்ட விஷயங்களை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும்.

பிரேக்கிங் டெஸ்ட் செய்யும் போது வேறு வேறு வேகங்களில் சென்று பிரேக் பிடித்து பார்க்க வேண்டும். இதுபோக இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பட்டன்கள் செயல்பாடு ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் விற்பனை அதிகாரியுடன் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மைலேஜ் உள்ளிட்ட விபரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் கார் வாங்க வேண்டும் என எடுக்கும் முடிவு உங்கள் வாழ்நாளில் மிக முக்கியமான முடிவாக இருக்கும். இதனால் இந்த முடிவை திறம்பட எடுக்க வேண்டும். காரை டெஸ்ட் டிரைவ் செய்யும் போது கனவமாக இருந்தாலே நீங்கள் 50% நல்ல காரை தேர்வு செய்துவிடாலாம். உங்கள் கார் கனவு நினைவாக எங்கள் வாழ்த்துக்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 1, 2023, 17:59 [IST]
English summary
Test drive tips to keep in mind when test drive your new car
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X