காரை பார்க்கிங்ல போட்டுட்டு வெளியூர் போயிடீங்களா? திரும்ப கார எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க!
காரை நீண்ட நாட்களாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூர் செல்லும் போது வாகனத்திற்குப் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பலர் நீண்ட நாட்களாக வெளியூர் செல்லும் போது தங்கள் கார்களை பத்திரமாக பார்க்கிங்கில் நிறுத்திவிட்டுச் செல்கிறார்கள். அவர்கள் திரும்ப வந்ததும் காரில் ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதை எப்படித் தடுப்பது என்று தான் இந்த பதிவில் காணப்போகிறோம்.

டிப்ஸ் 1
நீண்ட நாட்களாக காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வெளியூர் சென்றுவிட்டுத் திரும்ப வந்ததும் காரில் இருக்கும் பெட்ரோலை வைத்தே காரை ஓட்ட முயற்சி செய்யாதீர்கள், முதலில் பெட்ரோல் பங்க்கிற்கு சென்று புதிய பெட்ரோலை போட்டுக்கொள்ளுங்கள். ஏற்கனவே நீண்ட நாட்களாக டேங்கில் உள்ள பெட்ரோல் பல கெமிக்கல் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் இது காரை சேதமாக்கலாம்.
டிப்ஸ் 2
நீண்ட நாட்களுக்குப் பிறகு காரை பயன்படுத்தத் துவங்குகிறீர்கள் என்றால் முதலில் காரின் இன்ஜின் ஆயிலை செக் செய்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக கார் பயன்படுத்தாமல் இருப்பதால் இன்ஜின் ஆயில் ஒன்றும் மாயமாக எல்லாம் போகாது ஆனால் இது முழுவதும் கருப்பாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட ஆயில் இன்ஜினை சேதப்படுத்திவிடும். இதனால் நீங்கள் இன்ஜின் ஆயிலை சோதித்துத் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்வது சிறந்தது.
டிப்ஸ் 3
நீண்ட நாட்களாக வாகனத்தை நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் வாகனத்தின் பேட்டரி பெரிய அளவில் பாதிக்கப்படும். பேட்டரி டவுண் ஆகி ஸ்டார்ட் ஆகாமல் கூடப் போக வாய்ப்பு இருக்கிறது. டூவீலர் வைத்திருக்கும் பலர் இந்த பிரச்சனையைச் சந்தித்திருப்பார்கள். காரை விட டூவீலர் பேட்டரி தான் விரைவில் இந்த பிரச்சனையைச் சந்திக்கும்.
டிப்ஸ் 4
நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் காரை நிறுத்திவைத்திருக்கிறீர்கள் என்றால் இத்தனை நாட்களாக டயரின் ஒரே பகுதி மட்டும் தான் உங்கள் காரின் மொத்த எடையையும் தாங்கிக்கொண்டே இருக்கும். காரை அவ்வப்போது பயன்படுத்தினால் டயரில் எடையைத் தாங்கும் பகுதி மாறிக்கொண்டே இருக்கும் இதனால் பாதிப்பு இருக்காது. ஆனால் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நின்ற காரின் டயர் நிச்சயமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் அதையும் செக் செய்து கொள்வது நல்லது.
மேலே சொன்ன டிப்ஸ் எல்லாம் நீண்ட நாட்கள் என்ற ஒரு பொதுவான அடிப்படையிலேயே சொல்லப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு வாரமும் நீண்ட நாள் தான் மாதக் கணக்கில் காரை பயன்படுத்தாமல் இருப்பதும் நீண்ட நாட்கள்தான். இதனால் மேலே சொன்ன பாதிப்புகள் எல்லாம் கட்டாயம் ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இதை ஒரு டிப்ஸாக உங்களுக்கு வழங்கியுள்ளோம்.


Click it and Unblock the Notifications








