Traffic E-Challan ஆன்லைன்ல போலீஸ் உங்கள போட்டோ எடுத்தாலே அப்டேட் ஆகிடும்! எப்படி கட்டணும் தெரியுமா?

இந்தியாவில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் நிச்சயம் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். அது கார் , பஸ், பைக், ஸ்கூட்டர் ஏன் சைக்கிளில் பயணிப்பவர்களும் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். விபத்தில்லாத பயணங்களுக்காகவே சாலை விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்படியாகச் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு வகையான விதிமீறலுக்கும் ஒவ்வொரு விதமான அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டினால் ஒரு அபராதம், சிக்னலை மதிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு ஒரு அபராதம் எனப் பல விதமான அபராதங்கள் இருக்கிறது.

Traffic E-Challan Online payment

இந்த அபராதங்கள் எல்லாம் போலீசார் கண்ணில் பட்டால் மட்டுமே விதிக்கப்படும் என நினைக்காதீர்கள். இந்தியாவில் பெரு நகரங்களில் எல்லாம் தற்போது ஸ்மார்ட் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. இந்த ஸ்மார்ட் கேமராக்கள் கண்காணிப்பில் இருக்கும் பகுதியில் ஒரு வாகன ஓட்டி கூட விதிமுறை மீறலில் ஈடுபட்டுத் தப்பிக்க முடியாது.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களைச் சரியாக அடையாளம் கண்டு அவர்கள் விதிமுறை மீறும் போது அதைப் புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் அதை போலீசாருக்கு அனுப்பி வைக்கும். போலீசாரும் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட வாகனத்திற்கு அபராதம் விதிப்பார்கள். இது முற்றிலும் தானியங்கியாக இயங்கும்.

எந்த போலீசாரின் துணையும் இல்லாமல் இயங்கும் இந்த கேமராக்கள் பெரு நகரங்களில் செயல்பாட்டிலிருந்தாலும் சிறு நகரங்களில் இது இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் இதற்குப் பதிலாக போலீசாருக்கு அபராதம் விதிக்க பிரத்தியேக ஆப் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி போலீசார் சிக்னல்களில் பணியில் இருக்கும் போது சாலை விதிமுறைகளை மீறியபடி வாகன ஒட்டிகள் யாராவது செயல்பட்டால் அதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தால் அது தானாக அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு என்ன வகையான விதிமுறை மீறில் என்பதை பார்த்து அதற்கு அபராதம் விதித்து விடும்.

நீங்கள் பல முறை சிக்னல்களில் போலீசார் தங்கள் செல்போனில் ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை புகைப்படம் எடுப்பதை பார்த்திருப்பீர்கள். அது அவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதற்காக தான் இப்படியாக விதிக்கப்படும் அபராதம் பரிவாகன் தளத்தில் இருக்கும் இதை வாகன ஓட்டிகள் அவ்வப்போது சரி பார்த்து அபராதம் இருந்தால் அதை ஆன்லைன் மூலமாகவே கட்டலாம்.

இனி நமக்கு ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட செல்லானிற்கான அபராதத்தை எப்படி செலுத்துவது என காணலாம். இதை சுலபமாக உங்கள் செல்போனிலிருந்து செலுத்திவிட முடியும். முதலில் https://echallan.parivahan.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Pay Online என் ஆப்ஷன் இருக்கும்.

அந்த ஆப்ஷனை கிளிக் செய்த பறகு 3 விதமான வழிகளில் உங்கள் அபராத செல்லானை கண்டுபிடிக்கும் வழி கிடைக்கும். உங்களுக்கு வழங்கப்பட்ட செல்லான் எண் உங்களிடம் இருந்தால் அந்த நம்பரை வைத்து தேடிக்கொள்ள முடியும். இல்லை என்றால் நீங்கள் வாகனத்தின் பதிவெண், இன்ஜின் அல்லத சேஸில் எண்ணில் கடைசி 5 எண்ணை கொடுத்து தேடும் வாய்ப்பும் இருக்கிறது.

இல்லை என்றால் உங்கள் ஓட்டுநர் உரிமம் எண்ணணை வைத்து உங்களுக்கு ஏதாவது அபராதம் இருக்கிறதா என தேடும் வாய்ப்பும் இருக்கிறது. இதில் உங்கள் தகவல்களை கொடுத்தால் இதற்கு முன்னர் உங்களுக்கு அபராதம் சிசிடிவி ஸ்மார்ட் கேமரா மூலம் பதிவாகும் விதிமுறை மீறல் மற்றும் போலீசார் தங்கள் செல்போனில் எடுத்த விதிமுறை மீறல் உள்ளிட்டவை அதில் இருக்கும்.

அதிலேயே நீங்கள் விதிமுறை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் ஆதாரமாக இருக்கும். இதை நீங்கள் அங்கேயே கிளிக் செய்த விதிமுறை மீறல்களுக்கான அபராதத்தைச் செலுத்திக்கொள்ள முடியும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 6, 2023, 12:45 [IST]
English summary
Traffic e challan online payment step by step guide
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+