உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

பொதுவாக வாகனங்களில் பல்வேறு விதமான லைட்டுகள் பயன்படுத்துவார்கள், குறிப்பாக ஹெட்லைட், டெயில் லைட், சிக்னல் லைட், கார்களின் உட்புறத்தில் பொருத்தப்படும் லைட் என பல்வேறு இடங்களில் லைட்கள் பொருத்தப்படுக

பொதுவாக வாகனங்களில் பல்வேறு விதமான லைட்டுகள் பயன்படுத்துவார்கள், குறிப்பாக ஹெட்லைட், டெயில் லைட், சிக்னல் லைட், கார்களின் உட்புறத்தில் பொருத்தப்படும் லைட் என பல்வேறு இடங்களில் லைட்கள் பொருத்தப்படுகிறது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இதில் ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமாக ஹெட்லைட் பொருத்தப்படுகிறது. சில லைட்கள் பிரகாசமாகவும், சில லைட்கள் மங்களாகவும் எரியும். இந்த பாகுபாட்டிற்கு என்ன காரணம்? எத்தனை வகையான பல்புகள் மார்கெட்டில் உள்ளன? எந்த வகையான பல்ப் சிறப்பாக செயல்படும்? என பார்க்கலாம் வாருங்கள்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

பல்ப் வகைகள்

ஐக்கிய நாடுகள் தரப்பில் கார்களுக்கு பொருத்தப்படும் ஹெட்லைட்டுகளுக்கு சர்வதேச தர நிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் இந்த தர நிலைகளே பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இதன்படி பல்ப் வகைகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1 வகையில் உள்ள பல்ப்கள் ஹெட்லைட், டெயில் லைட் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். குரூப் 2 வகையில் உள்ள பல்ப்களை சிக்னல் லைட்களுக்கு பயன்படுத்தலாம். குரூப் 3 வகையில் உள்ள லைட்டுகளை புதிய வாகனங்களுக்கு பயன்படுத்தகூடாது. பழைய வாகனங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இதில் H1, H3, H4, H7, H11, HB3 மற்றும் HB4 ஆகிய ரக பல்ப்கள் எல்லாம் குரூப் 1 ரகத்தை சார்ந்தவையாகும். இந்த பல்ப்கள் எல்லாம் ஒரே குரூப்பில் இருந்தாலும், ஒன்றிற்கு பதிலாக மற்றொன்றை மாற்ற முடியாது. உதாரணமாக H1 ரக பல்ப் பொருத்தப்படும் சாக்கெட்டில் H7 பல்பை பொருத்த முடியாது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

ஆக உங்கள் காரில் தயாரிப்பின் போது எந்த ரக பல்ப் பொருத்தப்படுகிறதோ அதே ரக பல்ப்களை தான் நீங்கள் கடைசி வரை பயன்படுத்த வேண்டும். உங்கள் வாகனத்தில் எந்த ரக பல்ப் பொருத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாகன கையேட்டை பாருங்கள்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

பல்ப் ஒப்பீடு

இதில் குரூப் 1ல் உள்ள பல்ப்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அதில் உள்ள இழைகள், நாமினல் பவர், மற்றும் பேஸ் டைப் ஆகியவை வேறுபடுகிறது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இழைகள்

சில பல்ப்களில் ஒரு இழை கொண்ட சிகரெட்களும், சில பல்ப்களில் இரண்டு இழை கொண்ட பல்ப்களும் இருக்கும். இது பெரும்பாலும் வெளிச்சத்தின் அளவுகளை கூட்டி குறைக்க உதவுகிறது. பெரும்பாலும் கார்களில் ஒரு இழை கொண்ட் பல்ப்கள் பயன்படுத்தப்படுகிறது. பஸ்கள், லாரிகள் போன்ற பெரிய ரக வாகனங்களில் இரட்டை இழை கொண்ட பல்ப்கள் பயன்படுத்தப்படுகிறது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

H1, H3, H7, H11, HB3 மற்றும் HB4 ரக பல்ப்கள் ஒரு இழை கொண்டதாகவும், H4 ரக பல்ப் இரட்டை இழை கொண்டதாகவும் இருக்கிறது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

நாமினல் பவர்

ஒரே குரூப்பில் உள்ள எல்லா பல்ப்களும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான வெளிச்சத்தைதான் ஏற்படுத்துகிறது. அதில் எவ்வளவு வோல்ட் பவர் அதற்கு தேவைப்படுகிறது. அதைக்கொண்டு எவ்வளவு வாட்ஸ் பவரை உற்பத்தி செய்கிறது. என்பதுதான் நாமினல் பவர். இது ஒவ்வொரு ரக பல்பிற்கும் மாறுபடும்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

ஒவ்வொரு பல்பும் வெளிப்படுத்தும் பவரில் சிறிய மாற்றங்கள் உள்ளது. இதனால் ஒரு குறிப்பிட்ட ரக பல்ப் போட வேண்டிய இடத்தில் வேறு ரக பல்ப் போடுவது ஆபத்தானது. உதாரணமாக H1 பல்ப் போட வேண்டிய இடத்தில் H7 பல்பை பொருத்துவது என்பது அமெரிக்கன் பவர் சாக்கெட்டில் ஐரோப்பிய பவர் பிளக்கை பொருத்துவது போன்றது.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இவ்வாறு செய்வதால் பல்ப் அதிகமாக சூடாகி விரைவில் பழுதாகிவிடும். ஆனால் ஒவ்வொரு பல்பிற்குள் ஒவ்வொரு விதமான பேஸ் இருக்கிறது. இதனால் பல்பை மாற்றி பொருத்துவது என்பது முடியாத காரியம்தான்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

அதனால் நீங்கள் கார்களில் பல்பை மட்டும் மாற்ற வேண்டும் என்றால் எந்த பிரச்னையும் இல்லை. உங்களது பல்ப் பிட்டிங்கில் உள்ள பேஸிற்கு பொருத்தமான பல்பையே பொருத்த முடியும். ஒரு வேலை நீங்கள் ஹெட்லைட் பிட்டிங்கையே மாற்றுவதாக இருந்தால் மட்டுமே அதில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

வெளிமார்கெட்டில் கிடைக்கும் ஹெட்லைட் கிட்டை நீங்கள் பொருத்த நினைத்தால் அதன் வோல்டேஜ், வாட்ஸ் உள்ளிட்டவைகள் புதிய கிட்டில் உள்ளது பழைய கிட்டிற்கு நிகராக இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்குங்கள்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

பேஸ்

பேஸ் என்பது, பல்ப்பும், சாக்கெட்டும் இணையும் பகுதி. ஒவ்வொரு ரக பல்பிற்குள் வித்தியாசமான பேஸ் இருக்கும். அந்த பேஸில் அந்த குறிப்பிட்ட ரக பல்ப்களை மட்டுமே பொருத்த முடியும்.

உங்கள் காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க...

இதனால் நீங்கள் பல்ப்களை மாற்றும் போது எந்த வித கவலையும் இல்லை. உங்கள் பேஸில் பொருந்தும் எந்த பல்பையும் பொருத்தலாம். H1, H3, H4, H7, H11, HB3 மற்றும் HB4 ரக பல்ப்களில் எந்த பல்ப் உங்கள் காருக்கு பொருத்தமான பல்ப் என்பதை பார்த்து பொருத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
English summary
Types of headlights used in vehicle.Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X