தண்ணீரில் மூழ்கிய வாகனத்தை சரி செய்ய நல்ல மெக்கானிக்கை தேர்வு செய்வது எப்படி?
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து மழை வெள்ள நீரில் சென்னை மாநகரை தத்தளித்து வருகிறது. இதில் பல வாகனங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இப்படியாக நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய சரியான மெக்கானிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் செய்தான் இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கியமான பகுதிகள் எல்லாம் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மழை நீரை அப்புறப்படுத்தவும் மக்களை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மழை நீரால் மக்களுடன் சேர்ந்து வாகனங்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், அப்பார்ட்மெண்டில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் எல்லாம் மழை வெள்ள நீர் சூழ்ந்து, காருக்குள் தண்ணீர் ஏறி நீருக்குள் வாகனமே மூழ்கி பல அசம்பாவிதங்கள் இன்று நிகழ்ந்துள்ளது. இப்படியாக பாதிக்கப்பட்ட வாகனங்கள் தண்ணீர் வடிந்த பின்பு மெக்கானிக்கிடம் கொண்டு செல்லப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.
மழை வெள்ளநீரில் உங்கள் வாகனம் சிக்கினால் உங்கள் வாகனத்தின் இன்ஜினிற்குள் தண்ணீர் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் உரிய மெக்கானிக்கிடம் இதை கொண்டு சென்று அங்கு சரி செய்த பின்பு தான் வாகனத்தை நீங்கள் ஸ்டார்ட் செய்ய வேண்டும். இப்படியாக இந்த பிரச்சினையை சரி செய்யும் சரியான மெக்கானிக்கை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்று தான் இங்கே நாம் காண போகிறோம்.

உங்கள் வாகனம் மழை வெள்ள நீரில் பாதிக்கப்பட்டு மழை வெள்ளநீர் உங்கள் வாகனத்தின் இன்ஜின் உள்ளே சென்றுள்ளது என நீங்கள் கருதினால் முதலில் சரியான மெக்கானிக்கை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாகும். பெரும்பாலும் புதிய கார் என்றால் வாகன தயாரிப்பு நிறுவனமே நடத்தும் சர்வீஸ் சென்டர் எங்கே இருக்கிறது என தேடி பார்த்து அங்கே சென்று உங்கள் காரை சோதனை செய்து கொள்வது தான் நல்லது.
இப்படியாக நீங்கள் உங்கள் வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லும்போது அங்கு ஏற்கனவே உங்களைப் போல பல வாகனங்கள் சர்வீஸிற்காக வந்திருக்க கூடும். அதனால் நீங்கள் உங்கள் வாகனத்தை சர்வீஸ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு வேலை நீங்கள் குறிப்பிட்ட சர்வீஸ் சென்டரில் அதிக காலம் எடுக்குமானால் அதே நிறுவனத்தின் மற்றொரு சர்வீஸ் சென்டரில் விரைவாக இந்த வேலை முடியெல்லாம். அதனால் சர்வீஸ் சென்டரில் பிரச்சினையை சொல்லி எவ்வளவு காலம் சர்வீஸ் செய்ய நேரம் எடுக்கும் என்பதை அறிந்து கொண்டு வாகனத்தை சர்வீஸ் கொண்டு செல்வது நல்லது.
அதேபோல வாகனத்தின் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்றதாக நீங்கள் நினைத்தால் உங்கள் இன்ஜினை கழட்டி வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்ஜினை கழட்டி வேலை பார்க்க வேண்டியது என்பது மிக முக்கியமான பொறுப்புடன் செய்ய வேண்டிய வேலையாக இருக்கிறது. இதனால் இந்த வேலைக்கு எவ்வளவு நாள் கேரண்டி வழங்கப்படும் என்ற விவரத்தையும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களிடம் பழைய கார் இருந்தால் நீங்கள் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல முடியாது. ஷோரூம் சர்வீஸ் சென்டர் உங்கள் இல்லத்திற்கு அருகே இல்லை என்றாலும் நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்ல முடியாது. இந்த நேரங்களில் அருகில் உள்ள மற்ற மெக்கானிக்கை தான் நீங்கள் தேட வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த மாதிரி நேரத்தில் உங்களுக்கு நம்பக தன்னை வாய்ந்த மெக்கானிக்கை தேர்வு செய்வது தான் சிறந்தது.
அதே நேரம் எந்த மெக்கானிக்காக இருந்தாலும் உங்கள் பிரச்சினையை சரி செய்ய அவர்கள் எவ்வளவு பணம் வசூல் செய்வார்கள் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இன்ஜினை கழட்டி வேலை செய்ய அதிக பணம் செலவாகும். இதனால் இதை முன்கூட்டியே அறிந்து கொண்டு உங்கள் வாகனத்தை சர்வீஸ் கொண்டு செல்லுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனத்தில் உள்ளே தண்ணீர் புகுந்து விட்டது என்றால் அது என்ஜின் வரைக்கும் தாக்கி இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலையை ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கல் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். அதனால் நீங்கள் உங்கள் வாகனத்தை சர்வீஸ் கொண்டு செல்லும்போது நல்ல மெக்கானிக்கை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









