புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

புதிய கார் வாங்குவதற்கு இதுவே சரியான தருணமாக கூறலாம். அதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

பொதுவாக டிசம்பரில் கார் விற்பனை மந்தமாக இருப்பதால், அதிகபட்சமான தள்ளுபடி மற்றும் சிறப்பு சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கார் நிறுவனங்கள் கவர்ந்து இழுப்பது வாடிக்கை. எனினும், ஓர் ஆண்டு வித்தியாசம் ஏற்பட்டு விடும் என்று கருதி, புத்தாண்டு பிறந்தவுடன் கார் வாங்குகின்றனர்.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

ஆனால், சில வேளைகளில் புத்தாண்டில் கார் வாங்கினாலும், அது புதிய வருடத்தில் தயாரிக்கப்பட்ட கார்தானா என்பதில் சந்தேகம் இருக்கிறது. சில டீலர்களில் இருப்பு வைக்கப்பட்ட கார்களை வாடிக்கையாளர்களிடத்தில் கொடுத்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

இந்த சூழலை தவிர்ப்பதற்கு மார்ச் மாதத்தில் கார் வாங்குவது அனுபவம் வாய்ந்தவர்கள் பின்பற்றும் வழியாக இருக்கிறது. ஏனெனில், கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட இருப்பு வைக்கப்பட்ட கார்கள் என்ற பேச்சுக்கு இடமிருக்காது.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

அதுமட்டுமின்றி, மார்ச் மாதத்துடன் நிதி ஆண்டு முடிவடைவதால், விற்பனை இலக்கை தொடுவதற்காக பல நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளையும் தருவது வாடிக்கை. எனவே, இந்த மாதத்தில் கார் வாங்குவது சிறப்பானதாக அமையும்.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

மற்றொரு விஷயத்தையும் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை விலை உயர்வு பற்றி கார் நிறுவனங்கள் பரிசீலிக்கும். கடந்த ஜனவரியில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் விலை உயர்த்தின. அடுத்ததாக, வரும் ஏப்ரல் மாதம் விலை உயர்வை கையில் எடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

எனவே, கார் வாங்குவதற்கு மிக ஏற்ற மாதம் மார்ச் என்றால் மிகையில்லை. இந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட கார்கள்தான் டெலிவிரி கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாங்க முடியும். கூடுதலாக சலுகைகளை பெற முடியும் என்பதோடு, விலை உயர்விலிருந்து தப்பிக்கவும் ஏதுவாகும்.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

எனினும், இப்போது முன்பதிவு செய்பவர்கள், ஒருவேளை விலை உயர்வு அறிவிக்கப்பட்டாலும் இப்போதைய விலையிலேயே கார் வாங்க டெலிவிரி கொடுக்கப்படுமா என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

இருப்பு தேங்குவதை தவிர்ப்பதற்காக, இப்போது கார் நிறுவனங்கள் டிசம்பரில் உற்பத்தியை குறைத்துவிடுகின்றன. எனினும், சில கார் நிறுவனங்களின் டீலர்களில் இருப்பு தேங்கிவிடும். அதனை விற்பதற்கு உங்களை உபாயமாக பயன்படுத்திவிடும் வாய்ப்புள்ளது.

புதிய கார் வாங்க இதுவே சரியான தருணம்... ஏன் தெரியுமா?

காரின் தயாரிப்பு வருடத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இங்கே க்ளிக் செய்து அதற்கான முறைகளை தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 9, 2017, 13:44 [IST]
English summary
Read in Tamil: This Is The Best Time To Buy New Car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+