பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் பைக் நின்னுடுச்சா! இதை ட்ரை பண்ணுங்க பெட்ரோல் பங்க் வரை போயிரலாம்!

இன்று டூவீலர்கள் பயன்படுத்தும் பலர் பெட்ரோல் இல்லாமல் நடு ரோட்டில் பைக்கில் நின்று தவிக்கின்றனர். இப்படியான சூழ்நிலைகளை எப்படி எளிமையாகச் சமாளிப்பது,பெட்ரோல் இல்லாமல் நின்ற வண்டியை எப்படி பெட்ரோல் பங்க் வரை ஓட்டி செல்வது உள்ளிட்ட சில தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இன்று டூவீலர் பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்று சொல்லிவிடலாம். இன்று ஒவ்வொரு வீட்டிற்குள் குறைந்தபட்சம் ஒரு டூவீலராவது இருக்கிறது. அருகில் உள்ள கடைகளுக்குச் செல்ல சின்ன சின்ன வேலைகளுக்காக இந்த டூவீலர் பயன்படுத்தப்படுகிறது. இன்று டூவீலர் இல்லை என்றால் பலருக்கு ஒரு கை உடைந்தது போலவே உணர துவங்கிவிடுவார்கள். இப்படியாக டூவீலர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான வாகனமாக மாறிவிட்டது.

பெட்ரோல் இல்லாமல் நடு ரோட்டில் பைக் நின்னுடுச்சா! இதை ட்ரை பண்ணுங்க பெட்ரோல் பங்க் வரை போயிரலாம்!

இந்நிலையில் இன்று டூவீலர் வைத்திருக்கும் பலர் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை டூவீலர் நடு வழியில் ஸ்டார்ட் ஆகாமல் நிற்பதுதான். அப்படி நின்று விட்டால் அவ்வளவு தான் அதை விட மோசமான நாள் அவருக்கு வந்துவிடாது. இப்படியாக டூவீலர் நடு வழியில் நின்று விட்டால் டூவீலரை தள்ளிக்கொண்டு போவதை விட வேறு வழியும் இல்லை. இப்படியாக நாம் இந்த பதிவில் டூவீலர் நடுரோட்டில் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் எந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று தான் காணப்போகிறோம்.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான் என்றாலும் தற்போது டூவீலர் ஓட்ட பழகும் நபர்கள், அல்லது மிக அரிதாக டூவீலர் ஓட்டுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான டிப்ஸ் ஆகும். நீங்கள் ஏற்கனவே இப்படியான பிரச்சனை சந்தித்திருந்தால் இந்த முறையை நிச்சயம் முயற்சி செய்திருப்பீர்கள். புதிதாக இந்த பிரச்சனையில் சிக்குபவர்களுக்கு இப்படி எளிமையான வழி இருக்கிறது என்பதே தெரியாது அது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவு.

சோக்

பெரும்பாலான டூவீலர்களில் சோக் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. இது பெட்ரோலை வேகமாக இன்ஜினிற்குள் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு கருவியாகும். நீண்ட நேரம் வாகனத்தின் இன்ஜினிற்குள் பெட்ரோல் செல்லவில்லை என்றால் வாகனம் ஸ்டார்ட் ஆகத் திணறும். இந்த நேரத்தில் சோக்கைப் பிடித்தால் இன்ஜினிற்குள் பெட்ரோல் வேகமாகச் செல்லும் இதனால் இன்ஜின் வேகமாக தன் இயக்கத்தைத் துவங்கிவிடும்.

இந்த சோக்கை பெட்ரோல் காலியாக நடுரோட்டில் பைக் நின்றாலும் பயன்படுத்தலாம். என்னதான் பெட்ரோல் பைக்கின் டேங்கில் காலியாகியிருந்தாலும், டேங்கிலிருந்து இன்ஜினிற்கு செல்லும் பைப்பில் பெட்ரோல் இருக்ககூடும். டேங்கில் பெட்ரோல் இல்லாததால் அழுத்தம் இல்லாமல் இந்த பெட்ரோல் எல்லாம் இன்ஜினிற்கு செல்லாமல் பைப்பிலேயே இருக்கும். இந்த நேரத்தில் பைக்கில் சோக்கைப் பயன்படுத்தினால் இந்த பெட்ரோல்கள் இன்ஜினிற்குள் சென்று இன்ஜின் இன்னும் சிறிது நேரம் இயங்கும். அதைவைத்து நாம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுவிடலாம்.

சைடு ஸ்டண்ட்

டேங்கில் பெட்ரோல் இல்லாமல் காலியாகிறது என்றால் டேங்கில் ஒரு சொட்டு கூட பெட்ரோல் இல்லை என அர்த்தம் கிடையாது. டேங்கிலிருந்து இன்ஜினிற்கு பெட்ரோலை கடத்தி செல்லும் வால்வு பகுதி வழியாக பெட்ரோல் செல்லவில்லை என்று தான் பொருள். டேங்கில் சைடு பகுதிகளில் இந்த பெட்ரோல் இருக்க அதிகமான வாய்ப்பு இருக்கிறது. அதனால் பைக்கை வலபுறமாகவும், இடப் புறமாகப் பக்கவாட்டு பகுதியில் சாய்ப்பது மூலம் அந்த பெட்ரோல்கள் வால்வு பகுதிக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் இன்ஜின் சிறிது நேரம் ஓடும். அதை வைத்து அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு பைக்கை ஓட்டி செல்ல முடியும்.

ஆனால் எப்பொழுதும் பைக்கிற்கு பெட்ரோல் நிரப்பும் போது பைக்கின் பெட்ரோல் முழுவதும் காலியான பிறகு நிரப்புவது பைக்கின் இன்ஜின் வாழ்நாளைப் பாதிக்கும், குறைவான பெட்ரோலில் பைக்கின் இன்ஜின் திணறித் திணறி இயங்குவது பாதிப்பை ஏற்படுத்தும். பைக்கில் குறிப்பிட்ட அளவிற்குக் கீழ் பெட்ரோல் போய்விட்டாலே நீங்கள் மீண்டும் பெட்ரோலை போட்டு வைத்துக்கொள்வது தான் சிறந்தது. இது தான் பைக்கின் இன்ஜின் பாதிப்படையாமல் தடுக்கும்.

அதனால் எப்பொழுதும் உங்கள் பைக்கின் பெட்ரோல் டேங்கில் ஓரளவு பெட்ரோல் இருக்கிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதே போல அடிக்கடி உங்கள் பைக் எவ்வளவு மைலேஜ் கொடுக்கிறது என்பதைக் கணக்கிட்டு வைத்துக்கொள்ளுங்கள். நாட்கள் அதிகமாக அதிகமாக பைக்கின் மைலேஜ் குறையும். இதனால் பைக்கின் மைலேஜ் குறையும் போது பைக்கை முறையாக சர்வீஸ் செய்து கொள்வது நல்லது. இந்த தகவல் குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2022, 13:11 [IST]
English summary
Tips to start your bike which stopped without petrol midway
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+