கார்ல போகும் போது வாந்தி வருதா? இதை ட்ரை பண்ணுங்க சரியாகிடும்!
கார்களில் செல்லும் போது பலருக்கு வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். பலருக்குப் பயணம் என்றாலே சேராது எனச் சொல்லுவார்கள். இது ஏன் நடக்கிறது? இதை எப்படித் தடுப்பது? இதற்கு நிரந்தர தீர்வு என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.
நம்மில் பலருக்குப் பயணம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். குறிப்பாக கார், பஸ், போன்ற சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்களில் பயணித்தால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் எல்லாம் ஏற்படும். சிலருக்குப் படகில் செல்லும்போது இப்படியான பிரச்சனை வரும், சிலருக்கு விமானத்தில் செல்லும் போது இந்த பிரச்சனை வரும். இப்படியான பிரச்சனைக்கு மருத்துவத்துறையில் Motion Sickness எனப் பெயர். அதாவது பயணம் செய்வதால் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனை எனக் கூறுகின்றனர்.

இந்த மோஷன் சிக்னஸ் வருவதற்கு முக்கியமான காரணம் மூளை தான். நாம் மூளைக்கு நம்மில் உள்ள சில பாகங்கள் நாம் பயணிப்பதாகத் தகவல்களை அனுப்பும் அதே நேரம் சில பாகங்கள் நாம் பயணிக்கவில்லை என்ற தகவலை அனுப்பும் இது தான் இதற்கு முக்கியமான காரணம். உதாரணமாக நாம் பயணிக்கும் போது நாம் ஜன்னல் வழியாகப் பார்க்கும் விஷயங்கள் பயணிப்பதை உணர்த்தும், நாம் கேட்கும் விஷயங்கள் நாம் பயணிப்பதாக மூளைக்குத் தகவல்களை அனுப்பும், ஆனால் நம்மில் உடல் நாம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாகத் தகவல்களை அனுப்பும்.
இப்படியாக இரண்டு வேறு பட்ட தகவல்களைக் கையாள முடியாமல் மூளை தவிக்கும் போது நாம் பயணிக்கிறோமா இல்லையா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இந்த வாந்தி, மயக்கம் போன்ற விளைவுகள் ஏற்படுகிறது. இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை வெகு சிலருக்குத் தான் ஏற்படுகிறது. குறிப்பாக அதிகமாகப் பயணிக்கும் நபர்களுக்கு இது ஏற்படுவதில்லை. சரி இப்படியா பிரச்சனை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் எனக் காணலாம்.
இந்த பிரச்சனைக்கு மருத்துவத்தில் மருந்து இருக்கிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களைச் சந்தித்து உங்களுக்கு எந்த வகையான பயணத்தின் போது என்ன செய்கிறது என்பதைச் சொல்லி அதற்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் பயணிப்பதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு அந்த மருத்துகளை எடுத்துக்கொண்டால் பயணத்தின் போது இந்த பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம். டாக்டரிடம்
ஆலோசனை பெற்ற பின்பு இந்த மருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பயணத்தின் போது சரியான சீட்டை தேர்வு செய்யுங்கள். உங்கள் இருக்கையும் உங்களுக்கு இப்படியான பிரச்சனையை ஏற்படுத்தக் காரணமாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு வசதியான இருக்கையைத் தேர்வு செய்வது சிறந்தது. குறிப்பாகப் பலருக்கு காரின் முன்பக்க சீட்டை தேர்வு செய்தால் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு எந்த சீட் சௌகரியமாக இருக்கிறது எனத் தெரியவில்லை என்றால் காரின் முன் சீட்டை ட்ரை செய்யலாம்.
இப்படியாகப் பிரச்சனை இருப்பவர்கள் ப்ரஷ்ஷான காற்றைச் சுவாசிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று, அதனால் பயணத்தின் போது ஜன்னலைத் திறந்து ப்ரஷ் காற்றைச் சுவாசித்துக்கொண்டே பயணிப்பது சிறப்பான அனுபவத்தைத் தரும். இதனால் வாந்தி பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்க முடியும். அதேபோல முன்னரே சொன்னது போல் உள்ள பார்வை இதற்கு முக்கியமான காரணமாக இருப்பதால் நீங்கள் பயணத்தின் போது புத்தம் படிப்பதைத் தவிர்த்துவிடுவது நல்லது, பயணத்தின் போது நீண்ட தூரத்தில் இருக்கும் விஷயங்களைப் பார்த்துக்கொண்டே பயணித்தால் இந்த பிரச்சினையைத் தடுக்கலாம்.
பயணத்தின் போது நீண்ட நேரப் பயணமும் சிலருக்கு இப்படியா வாந்தி மற்றும் மயக்கத்தைத் தரும். இதனால் பயணத்தின் போது அவ்வப்போது பிரேக் எடுத்துக்கொண்டு காரை விட்டு கீழே இறங்கி சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்துகொள்வது, சிறிது நேரம் எங்காவது கண்களை மூடிக்கொண்டு அமர்வது வாந்தி பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை தரும். அதே போலப் பயணம் செய்யப்போகிறீர்கள் என்றால் அதிகமாகச் சாப்பிடுவதையும் குறைத்துக்கொள்ளலாம். குறைவான சாப்பாடு எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட சாப்பாடுகளை உட்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








