இதை மெக்கானிக் கூட சொல்ல மாட்டாங்க! காரில் குளிர் காலத்தில் இந்த எச்சரிக்கை லைட் எரிந்தால் இதான் அர்த்தமா?
இன்று பல பாதுகாப்பு வசதி நிறைந்த கார்கள் அதிகமாக விற்பனையாகிறது மக்கள் பலர் பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க துவங்கிவிட்டனர். சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு காருக்கு பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் அந்த ஒரே காரணத்திற்காக விற்பனையிலும் ஜொலிக்கிறது.
இப்படியான கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று தான் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம். முன்பெல்லாம் தினமும் காலையில் காரை எடுக்கும் போது காரின் ஓட்டுநர் காரை ஒரு முறை சுற்றிப் பார்ப்பார். அப்பொழுது காரின் டயர்களில் எல்லாம் காற்று சரியாக இருக்கிறதா எனக் குத்தி பார்ப்பார். ஆனால் இன்று அதற்கான அவசியம் இல்லை.

இன்று கார்களின் டயர் பிரஷரை ரியல் டைமில் மானிட்டரிங் செய்யும் கருவிகள் எல்லாம் வந்துவிட்டன. அதில் தேவையான அளவிற்குக் குறைவாக காரின் டயரில் பிரஷர் குறைந்தால் அது டிரைவர் முன்பு உள்ள டேஷ் போர்டில் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய வைக்கும் இதை வைத்து டிரைவர் உடனடியாக சுதாரித்து தன் காரை ஓரங்கட்டவோ அல்லது உடனடியாக காற்றை நிரப்பவோ முடியும்.
இதனால் சாலையில் செல்லும் போது ஏதாவது டயரில் பஞ்சர் ஏற்பட்டாலோ அல்லது ஆணி, போன்ற விஷயங்கள் குத்திவிட்டாலோ டிரைவருக்கு உடனடியாக அது பற்றித் தெரியும் அவர்கள் சுதாரித்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த சிஸ்டத்தில் சிலருக்கு ஒரு பிரச்சனை இருக்கும். பலர் இந்த பிரச்சனையைக் கவனித்திருக்க மட்டார்கள். சிலர் கவனித்திருப்பார்கள்.
குளிர் காலங்களில் அதிகாலையில் காரை ஸ்டார்ட் செய்யும் போது இந்த எச்சரிக்கை விளக்கு எரியும். இது காரின் அனைத்து டயர்களிலும் காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கும். ஆனால் ஒரு வேலை நீங்கள் காலையில் காரை ஸ்டார்ட் செய்யாமல் மதியம் ஸ்டார்ட்செய்யதால் அப்படியான பிரச்சனை இருப்பது காட்டாது. இது குளிர் காலங்களில் மட்டுமே நடக்கும். மற்ற காலங்களில் இப்படியான விஷயம் நடக்காது.
இதை நோட் செய்த பலர் இதை முதலில் காரின் டயர் பிரஷர் மானிட்டரில் சிஸ்டத்தில் உள்ள பிரச்சனை என்றே கருதினர். ஆனால் இது அப்படியல்ல இது ஒரு அறிவியல் விஷயம் தான். நாம் எல்லோரும் பள்ளியில் குளிர் காலத்தில் காற்று சுருங்கும் வெயில் காலத்தில் காற்று விரிவடையும் என்று படித்திருப்போம். அப்படியான ஒரு விஷயம் தான் காரின் டயரிலும் நடக்கிறது.
கார் டயரில் உள்ள காற்று குளிர் காலத்தில் சுருங்கும், வெயில் காலத்தில் விரிவடையும். இப்படியாகச் சுருங்கும் போது காரின் டயரில் உள்ள அழுத்தம் குறையும். ஆனால் குளிர் குறையக் குறைய காற்று விரிவடைந்து மீண்டும் அழுத்தம் பெற்றுவிடும். இதன் காரணமாகத் தான் காலை நேரத்தில் இந்த டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் டயர் பிரஷர் குறைந்ததாக காட்டும் இதுவே மதிய நேரத்தில் டயர் பிரஷர் சரியாக இருப்பதாகக் காட்டும்.
களிர் காலத்தில் 10 டிகிரி வரை வெப்பம் குறையும் போது 1-2 பிஎஸ்ஐ அளவு காற்றின் அழுத்தம் குறையும். சரியாகப் பரிந்துரைக்கப்பட்ட காற்றின் அளவை டயரில் வைத்திருந்தால் அவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படும். இதனால் குளிர் காலத்தில் நீங்கள் தினமும் அதிகாலை நேரத்தில் காரை பயன்படுத்துபவராக இருந்தால் காரின் டயரில் பரிந்துரைக்கப்பட்டதை விட ஒரு பாயிண்ட் அதிகமாக வைத்துக்கொள்வது சிறந்தது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் செல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








