பிரேக் ஃபெயிலியரில் ஆந்திராவில் 3 பேர் உயிரிழப்பு!! இதையெல்லாம் டிரை பண்ணீங்கன்னா விபத்து நடக்காது!

வாகனம் ஒன்றை இயக்குவது சாதாரணமான விஷயமாக நமக்கு தோன்றலாம். ஆனால், எவ்வளவு பெரிய காரியத்தை நாம் தினந்தோறும் செய்துக் கொண்டிருக்கிறோம் தெரியுமா? டன்களில் எடைக் கொண்ட உலோகத்தை, இரப்பர் டயரின் மீது ஏற்றி இயக்கிக் கொண்டிருக்கிறோம். அதன் இயக்கத்திற்கு குறுக்கே யாராவது வந்தால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளதை நாள்தோறும் சாலை விபத்துகளின் மூலம் பார்த்து வருகிறோம்.

அதிவேகத்தில் இயங்கும் உலோக வாகனத்தை நிறுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே தொழிற்நுட்ப கருவி பிரேக் மட்டுமே. அது சரியாக செயல்படவில்லை என்றால், மொத்தமும் காலி. சமீபத்தில்கூட, ஆந்திராவில் பிரேக் பிடிக்காமல் சென்ற பேருந்து அங்கிருந்த பயணிகள் மீது மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வாகனத்தில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் அந்த சமயத்தில் பதற்றமடையாமல் இந்த விஷயங்களை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக செய்து பாருங்கள்.

vehicle brakes fail what to do

ஆக்ஸலரேட்டரை குறையுங்கள்: பிரேக் பிடிக்காத போது வாகனத்தின் வேகத்தை குறைப்பதுதான் முதலாவதாக நாம் செய்ய வேண்டியது. ஆனால், அதற்காக உடனடியாக ஆக்ஸலரேட்டர் பெடலில் இருந்து காலை எடுத்துவிடாதீர்கள். வாகனம் கண்ட்ரோல் இல்லாமல் செல்லலாம். ஆதலால், பதற்றத்தில் அவசரப்படாமல் மெதுவாக பெடலில் இருந்து காலை எடுக்கவும்.

மற்றவர்களை எச்சரிக்கவும்: வாகனத்தின் வேகத்தை குறைத்த பின், வாகனத்தை உங்கள் கண்ட்ரோலில் கொண்டுவருதல் முக்கியம். பின்னர், சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை எச்சரிப்பதற்காக வாகனத்தின் ஹெட்லைட்களை வேகமாக விட்டு விட்டு எரியவிடுங்கள். அதேநேரம், ஹார்னை அலறவிட்டப்படி செல்லுங்கள்.

vehicle brakes fail what to do

வாகனத்தை நிறுத்த முயற்சித்தல்: வாகனத்தில் க்ரூஸ் கண்ட்ரோல் தொழிற்நுட்பம் இருந்தால், அதனை அணைத்துவிடுங்கள். கியர்களை மெதுவாக குறைத்து, வாகனத்தின் வேகத்தை இன்னும் குறைக்கவும். இது உங்களது பதற்றத்தை வெகுவாக குறைத்துவிடும். ஆனால், பெரும்பாலான வாகனங்கள் இவ்வாறு செய்தாலும் முற்றிலுமாக வேகத்தை இழந்து நிற்காது.

அவசரகால பிரேக்கை பயன்படுத்தவும்: எமர்ஜென்சி பிரேக் வாகனத்தை முற்றிலுமாக நிறுத்தாது. ஆனால், வாகனத்தின் வேகத்தை வெகுவாக குறைக்கும். ஆனால், இத்தகைய பிரேக்கை பயன்படுத்துவதில் உள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தும்போது வாகனம் முழுவதும் உங்களது கண்ட்ரோலில் இருக்க வேண்டும்.

vehicle brakes fail what to do

சாலைக்கு ஓரமாக செல்லுதல்: வாகனம் மெதுவாக சென்றாலும், ஏதேனும் ஒரு பொருள் மீது லேசாக மோதியே வாகனத்தை நிறுத்த வேண்டியதாக இருக்கும். அதற்கு முதலில், சாலையில் இருந்து வாகனத்தை ஓரங்கட்ட வேண்டும் (சாலையோரத்தில் மேடு, பள்ளம் இல்லாதப் பட்சத்தில்). வாகனத்தை ஓரங்கட்டுவதற்காக ஸ்டேரிங் சக்கரத்தை பயன்படுத்தும்போது கவனம் தேவை.

பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவும்: உங்களால் வாகனத்தை நிறுத்தவே முடியவில்லை, எப்படியிருந்தாலும் எதோ ஒரு பொருள் மீது மோத போகிறது என நிலைமை கைமீறி போகும்போது எடுக்க வேண்டிய கடைசி செயல்முறை. அதாவது, மோதலில் தற்காதுக் கொள்ள, ஏதேனும் பொருட்களை கவசமாக கை, கால்களுக்கு முன்னே பிடித்துக் கொள்ள வேண்டும்.

vehicle brakes fail what to do

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆதலால், பிரேக் பிடிக்காத வாகனத்தை ஒரு உராய்வு கூட இல்லாமல் நிறுத்துவது கடினம் என்பதை இதன் மூலம் புரிந்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால், பயப்பட வேண்டும். வாகனங்களில் பிரேக் சிஸ்டம் செயல்படாமல் போவது அரிதானதே. அதுவும் இன்றைய கால மாடர்ன் பிரேக் சிஸ்டங்களில் சான்ஸ் மிகவும் குறைவு.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 7, 2023, 7:00 [IST]
English summary
Things to do while vehicle brakes fail check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X