வெயில் காலம் வரப்போகுது! இப்பவே இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க! இல்லேன்னா காசு கரியாகும்!

இந்தியாவில் தற்போது கோடை காலம் கிட்டத்தட்ட துவங்கிவிட்டது. பள்ளிகளில் பிரிட்சையும் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுவிடும். விடுமுறை வந்துவிட்டால் அடிக்கடி காரில் நீங்கள் குடும்பத்தினருடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காரில் ஏசியில்லாமல் பயணிக்கவே முடியாது. இப்படியான சூழ்நிலைகள் விரைவில் வரவுள்ளது. இதற்குத் தயாராவதற்காகக் கோடைக் காலத்திற்கு முன்பு நாம் காரில் கவனிக்க வேண்டிய விஷயங்களைக் காணலாம்.

ஏசி

கோடை காலங்களில் காரில் அதிகம் பயன்பாட்டில் இருப்பது ஏசி தான். அதனால் உங்கள் ஏசி சரியாக வேலை செய்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக ஏசி கேஸ் மாற்றி அதிக நாளாகியிருந்தால் மாற்றிவிடுங்கள். ஏசி மட்டும் வேலை செய்யவில்லை என்றால் இந்த கோடை உங்களுக்குக் கொடுமையாக மாறிவிடும்.

வெயில் காலம் வரப்போகுது! இப்பவே இதெல்லாம் செக் பண்ணிக்கோங்க! இல்லேன்னா காசு கரியாகும்!

டயர் பிரஷர்

கார்களில் கோடை காலங்களில் அதிக வெப்பம் காரணமாக டயர்களில் பிரஷர் குறைவாக இருக்கும். கடந்த மழைக் காலங்களில் உங்கள் கார்களில் டயர்கள் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அதை எல்லாம் சரி செய்து கொள்ளுங்கள். கார் டயர்களில் பிரஷர் 30-35க்குள் இருக்கும்படி வைத்துக்கொள்ளுங்கள். நீண்ட தூரம் பயணிக்கப்போகிறீர்கள் என்றால் காரின் டயரில் ஏர் பிரஷர் செக் செய்து கொள்ளுங்கள்.

இன்ஜின் ஆயில்

கோடை காலங்களில் இன்ஜின் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதிக தூரம் நீங்கள் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தால் இப்பொழுதே காரின் இன்ஜின் அயிலை மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் நீண்ட பயணத்தில் இருக்கும் போது அதைப் பற்றிக் கவலைப்படவோ அல்லது டூர் கிளம்பும் நேரத்தில் இன்ஜின் ஆயில் மாற்றவோ தேவையில்லை.

பிரேக்

குளிர் காலத்தில் காரின் பிரேக் திறன் குறைந்திருக்கும். தற்போது கோடைக் காலம் வரப்போகிறது. இதனால் காரின் பிரேக்கை செக் செய்து கொள்வது நல்லது. நன்றாக பிரேக் பிடிக்கும்படி காரின் பிரேக்கை செக் செய்துவிட்டால் கோடைக் காலத்தில் டூர் செல்லும்போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்கும்.

விண்ட்ஷீல்டு வைப்பர்

காரின் விண்ட்ஷீல்டு வைப்பர்களையும் கவனிக்க வேண்டும். கோடை காலம் தானே பின்னேர் ஏன் விண்ட் ஷீல்டு என நினைக்கிறீர்களா கோடைக்காலத்தில் அதிகமான தூசு காற்றில் பரவும், அது காரின் விண்ட் ஷீல்டில் படிந்தால் அது டிரைவிங் செய்யும் போது சரியாகச் சாலை தெரியாத அளவிற்கு மோசமாக இருக்கும் இதனால் வைப்பர்கள செக் செய்து வைத்துக்கொண்டு தேவையான நேரங்களில் வாஷரை பயன்படுத்தி காரை வாஷ் செய்து கொள்ளுங்கள்.

டயர்கள் மாற்றம்

காரில் அவ்வப்போது டயர்களை ஒன்று மாற்றி இன்னொன்று பொருத்திக்கொள்வது நல்லது அதனால் கோடையில் அதிகமாகப் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் காரின் டயரை முன்டயரை பின் டயராகவும், பின் டயரை முன் டயராகவும் உள் பக்கத்தை வெளி பக்கமாகவும் வெளி பக்கத்தை உள் பக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் காரின் டயர் ஆயுள் அதிகமாகும்

எக்ஸ்ட்ரா டிப்ஸ்

உங்கள் காரை நீங்கள் மேல் கூரை இல்லாத இடங்களில் பார்க் செய்து வருகிறீர்களா? உங்கள் கார் மீது நேரடியாக வெளியில் அடித்தால் காருக்குள் வெப்பம் அதிகமாகும். இதனால் இப்பொழுதே காரை நிழலில் நிறுத்த ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2023, 16:00 [IST]
English summary
Tips to maintain your car this summer
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+