சட்டத்துல இடம் இல்லேன்னாலும் இந்த தப்புக்கு கண்டிப்பா அபராதம் போடுவாங்க! கவனமா இருங்க!

நீங்கள் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை, ஒரே நேரத்தில் மூன்று பேர் பைக்கில் பயணம் செய்தீர்கள், லைசென்ஸ் இல்லை போன்ற பல்வேறு மோட்டார் வாகன சட்ட விதிமுறை மீறல் காரணமாக அபராதம் செய்தி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பைக்கில் கைகளை விட்டுவிட்டு ஓட்டினால் உண்மையில் போக்குவரத்து விதிமுறை மீறலா? இதற்கு அபராதம் விதிக்கலாமா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள் .

நாம் சாலையில் பைக்கில் பயணிக்கும் போது ஆங்காங்கே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். இப்படியாக வாகனத்தின் கையில் அவர்கள் ஈடுபடும்போது சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இது இந்தியா முழுவதும் உள்ள ஒரு வழக்கமான விஷயம் தான். இப்படியாக சட்ட விதிமுறை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு செல்ல ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும்.

two wheeler driving tips

அபராத செல்லான் பெற்றவர்கள் அந்த இடத்திலேயே அபராதத்தை செலுத்தாவிட்டாலும், அடுத்து எப்படி வேண்டுமானாலும் அந்த அபராதத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படியாக அபராதம் இருப்பதற்கு ஒரு சில முக்கியமான குற்றங்கள் வாகன ஓட்டிகளால் செய்யப்பட்ட வேண்டும். உதாரணமாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, ஒரே வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது, உள்ளிட்ட சட்ட விதிமுறை மீறல்கள் நடைபெற்று இருக்கும்.

இது மட்டுமல்லாமல் மது போதையில் வாகனம் ஓட்டுவது ஒரு வழி பாதை பகுதியில் வாகனம் ஓட்டுவது என சில முக்கியமான குற்றங்களும் செய்யப்பட்டாலும், அந்த வாகன ஓட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு ஆபராதம் விதிப்பதற்காக அபராத செல்லான்கள் வழங்கப்படும். இந்த அபராத செல்லான்களை வைத்து ஆன்லைன் மூலமே அவர்கள் அபராதத்தை செலுத்த முடியும்.

two wheeler driving tips

இப்படியான குற்றங்களுக்கு எல்லாம் அபராதம் விதித்து பார்த்திருப்போம். ஆனால் நீங்கள் பைக்கில் செல்லும்போது இரு கைகளையும் விட்டுவிட்டு வாகனம் ஓட்டினால் அது உண்மையில் மோட்டார் வாகன சட்டப்படி தவறான விஷயமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, மது குடித்து வாகனம் ஓட்டுவது இதற்கு எல்லாம் மோட்டார் வாகன சட்டத்தில் இடம் இருக்கும்போது நிலையில் கைவிட்டு வாகனம் ஓட்டினால் அது சட்டப்படி குற்றமாகுமா என்ற கேள்வி இருக்கிறது.

இப்படியான செயல்களை ஈடுபட்டால் அவர்களுக்கு அபராதம் மிதிக்க போலீசார் எந்த சட்டப்பிரிவை பயன்படுத்துவார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது. இந்த கேள்விக்கெல்லாம் விடை சொல்லும் வகையில் தான் நாம் இங்கே சில முக்கியமான விஷயங்களை பற்றி காணப் போகிறோம். முதலில் வாகனங்களில் கைவிட்டு வாகனம் ஓட்டுவது சரியான வழிமுறையா என பார்க்க வேண்டும் இது முற்றிலும் தவறான விஷயமாகும்.

two wheeler driving tips

நீங்களே கைகளை விட்டுவிட்டு வாகனம் ஓட்டும்போது உங்கள் வாகனம் எப்பொழுது வேண்டுமானாலும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறாக விபத்து ஏற்பட்டால் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இந்த விபத்தில் உங்கள் உயிர் கூட போக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த விபத்து உங்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் உள்ள சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்து போக வாய்ப்புள்ளது.

மோட்டார் வாகன படி கவனக்குறைவாக வாகன ஓட்டுதல் சக வாகன ஓட்டுகளுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய இரண்டும் குற்றம் என்பதால் அந்த சட்டப் பிரிவின் கீழ் இப்படியாக இரண்டு கைகளையும் விட்டுவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களுக்கு போலீசார் அபராதம் மிதிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் நீங்கள் சாலையில் செல்லும்போது எப்பொழுதும் உங்கள் இரு கைகளையும் ஹேண்டில் பாரிலேயே வைத்தபடி பயணம் செய்யுங்கள். இன்று பலர் செல்போனை ஒரு கையில் வைத்துக்கொண்டு ஒரு கையில் மட்டுமே பயணம் செய்கிறார்கள். இது முற்றிலும் மோட்டார் வாகன சட்டப்படி தவறான விஷயமாகும்.

அதே நேரம் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்றால், நீங்கள் இரண்டு கைகளையும் ஹேண்ட் பாரில் வைத்திருந்தாலும் உங்கள் கவனத்தை சாலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் சாலையில் கவனத்தை வேறு திசையில் திரும்பி இருந்தாலும் அதை போலீசார் கண்டுபிடித்து விட்டால் உங்களுக்கு அபராதம் விதிக்க போலீசாருக்கு உரிமை உண்டு.

அதனால் எப்பொழுதும் சாலையில் கவனத்தை வைத்து வாகனத்தை ஓட்டுவது தான் சரியான விஷயமாகும். முக்கியமாக நீங்கள் பைக்கில் செல்லும் போது எக்காரணத்தைக் கொண்டு மது அருந்திவிட்டு பைக் ஓட்டாதீர்கள். இது முற்றிலும் தவறான விஷயம். இதனால் எக்காரணத்தைக்கொண்டும் இந்த தவறை செய்யாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகள் சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் அவர்களுக்கு அபராதம் மிதிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம். அவர்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினாலும் அவர்களுக்கு அபராதம் மிதிக்கப்படும். சக வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டினாலும் அதுவும் தவறான விஷயமாகவே கருதப்படும். இதனால் எப்பொழுதும் கவனத்துடன் வாகனம் ஓட்டுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 19:15 [IST]
English summary
Two wheeler driving tips avoid riding leaving the handle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X