அய்யயோ பிரேக் பிடிக்கலன்னு பதறாதீங்க! இதை கரெக்டா ஃபாலோ பண்ணுங்க வண்டி தன்னால நிக்கும்!

உங்களை யாராவது தூக்கி வீசினால் நீங்கள் பறந்து கொண்டிருக்கும் போது உங்கள் மனதில் அய்யோ எங்கே போய் மோதப்போகிறோமோ என்ற பயம் வரும். ஆனால் வேகமாகச் செல்லும் வாகனத்தில் நீங்கள் அமர்ந்திருந்தால் உங்களுக்கு அந்த பயம் நிச்சயம் இருக்காது.

ஏன் என்றால் வாகனம் என்னதான் வேகமாகச் சென்றாலும் அது எதன் மீதும் மோதாமல் இருக்க அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் இருக்கிறது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும். ஆனால் ஒரு வேலை நீங்கள் வேகமாகச் செல்லும் வாகனத்தில் பிரேக் ஃபெயிலியர் ஆகிவிட்டால் என்னவாகும்? அதைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.

brake failure at high speed

இந்தியாவில் பிரேக் ஃபெயலியர் என்பது ஒரு சாதாரண விஷயமாகவே இருக்கிறது, வாகனம் வேகமாக வாகனம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பிரேக் ஃபெயிலியர் ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஃபெயிலியர் ஆனால் பிரேக் பிடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் வாகனம் விபத்தில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வாகனத்தை இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகனத்தை விபத்தில் சிக்க வைக்காமலும் தப்பிக்க முடியும்.

முதலில் டிரைவர் ஃபிரேக் பெயிலியர் என்பதை உணர்ந்தால் உடனடியாக பதற்றமடையாமல் இருக்க வேண்டும். பதற்றத்தில் நாம் செய்யும் தவறுகள் கூட வாகனத்தை விபத்தில் சிக்க வைத்துவிடும். இதனால் பிரேக் பெயிலியர் எனத் தெரிந்த அடுத்த நொடி மனதைச் சாந்தப்படுத்தி ஒரு நிலைப்படுத்த வேண்டும். அடுத்து வாகனத்தை நிறுத்தும் முயற்சிக்குத் தயாராகிவிட வேண்டும்.

brake failure at high speed

முதலில் உங்களைச் சுற்றி வாகனங்கள் இருக்கிறதா? நீங்கள் என்ன வேகத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒரு நொடி கவனிக்க வேண்டும். அதே நேரம் வாகனத்தின் ஆக்ஸிலேரட்டரை மிதிக்காமல் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். நீங்கள் சாலையில் நடுவே சென்று கொண்டிருந்தால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல், சாலையின் ஓரமாக வாகனத்தைக் கொண்டு சென்று விட வேண்டும்.

அதே நேரம் சாலையில் வரும் மற்ற வாகனங்களுக்கு உங்கள் வாகனத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. என்பதை என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் ஹசார்டு லைட்டை ஆன் செய்து விட வேண்டும். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் உங்கள் வாகனத்தின் அருகே வந்தாலும் அவர்கள் சுதாரித்துக்கொள்வார்கள்.

brake failure at high speed

இந்த நேரத்தில் வாகனத்தின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டிருக்கும். இப்பொழுது நீங்கள் கிளட்சை பிடித்து டாப் கியரிலிருந்து மெல்ல மெல்ல வேகத்திற்கு ஏற்ப 4, 3, 2 என கியரை குறைத்துக்கொண்டே வர வேண்டும். இறுதியாக முதல் கியருக்கு வரும் போது மட்டும் முதல் கியரை மாற்றிவிட்டு வாகனத்தின் கிளட்சை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும். இதனால் வாகனத்தின் வேகம் மிக வேகமாகக் குறைந்துவிடும். ஒரு சிறிய ஜர்க் மட்டும் இருக்கும்.

குறைவான வேகம் இருக்கும் போது நீங்கள் வாகனத்தின் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி காரை நிறுத்தலாம். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் வேகமாகச் செல்லும் காரில் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்திவிடாதீர்கள். மெதுவாகச் செல்லும் போது காரின் ஹேண்ட் பிரேக்கை பிடித்து காரை ஒரு பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிடுங்கள்.

இது நடக்கும் போது உங்களுக்குப் பின்னே வேறு வாகனங்கள் வருகிறதா என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் திடீரென வேகத்தைக் குறைத்தால் பின்னால் வரும் வாகன ஓட்டியால் அதைக் கணிக்க முடியாமல் உங்கள் வாகனம் மீது மோத வாய்ப்பு இருக்கிறது. அதனால் உங்கள் வாகனத்திற்கு முன்பக்கம் கவனிப்பதைப் போலப் பின்பக்கமும் கவனித்துக்கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று விற்பனையாகும் தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த காரில் பிரேக் ஃபெயிலியர் என்பதற்கு 99.99 சதவீதம் வாய்ப்பே இல்லை. அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார்கள் எல்லாம் வந்துவிட்டது. இருந்தாலும் இன்றும் பயன்பாட்டில் இருக்கும் பழைய கார்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. மேலே சொன்ன வழிமுறையைச் சரியாகப் பின்பற்றினால் வேகமாகச் செல்லும் போது பிரேக் ஃபெயிலியர் ஆனாலும் விபத்தைத் தவிர்க்கலாம்!

More from DriveSpark

Article Published On: Tuesday, April 25, 2023, 12:40 [IST]
English summary
Tips to follow in brake failure at high speed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X