யாரு சொன்னாலும் தேங்காய் எண்ணெய் எல்லாம் ஊத்தாதீங்க... செயினை எப்படி பராமரிக்கனும் தெரியுமா?
பைக்குகளில் செயின்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் அதை எப்படி செய்வது என்று தான் இங்கே காணப்போகிறோம்.
பைக் வைத்திருக்கும் பலருக்கு பைக்கின் செயிலிருந்து வரும் சத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். சரியாக பராமரிப்பு செய்யாத செயின்கள் சேதமாகி பைக்கை பெரும் பிரச்சனைக்கு தள்ளிவிடும். அதனால் பைக்குகளில் செயின்களின் பராமரிப்பு அவசியம். அதை எப்படி செய்வது என்று தான் காணப்போகிறாம்.

தேங்காய் எண்ணெய் போடாதீர்கள்
பொதுவாக பலர் பைக்கின் செயிலிருந்து சத்தம் ஏற்பட்டால் வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை எடுத்து பைக்கின் செயிலில் போடுவார்கள். இது முற்றிலும் தவறான செயல். இப்படியாக எண்ணெய்களை பைக்கில் போடுவதால் தற்காலிகமாக சத்தம் வராமல் போகுமே தவிர சத்தத்திற்கான மூல பிரச்சனை தொடர்ந்து பெரியதாகிகொண்டே தான் இருக்கும்.
ஸ்பிரே பயன்படுத்துங்கள்
பைக்குகளில் செயின் நீண்ட நாட்கள் ஸ்மூத்தாக உழைக்க வேண்டும் என்பதற்காக மார்கெட்டில் ஸ்பிரே ஓன்று இருக்கிறது. இதை வாங்கி குறிப்பிட்ட இடைவெளியில் செயினில் அடித்தால் செயின் நீண்ட நாட்களுக்கு சிறப்பாக உழைக்கும். இதனால் செயின் ஸ்பிராக்கெட் தேயாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இது போக செயினும் துரு பிடிக்காமல் இருக்கும்.
செயின் டைட் செய்யுங்கள்
பைக்கின் செயின் எவ்வளவு டைட்டாக இருக்கிறது என்பது மிகவும் முக்கியம். மிக அதிகமாக டைட் வைத்துவிட்டால் செயின் ஸ்பிராக்கெட் சீக்கிரமே தேய்ந்துவிடும். இதுவே லூசாக இருந்தால் சத்தம் ஏற்படும். அதனால் சரியான டைட்டில் வைத்திருப்பது அவசியம். சரியான டைட்டில் இருந்தால் தான் பைக்கின் பிக்கப்கூட சரியாக இருக்கும்.
செயினை சுத்தமாக வைக்கவும்
செயினில் சரியாக ஸ்பிரே அடித்து, சரியான டைட்டில் மெயின் டெயின் செய்தால் மட்டும் போதாது செயினை அவ்வப்போது செயினை சுத்தம் செய்ய வேண்டும். இல்லை என்றால் செயினில் உள்ள லுப்ரிகேன்டில் தூசு படிந்து அது செயின் ஸ்பிராக்கெட்ஸை பாதிக்கும். அதனால் அவ்வப்போது துணி அல்லது அதற்கான பிரஷ்ஷை வைத்து செயினை சுத்தம் செய்துவிடுவது நல்லது.
கவர் செய்யுங்கள்
பெரும்பாலான பைக்குகளில் செயல்களுக்கு கவர் வழங்கப்பட்டிருக்கும். இந்த கவர்களை அகற்றுவது என்பது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். கவரை கழட்டினால் அது நேரடியாக வெளி பகுதியில் ஏற்படும் தொடர்பால் செயின் சிக்கிரம் பாதிக்கப்படும் என்பதால் இந்த கவரை வழங்கியுள்ளனர். அதனால் எக்காரணத்தை கொண்டு இந்த கவர் இல்லாமல் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள்.


Click it and Unblock the Notifications








