கார் வாங்குவது பெரிய விஷயம் அல்ல... கழுவுவதில் தான் நிறைய பேர் தப்பு பண்றாங்க!!

புதியதாக காரை வாங்குவதை காட்டிலும் அதனை முறையாக பராமரிப்பது தான் பெரிய வேலை ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்தால், கார் எப்போதும் போல் சீராக இயங்கும். குறைந்தப்பட்சம், அவ்வப்போது காரை கழுவி சுத்தமாக வைத்திருக்க முயலுங்கள். காரை சுத்தம் செய்வதில் சில சந்தேகங்கள் சிலருக்கு இருக்கலாம். அதாவது, காருக்கு கொடுக்கப்பட்ட ஆயில்களையும் சுத்தம் செய்யும்போது முற்றிலுமாக அகற்றிவிட வேண்டுமா போன்ற கேள்விகள் எழலாம். அவற்றிற்கான பதில்களை தான் இந்த தொகுப்பில் இனி பார்க்க போகிறோம்.

காரின் வெளிப்பக்க தோற்றத்தை முறையாக பராமரிப்பது முக்கியமாகும். சாலையில் இருந்து ஒட்டிக்கொள்ளும் தார், காருக்கு கொடுக்கப்படும் ஆயில் மற்றும் க்ரீஸ்கள் காரின் பெயிண்ட்டை சேதப்படுத்தி, காரின் வெளிப்பக்க தோற்றத்தை அலங்கோலமாக்க கூடும். ஆதலால், ஒவ்வொரு முறை காரை கழுவும்போதும் இவற்றை நீக்கி விடுவது நல்லது.

how to remove oil grease

ஆனால், இவற்றை அகற்றுவது அவ்வளவு எளியது கிடையாது. காருக்கு கொடுக்கப்படும் ஆயில்கள் மட்டுமின்றி, வேறு வாகனங்களில் இருந்தும் ஆயில் உங்கள் கார் மீது படுவதற்கு வாய்ப்புள்ளது. இவை உங்களது காரின் அழகை கெடுப்பது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு அவற்றை அகற்றாமல் விட்டால், அவை உங்களது காரின் வெளிப்புறத்தையும் சேதப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: மெல்லியதான துணி, தார் நீக்கி அல்லது க்ரீஸ் நீக்கி (துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் பவுடரை கூட பயன்படுத்தலாம்), ஒரு வாளியில் கொஞ்சம் சூடான நீர் மற்றும் மென்மையான ஸ்பாஞ்ச் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளவும். துணி மற்றும் மென்மையான ஸ்பாஞ்ச்சில் எந்தவொரு ஷார்ப்பான மண்/ கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில், அவை காரின் பெயிண்ட்டில் கீறல்களை போடுவதற்கு வாய்ப்புள்ளது.

செய்ய வேண்டியவை: ஆயில்/ க்ரீஸ் படிந்த இடத்தை முதலில் க்ரீஸ் நீக்கி மற்றும் சூடான நீரில் மென்மையாக கழுவிக் கொள்ளவும். இது அங்கிருக்கும் தளர்வான துகள்களை நீக்கிவிடும். இதன் மூலமாக வலுவாக தேய்க்க வேண்டிய இடத்தை உங்களால் அடையாளம் காண முடியும். சாலைக்கு போடப்படும் தார் ஒட்டியிருந்தால், அதனை நீக்க ஸ்பெஷலான ரீமூவரை பயன்படுத்த வேண்டும்.

சில நிமிடங்களுக்கு ரீமூவரை அங்கிருந்து அகற்ற வேண்டாம். கொஞ்சம் நேரம் கழித்து அதனை துணியை வைத்து நீக்கவும். தார் அங்கிருந்து போகும் வரையில் இந்த செயல்முறையை மீண்டும், மீண்டும் செய்யவும். ஆயில் மற்றும் க்ரீஸ்களை நீக்குவதற்கு, கடைகளில் டீ-க்ரீஸர் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஒரு துணியால் ஸ்பிரே செய்துக் கொண்டு, ஆயில் மற்றும் க்ரீஸ் உள்ள பகுதிகளில் துடைத்து எடுக்க வேண்டும்.

துடைத்து எடுப்பதற்கு முன் சில வினாடிகளுக்கு துணியை ஆயில் & க்ரீஸ் உள்ள பகுதிகளில் வைப்பது நல்லது. சிறிதளவு ஆயில் அல்லது க்ரீஸை கூட விட வேண்டாம். ஏனெனில், அவை நாளடைவில் காரின் பெயிண்ட் உடன் வேதியல் வினைப்புரிவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் அந்த பகுதியை மென்மையான ஸ்பாஞ்ச்சை கொண்டு துடைக்கவும். இந்த செயல்கள் எதிலிலும் அதிக அழுத்தம் தர வேண்டும்.

இல்லையேல் காரில் டொக்குகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. ஸ்பாஞ்சை வைத்து துடைத்த பின்னர், எப்போதும் காரை கழுவதுபோல் நீரை கொண்டு துடைக்கவும். அதன்பின், முடிந்தால் காரின் பெயிண்ட்டிற்கு மெழுகு கோட்டிங் கொடுக்கலாம். இது இல்லாமல், வேறு ஏதேனும் பெயிண்ட் பாதுகாப்பு திரவம் தடவுவதாக இருந்தாலும் நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களை பயன்படுத்தினால் வீட்டில் இருந்தப்படியே உங்களது காரில் உள்ள தார், ஆயில் மற்றும் க்ரீஸ்களை எளிதாக நீக்கலாம். ஏற்கனவே கூறியதுபோல், இவற்றை நீக்குவது காரை அழகாக காட்டுவது மட்டுமின்றி, காரின் பெயிண்ட்டிலும், மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தாது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 13, 2024, 18:09 [IST]
English summary
Tips for car washing how to remove oil grease check all details here
மேலும்... #car tips #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+