'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்!

By -சரவணராஜன்

Tips for Buy Used Car
புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம்.ஆனால்,பயன்படுத்தப்பட்ட செகன்ட் ஹேண்ட் கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கிக்கொண்டு பலர் புலம்புவதை கண்கூடாக பார்த்திருக்கிறோம்.எனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் வழிமுறைகள் குறித்து சந்தை நிபுணர்கள் தரும் டாப் 10 டிப்ஸ்...

பட்ஜெட்&கார் தேர்வு: செகண்ட் ஹேண்ட் காரை வாங்க முடிவு செய்தபின்,பட்ஜெட்டிற்கும்,குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும்,தகுந்த மாடலை தேர்வு செய்வது மிக மிக முக்கியம்.4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சிறிய ரக ஹேட்ச்பேக் கார் போதுமானது.அதிக குடும்ப உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு எஸ்யூவி மாடல்கள் பொருத்தமாக இருக்கும்.அடிக்கடி நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் டிக்கி வசதி கொண்ட செடன் ரக கார்களை தேர்வு செய்யலாம்.

மார்க்கெட் நிலவரம்: நாம் வாங்குவதற்கு தேர்வு செய்துள்ள சில மாடல்களின் மார்க்கெட் விலை நிலவரத்தை தெரிந்து கொண்டு செல்வதும் அவசியம்.காரை தேர்வு செய்யும்போது அதன் விலையை மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

விற்பனையாளர் தேர்வு: பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது மோசடிகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது.எனவே,நல்ல அறிமுகமான விற்பனையாளர் அல்லது மார்க்கெட்டில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் விற்பனையாளரை தேர்வு செய்வது உத்தமம்.

மாருதி,ஹூண்டாய் போன்ற முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகின்றன.இந்த நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்குவது பாதுகாப்பானது.மேலும்,பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சில நிறுவனங்கள் வாரண்டியும் தருகின்றன.

பைனான்ஸ்: பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு பல முன்னணி பைனான்ஸ் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு கடனுதவி அளிக்கின்றன.காருக்கு கடன் வாங்கும் முன் பைனான்ஸ் நிறுவனங்களின் வட்டிவிகிதங்கள்,டாக்குமெண்ட் கட்டணங்கள் உள்ளிட்ட விபரங்களை தெரிந்துகொண்டு,அதி்ல் உங்களுக்கு பொருத்தமான கடன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.

டெஸ்ட் டிரைவ்: விற்பனையாளிரிடம் உள்ள கார்களில் உங்களுக்கு பொருத்தமான காரை தேர்வு செய்தவுடன்,அதை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டும்.உங்களுக்கு கார் ஓட்டிய அனுபவம் இல்லையென்றால்,கூட வரும் நண்பர்கள் மற்றும் தெரிந்த மெக்கானிக்குகள் மூலமாக காரை டெஸ்ட் டிரைவ் செய்து காரின் கன்டிஷனை தெரிந்து கொள்ளலாம்.தவிர,கார் எத்தனை கி.மீ.,தூரம் ஓடியது என்பதும் அறிந்து கொள்வது அவசியம்.

அதன் மைலேஜ்,காரின் முந்தைய உரிமையாளர்கள் பற்றிய விபரங்களையும் விற்பனையாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.பளபளப்பாக இருக்கும் கார்களை கண்டு ஏமாந்துவிடாதீர்கள். ஏனேனில்,சில விபத்துக்குள்ளான கார்களை சரிசெய்து,ரீப்பெயிண்டிங் அடித்து பளபளப்பாக விற்பனைக்கு வைத்திருப்பர்.

காரின் ஜாதகம்: காரை தேர்வு செய்தபின்,அதன் பதிவுபுத்தகம் (ஆர்.சி.,புக்),சாலை வரி செலுத்தியதற்கான ரசீது,இன்ஷ்யூரன்ஸ்,ஒரிஜினல் இன்வாய்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை கவனமாக சரிபார்ப்பது மிகவும் முக்கியமானது.

கார் கடனில் வாங்கப்பட்டிருந்தால்,கடன் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு விட்டதா அல்லது தவணை பாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.இதன் விபரங்கள் ஒரிஜினல் ஆர்.சி.,புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.ஒருவேளை கடன் கட்டி முடிக்கப்பட்டு, ஆர்.சி.,புத்தகத்தில் ஹைப்பத்திகேஷன் என்று குறிப்பிடப்பட்டிருந்தால்,விற்பனையாளரிடம் அதை ஆர்.டி.ஒ.,அலுவலகத்திலிருந்து நீக்கி தர சொல்லுங்கள்.

ஆர்.சி.,புத்தகத்தில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும்,காரில் உள்ள சேஸிஸ் மற்றும் எஞ்சின் நம்பர்களும் ஒன்றாக உள்ளதா என்று சோதித்து பார்க்க வேண்டும்.

காரின் வரலாறு : பயன்படுத்தப்பட்ட கார் சந்தையில்,திருட்டு கார்களை விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே,காரின் சர்வீஸ் புத்தகம்,டயர் தயாரிப்பு தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து காரின் வரலாறை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.காரை பற்றிய அனைத்து விபரங்களும் உங்களுக்கு தெரியவில்லையென்றால்,நம்பிக்கையான,நன்கு அறிமுகமான மெக்கானிக்கை அழைத்து செல்லுங்கள்.அவரை வைத்து மேற்கூறிய அனைத்து விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கார் டீல்: காரின் கண்டிஷன் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் திருப்தி ஏற்பட்டு,காரை வாங்க முடிவு செயதபின் விற்பனையாளிரிடம் கார் விலை பற்றி பேரம் பேசுங்கள்.காரின் கண்டிஷன் நன்றாக இருந்தால்,உங்கள் பட்ஜெட்டைவிட சில ஆயிரங்கள் கூடுதலாக இருந்தாலும் யோசிக்க வேண்டாம்.

பதிவு மாற்றம்:காரை வாங்கும்போது,அதனுடன் சேர்த்து காரின் அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் வாங்கிவிடுங்கள்.மேலும்,பழைய உரிமையாளரிடமிருந்து,உங்கள் பெயருக்கு பதிவை மாற்றும் பார்ம்-29,காரை விற்பனை செய்தது மற்றும் வாங்கியதற்கான அத்தாட்சியான பார்ம்-30 ஆகிய ஆவணங்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் கையெழுத்திட்டு கையோடு வாங்கி கொள்ளுங்கள். http://www.tn.gov.in/sta/ApplicationForms.html என்ற வெப்சைட் முகவரியிலிருந்து மேற்கண்ட பார்ம்களை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில்கொண்டால் நிச்சயம்,அருமையான செகண்ட் ஹேண்ட் காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 9, 2011, 13:42 [IST]
English summary
Keep few things in mind while buying used cars. Here are some tips to buying used car. Used car market in India is growing rapidly with the growth of new car market. In the present era most of the car owners especially young drivers drive a particular car for about three to five years and then exchange their used car for a new car. This has not only given a boom to the new car market but has also fostered the used car market in the country.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+