சாலை விதிமுறை மீறலுக்கு இஷ்டதுக்கு ஃபைன் போட முடியாது! எந்தெந்த தப்புக்கு எவ்வளவு ஃபைன்னு தெரியுமா?
இந்தியாவில் போக்குவரத்து வாகன விதிமுறைகளுக்கான மோட்டார் வாகன சட்டம் இருக்கிறது. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
இந்தியா முழுவதும் ஒரே சாலை போக்குவரத்து விதிமுறைகள் தான் உள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் படி தான் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்த விதிமுறையை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் விதிக்கும் தொகை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். சில மாநிலங்களில் குறைவாகவும், சில மாநிலங்களில் அதிகமாகவும் இருக்கும்.

உதாரணமாக தமிழகத்தில் ஒரு விதிமுறை மீறலுக்கு குறிப்பிட்டதொகையை நீங்கள் அபராதமாக செலுத்தினால் மற்ற மாநிலங்களில் இந்த தொகை மாறுபடும். இதற்கு காரணம் போககுவரத்து விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசு நிர்ணயம் செய்த தொகை தான் அபராதமாக செலுத்த வேண்டும்.
தற்போது மோட்டார் வாகன விதியின்படி மது போதையில் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, பதிவெண் செய்யாத அல்லது ரத்து செய்த வாகனங்களை ஓட்டுவது, போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவது, இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, சாலை வரி இல்லாமல் வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, நோ என்டரியில் வாகனம் ஓட்டுவது, அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, புகை சான்று இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அதிக பாரம் ஏற்றிக்கொண்ட வாகனம் ஓட்டுவது, அதிக ஓலி மாசு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஒட்டுவது எல்லாம் அபராதம் விதிக்கப்படும் குற்றமாக கருதப்படுகிறது.

இதற்காக விதிக்கப்பட்டுள்ள அபராத விபரங்கள் பின்வருமாறு:
| Traffic Violation | First Violation Penalty | Repeat Violation Penalty |
| Drinking and riding/driving | ₹10,000 and/or 6 months in prison | ₹15,000 and/or 2 years in prison |
| Rash/negligent driving | ₹5,000 | ₹5,000 |
| Driving a vehicle without RC (Registration Certificate) | ₹5,000 | ₹5,000 |
| Not following the orders of a traffic authority | ₹2,000 | ₹2,000 |
| Driving or riding without a license | ₹5,000 | ₹5,000 |
| Not having valid insurance for the vehicle | ₹2,000 | ₹2,000 |
| Unpaid road tax | ₹300 | ₹600 |
| Neglecting seatbelt rules | ₹1,000 and/or community service | ₹1,000 and/or communityservice |
| Entering 'No entry' zones | ₹2,000 to ₹5,000 | ₹2,000 to ₹5,000 |
| Overspeeding | ₹300 | ₹300 |
| Offense by juveniles | ₹25,000 and up to 3 years of prison time | ₹25,000 and up to 3 years of prison time |
| Violating pollution emission norms | ₹1,000 | ₹2,000 |
| An oversized vehicle on the road | ₹5,000 | ₹5,000 |
| License-associated violations | ₹25,000 to ₹1 lakhs | ₹25,000 to ₹1 lakhs |
| Causing noise pollution | ₹100 | ₹100 |
| Other regular traffic violations | ₹500 | ₹500 |
இப்படியாக அபராதம் விதிக்கப்பட்டால் அதை நீங்கள் போலீஸ் ஸ்டேஷன்/ கோர்ட்டில் தான் சென்று செலுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மாறாக நீங்கள் ஆன்லைன் மூலம் கூட அபராதம் செலுத்தலாம். ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றால் அவரது வாகனத்தின் பதிவெண் அல்லது அவரது ஓட்டுநர் உரிம எண் ஆகிய ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து தான் அபராதம் விதிக்கப்படும்.
இப்படியாக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்றால் உங்கள் செல்போனில் https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்ற இணைய தள முகவரிக்கு செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத செலான் எண்
அல்லது வாகன பதிவு எண், அல்லது ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

அதில் உங்களுக்கு விதிக்கப்பட்ட செல்லான், செய்த தவறு என்ன? என்ன தேதியில் தவறு நடந்துள்ளது. ஆகியவை இருக்கும். அதில் கிளிக் செய்து உங்கள் வாகனத்திற்கான அபராதத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிட முடியும். பணம் செலுத்தப்பட்ட பின்பு அதற்கான ரசீது உங்களுக்கு வழங்கப்படும்.
ஒரு வேளை ஆன்லைனில் உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீங்கள் செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அடுத்த முறை நீங்கள் வாகன சோதனையில் சிக்கும் போது இந்த அபராதம் குறித்த தகவல் உங்கள் வாகனத்தை போலீசார் சோதனையிடும் போது தெரிந்துவிடும் பின்னர் நீங்கள் அபராதத்தை உடனடியாக செலுத்த வேண்டியது வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விதிகளை மதித்து வாகனம் ஒட்டினால் உங்களுக்கு எந்த விதமான அபராதமும் விதிக்கப்படாது. மாறாக சாலை விதிமுறைகளை மீறினால் கட்டாயம் விதிக்கப்படும். சிலர் ஆன்லைன் அபராதங்களை செலுத்த வேண்டிய தேவையில்லை என நினைக்கின்றனர். ஆனால் இது உங்கள் வாகனத்தை விற்கும்போதோ அல்லது வாகன சோதனையில் நீங்கள் சிக்கும் போதே கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications
